இயற்கை வழி வேளாண்மை எப்போது பரவலாக்கப்படும்

Agriwiki.in- Learn Share Collaborate

3நாள் ஒருங்கிணைந்த இயற்கை வேளாண்மை,
மானாவரி வேளாண்மை, தற்சார்பு வாழ்வியல்,
விதைப்பு முதல் சந்தைப்படுத்துதல் வரை களப்பயிற்சி :
**********************************************************************
நம்மாழ்வார் ஐயாவிடம்
வானகத்தில் பயிற்சியின் போது கேட்ட கேள்வி.

ஐயா இயற்கை வழி வேளாண்மை எப்போது பரவலாக்கப்படும் ?

அதற்கு ஐயா, விவசாயம் என்பது பகுதிசார்ந்தது. இடத்திற்கு இடம், சூழலுக்கு சூழல் மாறுபடும், ஆகையால் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு மாதிரிப் பண்ணை இருக்கனும். அது அப்பகுதி சார்ந்த விதைகளையும், இயற்கை வேளாண்மை முறைகளையும் கையில் எடுத்து, எல்லாவற்றையும் பகுத்தறிந்து சோதனை செய்யும் ஆய்வகமாகவும் இருக்க வேண்டும்.

அதில் பலதரப்பட்ட அனுபவங்களைக் கற்றுக் கொண்ட இயற்கை விவசாயிகளை பயிற்சியாளராக பயன்படுத்தி, அவர்கள் கற்ற அனுபவங்களை மற்றவர்களுக்கு கைமாற்றிக் கொடுக்க வேண்டும். அப்போது பரவாலாக்கிடலாம் ஐயா என்றார்.

அதன் பிறகு வானகம் மூலம் நம்மாழ்வார் ஐயா அவர்களை சிவகாசிக்கு அழைத்து வந்து இயற்கை விவசாயப் பயிற்சிகள் நடத்தி ஐயாவின் பணிகளை எங்கள் கையில் கைமாற்றிக் கொண்டோம்.

ஐயாவின் வருகைக்குப் பின் வானகத்தின் முன்னோடிகளின் வழிகாட்டலில் எங்கள் விருதுநகர் மாவட்டத்தில் தேன்கனி இயற்கை விவசாயக் கூட்டமைப்பு ஒன்றை உருவாக்கி, மற்ற இயற்கை அமைப்புகளோடும் ஒன்றிணைந்து 7வருடமாக களப் பயிற்சிகள் நடத்தி வருகிறோம்.

அதன் விளைவாக இன்று எங்கள் பகுதியில் ஒவ்வொரு 10கி.மீட்டர் தொலைவுக்கும் இயற்கை வேளாண்மையை கற்றுக் கொள்ளக்கூடிய அனுபவ

• மழையை நம்பிய வானம்பார்த்த மானாவரி விவசாயக்காடும்,
• ஆற்றுப்பாசனம் சார்ந்த நெல்வயல்களும்,
• பல்வேறு மரக்கூட்டங்களை உள்ளடக்கிய தோட்டமும்,
• மழைநீர் முழுவதையும் அறுவடை செய்யும் பண்ணைகளும்,
• வாழை, காய்கறிகள், கீரைகளை உற்பத்தி செய்யும் குறு பண்ணைகளும்,
• நாட்டு விதைகள் பாதுகாத்தல், பரவாக்கம் செய்தலும்,
• சந்தைப்படுத்துதலில் முன்மாதிரி “ தேன்கனி உழவர் வாரச் சந்தையும்”
• வீட்டுத் தோட்டம், மாடித் தோட்டமும்
• மரபு மருத்துவமும், இயற்கை உணவுத் தயாரிப்பில் கைதேர்ந்தவர்களும்,
• குழந்தைகளுக்கான வாழ்வியல் கல்வி முறைகளிலும், தற்சார்பு வாழ்வியலில் கைதேர்ந்தவர்களுன் என எங்கள் பகுதி இயற்கை களச்செயல்பாட்டாளர்களின் ஒத்துழைப்பால் நம்மாழ்வார் ஐயா விரும்பி செயல்பாடுகள் நீண்டு கொண்டே செல்கிறது.

மேலும் பருவகால மாற்றத்தின் விளைவால் ஒருபுறம் தண்ணீர் பற்றாக்குறையும், கடும் வெப்பமும், கடும் வறட்சியும், வெள்ளமும், சுறாவளியும் விவசாயத்தைப் பாதித்து வரும் இந்நிலையை நம்மாழ்வார் ஐயா அவர்கள் முன்னேரே கணித்துக் கூறியிருந்தவை யாதெனில்,

நாளைய தமிழக விவசாயத்தை வழி நடத்துவதில் மானாவாரி விவசாயிகளின் பங்கே பெரிதாக இருக்கும். பருவ நிலை மாற்றம் தமிழகத்தின் பெரும் பகுதி நிலங்களை மானாவாரியாகத் தள்ளியிருக்கும்.

மழையற்ற பகுதி அதிகமாகியிருக்கும். இந்த நிலையில் இன்றைய பாசனப் பகுதி விவசாயிகள் பாடம் கற்க வேண்டிய இடமாக, மானாவாரி நிலப்பகுதிகள் இருக்கும்.

மேலும் வழக்கமான ஒற்றைப்பயிர் விவசாய முறையை மாற்றிய விவசாயிகளின் பண்ணைகளும், மரங்களுடன் கூடிய திட்டமிட்ட ஒருங்கிணைந்த விவசாயமாக மாற்றிய பண்ணைகளுமே, ஏனைய விவசாயிகளின் கல்லூரியாக இருக்கும் என்பதில் துளியும் மாற்றமில்லை என்றார்.

இதை நன்கு உணர்ந்து ” தேன்கனி இயற்கை விவசாயக் கூட்டமைப்பானது ” கைதேர்ந்த அனுபவங்களை கற்ற இயற்கை விவசாயிகளை பயிற்சியாளர்களாக்கி, தொடர்ந்து அனைவருக்கும் பயிற்சிகள் அளித்து வருகிறோம்.

இந்நிலையில் அறுவடைக்குத் தயார்நிலையிலும், பல்வேறு இயற்கை வாழ்வியல் அனுபவங்களை கற்றுக் கொடுக்கத் தயாரக உள்ள ஒருங்கிணைந்த பண்ணைகளையும் தேர்வு செய்து மறுபடியும் வழக்கம்போல், மூன்று நாட்கள் பயிற்சிகளை நடத்த திட்டமிட்டுள்ளோம். அதன்படி

களப்பயிற்சி நாள் :
மே மாதம் 10-5-2019
வெள்ளிக்கிழமை காலை 9மணிக்குத் தொடங்கி
12-5-2019 ஞாயிறு மாலை 5மணி வரை

இப்பயிற்சியில்,
• தற்சார்பு வேளாண்மை
• கால்காணி ஓர் அறிமுகம்
• நிரந்தர வேளாண்மை, காடு வளர்ப்பு,கால்நடைகள் வளர்ப்பு
• விரிவான வீட்டுத் தோட்டம், மாடித்தோட்டம்
( வீட்டு கழிவுகளைப் பயன்படுத்தி தயாரித்தல் )
• மானாவாரி பயிர் சாகுபடி
• இயற்கை உரங்கள், இடுபொருட்கள் தயாரிப்பு
• இயற்கை உணவு தயாரித்தல்
• உழவர் வாரச் சந்தையும், சந்தைப்படுத்துதலும் அறிமுகம்
• மேட்டுப்பாத்தி, மூடாக்கு அமைத்தல் களப் பயிற்சி
• நாட்டுவிதைகள் பாதுகாப்பு, பரவலாக்கம்..
• கலப்புப் பயிர் சாகுபடி, பண்ணை வடிவமைத்தல் மற்றும் பல அனுபவப் பகிர்வுகள்

பயிற்சி நடைபெறும் இடம் :
மெடோஸ் மேல்நிலைப் பள்ளி, காளையார் குறிச்சி கிராமம்,
M.புதுப்பட்டி அருகில், சிவகாசி,
விருதுநகர் மாவட்டம்.

பயிற்சி நன்கொடை : ரூ. 2400/-
( தங்குமிடம், உணவுகள் வழங்கப்படும். )

பயிற்சி கட்டணம் செலுத்த வேண்டிய வங்கி எண் :
Current A/c Name : Thenkani Natural Way Products Store
Bank Name : Indian Overseas Bank, Sivakasi.
A/C No : 349002000000182
IFSC Code : IOBA0003490

முன்பதிவு அவசியம்.

முன்பதிவிற்கு :
94435 75431, 96554 37242, 9787648002
25நபர்களுக்கு மட்டுமே அனுமதி…

பயிற்சியின் இறுதியில் பங்கேற்புச் சான்றிதழ் வழங்கப்படும்.

கடந்த பயிற்சியின் புகைப்படங்கள் பார்க்க
https://www.facebook.com/karuppasamyvanagam/posts/2257854630933589

www.thenkanivalviyalmaiyam.blogspot.in
Facebook/thenkanivalviyalmaiyam/