எங்கும் முளைக்கும் நுணாமரம்

எங்கும் முளைக்கும் நுணாமரம்
Agriwiki.in- Learn Share Collaborate

மாற்று மரம் தயார்!

சீமைக் கருவேலமரம் போல வறட்சியைத் தாங்கி, எங்கும் முளைக்கும் நுணாமரம்!!

சீமைக் கருவேல மரங்களுக்கு இணையாக வறட்சியைத்தாங்கி வளரக்கூடியதும், பல நன்மைகளைக் கொடுக்கக்கூடிய மூலிகைத்
தாவரமுமான
” மஞ்சநெத்தி” எனப்படும் நுணா மரத்தை அடுப்பெரிக்க பரிந்துரை செய்வதில் மகிழ்கிறேன்.

எனக்கு தெரிந்து இம்மரத்தை மனிதர்கள் விதையிட்டு வளர்த்ததில்லை. தானாக முளைத்து பசுமையாக இருக்கக்கூடியது.

இம்மரத்தின் இலை, பூ, காய், பழம், மரப்பட்டை அனைத்தும் சிறந்த மருந்தாகும்.
மாவேள் நிறுவனம் விற்கும் அகத்தியர் மூட்டுவலி மருந்தின் இரகசியம் இம்மரத்தின் பாகங்கள்தான்.

இன்னும் ஒன்றை கூறினால் ஆச்சரியப்படுவீர்கள். ஒருநேரத்தில் படுவிற்பனையில் இருந்த “நோணி” எனும் மருத்துவ குடிப்பு இம்மரத்தின் பழச்சாறுதான். ஆனால் அவை வணிகத்திற்காக செயற்கை முறையில் வளர்த்து, இராசயனம்மூலம் கெடாமல் பாதுகாக்கபடுவதால் மட்டுமே நோணி மருந்தினை பரிந்துரை செய்யமுடியவில்லை.

* இம்மரத்தினைப் பயன்படுத்தி அடுப்பெரித்தால் வெளிப்படும் புகை உங்கள் இல்லத்தில் கிருமிநாசினியாக செயல்படும்.

* அதன் இலைகளை ஆடுகள் உண்டால் நோயின்றி வாழும்.

*காற்றைக் குளிர்வித்து மழைவளத்தை பெருக்கும்.

*பறவைகள் கூடுகட்டி நிம்மதியாக வாழும்.

* பழங்கள் பறவைகள், மனிதர்கள் விரும்பி உண்ணும் சுவையுடையது. மருத்துவக் குணம்வாய்ந்தது.

* இலைகளை தண்ணீரில் கொதிக்கவைத்து மூட்டு, முழங்காலில் ஒத்தனம் கொடுத்தால் வலி சரியாகும்.

நுணா மரத்தை பாதுகாப்போம், நடுவோம், விதையிடுவோம்.

ஏனாதி பூங்கதிர்வேல்