ஐந்தடுக்கு மாதிரி-விதை தேர்ந்தெடுத்தல்

ஐந்தடுக்கு மாதிரி விதை தேர்ந்தெடுத்தல்
Agriwiki.in- Learn Share Collaborate

ஐந்தடுக்கு மாதிரி விதை தேர்ந்தெடுத்தல்:
ஆயிரமாயிரம்  ஆண்டுகளுக்குப் பின்னர் சில தாவரங்களை இயற்கை தேர்ந்தேடுக்கிறது, இது இயற்கையான மரபணு பிறழ்வு அல்லது சடுதி மாற்றம் (Genetic Mutation) மூலமாக நடைபெறுகிறது.

இந்த மாற்றங்கள் மூலம் புவியில் ஏற்படும் போராட்டங்களை சமாளித்து உயிர் வாழும் திறனைப் பெறுகின்றன. வறட்சி, குறைவானமழை, அதிக மழை, வெள்ளம், பனிப்புயல், சூறாவளி, பூச்சித் தாக்குதல், நோய் தாக்குதல், என போன்ற பல இயற்கை இடம்பாடுகளையும் நோய்த் தாக்குதலையும் தாங்கி வளர்கின்றன.

இப்படித் தேர்வு செய்யப்பட்ட தாவரங்கள் பருவநிலை மாற்றைத்தையும் தாங்கும் விதமாக உள்ளன. ஏனென்றல் இயற்கை பல்லுயிர்களும் பெருக வேண்டும் என்றும் இனங்கள் அழிவதைத் தடுக்க வேண்டும் என்றும் விரும்புகிறது, இத்தகையத் தாவரங்களை நாம் கண்டறிய வேண்டும்.

தென்னையிலும் பாக்கிலும் சிறப்பான மரங்களைத் தேர்ந்தெடுக்க

தென்னையிலும் பாக்கிலும் இப்படிப்பட்ட சிறப்பான மரங்களைத் தேர்ந்தெடுக்க நாம் 30 ஆண்டுகள் வயதான தென்னை பாக்கு மரங்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும். ஏனென்றால் இதுதான் மரத்தில் சரியான இனபெருக்க பருவமாகும்.

ஒவ்வொரு வாரமும் நாம் தேந்தெடுக்கும் தோட்டத்தை கவனிக்க வேண்டும். அரை வட்டவடிவமான அகண்ட குடையுள்ள, இலைகள் பசுமையாக உள்ள, பருமனான தண்டு உள்ள குணங்களைக் கொண்ட மரத்தில்,அதிக குலைகளும் காய்களும் இருக்க வேண்டும், 7 முதல 10 குலைகள் இருக்க வேண்டும்

ஒவ்வொரு குலையிலும் அதிக எண்ணிக்கையில் தரமான காய்கள் இருக்க வேண்டும். காய்கள் முதிரும்முன் கீழே விழக்கூடாது, பூச்சித் தாக்குதல், நோய் தாக்குதல இருக்கக்கூடாது, இந்த குணங்களையுடைய மரங்களை தேர்ந்தெடுக்க வேண்டும்.

அந்த மரங்களில் எண் 1, எண் 2 என குறித்து அடையாளம் வைக்கவேண்டும். இம்மரங்களின் குலைகளை வெட்டாதீர்கள் (வெட்டும் போது 35 சதம் முதிர்ந்த காய்ககளும் 65 சதம் முதிர்ச்சி அடையாத காய்கள் கிடைக்கிறது.) மரத்திலேயே காய்களை முதிர்ச்சி அடையவிடவும், அவ்விதைகள் தானாகவே கீழே விழும், இவையே சிறந்த விதைகள் மற்றும் காய்கள் ஆகும்.

இந்த முதிர்ச்சி அடைந்த காய்களை சேகரித்து வையுங்கள், அந்த காய்களில் இருந்த தரமான காய்களை மீணடும் தேர்வு செய்து பீஜாமிர்தம் கொண்டு விதை நேர்த்தி செய்து நாற்றங்காலில் ஊன்ற வேண்டும்.

மிளகுக் கொடி தேர்ந்தெடுத்தல்:

மிளகுக் கொடியைத் தேர்வு செய்யும் போதும் அதிகபட்ச விளைச்சல், தரமான காய்கள் மற்றும் பூச்சிநோய் தாக்குதல் இல்லாத மிளகுக் கொடியைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.

மாங்கன்று

நடவுக்குத் தேவையான ஒட்டு மாங்கன்றுகளை வெளியில் இருந்து வாங்கவேண்டாம். வெளியில் இருந்து வாங்கும் போது அதில் ஆணிவேர் வேட்டப்பட்டிருக்கலாம்.
மாமரங்களின் வேர்கள் தண்ணீர் தேடி ஆமான மண்ணிற்கும் செல்லக்கூடியது. அது நிலத்தடி நீர் வரை வளர முயல்கிறது, அதற்கு பின்புதான் நிழல் குடை வளர்கிறது. ஆணிவேரின் நுணியில் (Root caps) விஷேமான செல்கள் உள்ளது. இதுவேர் நுணி முழுவதும் மூடியுள்ளது. இதை வேர் மூடிகள் என்கிறோம், வேர் நுணிவளர்ச்சி பாறைகளால் தடுக்கப்படும் போது இந்த நுணிகளில் இருந்த அமிலங்கள் சுரக்கப்பட்டு பாறை கரைக்கப்படுகிறது, இதனால் வேர் இன்னும் ஆழமான இடத்திற்கு செல்கிறது. ஆணிவேர் நிலத்தடி நீரை அடையும் போது மரத்திற்கு இயற்கையாகவே தண்ணீர் கிடைக்கிறது, வறட்சியிலும் மரம் காய்வதில்லை.

ஆணிவேர் தான் மரத்திற்கு உறுதித் தன்மையையும் நிலைப்புத் தன்மையையும் கொடுக்கிறது, சூறாவளியிலும் மரங்கள் விழாது. ஆனால் வெளியில் இருந்து மாங்கன்று வாங்கும் போது நாற்றங்காலில் இருந்து கன்றுகள் பிடுங்கப்பட்டு பாலிதின் பையில் நடுகிறார்கள், இதனால் அறுபடுகிறது. அதில் இரண்டாம் நிலை வேர்கள் மட்டுமே இருக்கின்றன. அந்த வேர்கள் மண் பரப்பின் இணையாக மட்டுமே வளரக்கூடியவை, இதனால் இம்மரங்கள் சூறாவளியில் விழுகின்றன. வறட்சியில் காய்கின்றன.

ஒட்டு மாங்கன்று

வேர்பகுதிக்கான மரங்களைத் தேர்ந்தெடுத்தல்
குறைவான வயதில் அதிக உற்பத்தி தரும், ஆண்டுதோறும் பழங்கள் தரும், தண்டு பருமனான, பூச்சி நோய் தாக்குதல் இல்லாத தாய் மரத்தை தேர்வு செய்ய வேண்டும். நேரடியாக மாந்தோப்பிற்கு சென்று தாய் மரத்தை தேர்ந்தெடுக்க வேண்டும்.

அல்லது மானாவரி நிலத்தில் வெறும் மழைநீரில் மட்டும் வாழும் மரங்களில் இருந்து விதைகள் எடுக்க வேண்டும், இந்த மரங்கள் இயற்கை பேரிடர்களை தாங்கக் கூடியவை இவை ஒட்டு மாங்கன்றின் வேர் பகுதிக்கு உகந்தவையாகும்.

பழுத்த மாம்பழத்தில் இருந்து மா விதைகளை எடுத்துக்கொள்ளவும், மாமர மாதிரியில் வட்டவடிவ குறியீடு இருக்கும் இடத்தில் விதையை ஊண்ற வேண்டும். மண்ணில் நேரடியாக ஊண்ற வேண்டும், பழத்தில் இருந்து விதைகளை எடுத்தபின் உடனே விதைக்க வேண்டும், தாமதமானல் விதைகளில முளைப்புத்திறன் குறையும். பீஜாமிர்தம் கொண்டு விதைநேர்த்தி செய்தபின் விதைகளை ஊண்றவும்.

பல்லுயிர்களே இயற்கையின் அடித்தளம், இரண்டு மனிதர்கள் ஒன்று போல இருப்பதில்லை, இரட்டையர்கள் கூட ஒன்றுபோல் இல்லை, ஒரே பெற்றோருக்கு 4 பிள்ளைகள் இருந்தாலும் ஒவ்வொருவரும் வெவ்வேறு குணங்களுடன் இருக்கிறார்கள்.

இதே போல் ஒருமரத்தில் நூறு விதைகள் எடுத்து வளர்த்தாலும் ஒவ்வொரு மரமும் வெறுபடும், இதுவே பல்லுயிர் தன்மை. இந்த குறையை தவிர்க்க் நாம் ஒட்டு ரகங்களைப் பயன்படுத்துகிறோம். மாமாதிரியில் நடவு செய்த வேர்பகுதிக்கான (Root stock) மரம் எல்லா இயற்கை சீற்றங்களையும் தாங்கும். இந்த மரம் பென்சில் கனத்தில் வளர்ந்தபின் விரும்பத்தக்க குணங்களையுடைய மல்கோவா, பங்கனபள்ளி (Stem stock) போன்றவற்றில் கிளைகளை எடுத்து ஒட்டு கட்டவேண்டும். இதனால் பலமான மரத்தில் ருசியான பழங்கள் கிடைக்கும்.

இது சாத்தியமில்லை என்றால் நாற்று விற்பனை செய்பவரின் பண்ணைக்கு சென்று, அவரது தாய் மரம் உங்களுக்கு விருப்பானதாக இருந்தால் கூடுதலாக பணம் கொடுத்து நாற்றுகளின் வேர்களை வெட்டாமல் பெரிய பைகளை பயன்படுத்தி நாற்று உற்பத்தி செய்து நாற்றுகளை வாங்க வேண்டும்.

தோட்டத்திற்கு இடம் தேர்வு செய்வது இடம் தேர்ந்தெடுப்பது முக்கியம். நீங்கள் எந்த மண் உள்ள நிலத்தையும் தேர்ந்தெடுக்கலாம், ஆனால் வடிகால் வசதி இல்லாத இல்லாத நிலத்தைத் தவிர்க்கவும்.

ஆரஞ்சு

ஆரஞ்சு நாற்றுகளை முடிந்த அளவு வெளியில் இருந்து வாங்குவதைத் தவிர்க்கவும். கற்கள் நிறைந்த மண்ணாக இருந்தால் ஜம்பேரி ரகத்தை தேர்ந்தெடுக்க வேண்டும், கரிசல் மண்ணில் ரங்கபூர் லைம் ரகத்தை தேர்ந்தடுக்கவும்.

உழவு

மண்ணை உழவு செய்வதற்கு முன் பழைய கழிவுகளை சேகரித்து தனியாக வைக்கபும் இது மூடாக்குக்கு பயன்படும். அல்லது கழிவுகளோடு மண்ணை ரோட்டவேட்டர் கொண்டு உழவு செய்யவும்.

மழைக்கு முன்பு வரும் தூரலில் அல்லது பாசன நீர் கொடுக்கும் போது களைகளின் விதைகளை முளைக்க விடுங்கள் களைகள் முளைத்துவரும் போது மீண்டும் உழவு செய்யுங்கள் இந்த களைகள் கட்டுப்படுத்தபப்டும். இந்த முறையில் 60சேதம் களைகள் கட்டுப்படுத்தப்படும்.

கடைசி உழவுக்கு முன் ஏக்கருக்கு 400 கிலோ கனஜீவாமிர்தத்தை சமமாகத் தூவவும், இது கடைசி உழவில் மண்ணுடன் கலந்துவிடும். தென்னை மாதிரிக்கு 4.5 x 4.5 அடி வரும்படியும், மா மாதிரிக்கு 3 x 3 அடி வரும்படியும் குறுக்கும் நெடுக்குமாக கோடு போட்டு கன்றுகளையும் நாற்றுக்களையும் நடவு செய்ய வேண்டும்.

மரக்கன்று நடவு முறை

1.5 x 1.5 அடிக்கு குழி எடுக்கவும். மண்ணை எடுத்து குழிக்கு அருகில் வைத்து, அந்த மண்ணையும் குழியையும் காயவைக்கவும். தோண்டி எடுத்த மண் அளவிற்கு 10 சதவீதம் கனஜீவாமிர்தம் சேர்த்து கலக்கவும். பூவாளி கொண்டு 500 மி.லி. ஜீவாமிர்தத்தை மண்ணில் தெளிக்கவும், காய்ந்த இலைகளை அந்த மண்ணில் நொறுக்கி போட்டு அவற்றை நன்றாக கலக்கி குவியலாக குழிக்கு அருகில் வைக்கவும்.

ஜீவாமிர்தம் தெளித்து 48 மணிநேரம் வைக்கவும், 48 மணிநேரத்தில் மண் தயாராகிவிடும். கன்று நடும் போது பாலித்தின் பையை நீக்கி, இடது கையால் அந்த கன்றை குழியின் நடுவில் பிடித்துக்கொண்டு வலது கையால் பீஜாமிர்தம் எடுத்து வேர்களின் மீது ஊற்றவும். இச்செடியை குழியில் வைத்து தாயார் செய்த மண்ணை குழியில் இட்டு நிறப்பவும். மண்ணில் காற்று இல்லாதவாறு அழுத்தி விடவும். அதனால் செடியின் அருகில் அதிக தண்ணீர் தேங்காதவாறு மண்ணை சரிவாக அணைக்கவும்.

கன்றைச் சுற்றி இருக்கும் மண்ணில் ஜீவாமிர்தம் தெளித்திடுங்கள். இந்த மண்ணை மூடாக்கு கொண்டு மூடிடுங்கள் இதனால் வேர்கள் மற்றும் மண் வேகமான காற்று, வேகமாக வரும் மழைத் துளிகள், வெப்பக் காற்று, குளிர்ந்த காற்று, மற்றும் பறவைகள், பூச்சிகள், விலங்களிட மிருந்து பாதுகாக்கப்படும்.

நாம் இடும் மூடாக்கு நுண்சூழலை வேர்பகுதி அருகில் உருவாக்கும், அதனால் நுண்ணுயிர்களும், நாட்டு மண்புழுக்களும் வேகமாக செயல்படத் துவங்கும். நாம் மண்ணின்மேல் மூடாக்கு போடவிலலை என்றால் மழைத்துளிகள் நேராக மண்ணில் விழுந்து மண் அரிக்கப்படும், வேர்கள் வெளியில் வந்துவிடும், மண் தெரித்து விழுந்து இலையிலும் படியும், இதானல் ஒளிச்சேர்க்கையும் பாதிக்கும், நாம் மூடாக்கு போடவில்லை என்றால் சூடான நீராவி மண்ணில் இருந்து வெளிவரும் அது நாற்றின் கீழ் உள்ள இலைகளை சேதப்படுத்தும் எனவே மூடாக்கு மிகவும் பாதுகாப்பானது.

மா விதையாக (for root stock) ஊண்றும் போது குழி முழுவதும் தயார் செய்த மண்ணை நிரப்பவும், மேல் மட்டத்தில் 3 அங்குலம் கிழே விதையை ஊண்ற வேண்டும். இரண்டு மா விதைகளை 9 அங்குல இடைவெளியில் நடவும். இரண்டு மரங்கள் வளர்ந்தாலும் பரவாயில்லை. இரண்டு மரத்தை ஒட்டு கட்டவும் செய்யலாம், அல்லது பலமான ஒரு கன்றை ஒட்டக்கு பயன்படுத்தலாம்.

குழியைச் சுற்றி மூடாக்கு போடவும், விதைகள் முளைக்கத் தொடங்கும்போது மூடாக்கை நீக்கி நாற்றுகள் வெளிவர வசதி செய்து கொடுங்கள். அந்த முளை மேலே வந்த பிறகு மூடாக்கு கொண்டு மூடிடுங்கள். இரண்டு கன்றுகளும் வளரட்டும் அடுத்த ஆண்டு அவற்றை ஒட்டுகட்டிகக் கொள்ளலாம் இதனால் வேர் பகுதி அதிகமாகக் கிடைக்கும்.

மாதுளை

மாதுளைக் கிளைகளை வெட்டி எடுத்து நடவு செய்வது மிகவும் சுலபம். அடிப்படையில் மாதுளை இந்தியாவிற்கு வந்தது ஈரான் போன்ற வறண்ட நாடுகளில் இருந்து வந்தது. இதனால் இந்த மரம் தண்ணீர் பற்றாக்குறையை தாங்கி வளரும்.

சீதாப்பழம்

செப்டம்பர் அக்டோபர் மாதங்களில் காட்டிற்கு சென்றோ அல்லது கடைகளுக்குச் சென்றோ சீதாப்பழ விதைகளுக்கான பழங்களை தேரந்தெடுத்துக் கொள்ளலாம். பெரிய, தரமான பழங்களுடன், நோய் பூச்சித் தாக்குதல் இல்லாத மரத்தைத் தேர்ந்தெடுத்து நன்கு முற்றி பழங்களை எடுத்துக்கொள்ள வேண்டும். ஒரு சீதாப்பழத்தில் 36 முதல் 48 விதைகள் உள்ளது. 3 மாதங்கள் செயலற்ற (Dormancy) நிலையில் இருக்கும். மூன்று வருடங்கள் வரை முளைப்புத் திறனுடன் இருக்கும்.

வாழை

வாழைக்கு விதைக்கிழங்குளைத் தேர்ந்தெடுக்கும் போது பருமனான தண்டு, பளபளப்பான தண்டு, பெரிய மற்றும் அகலமான இலைகள், பச்சையான இலைகள், பெரிய குலைகள், பூச்சி மற்றும் நோய் தாங்கும் திறன். நுனிக்கொத்து நோய், மற்றும் இலைக் கருகல் நோய் இல்லாத மரங்களில் இருந்து விதை கிழங்கு எடுக்க வேண்டும். வேர்கிழங்குகள் தேங்காயை போல பெரியதாக இருக்க வேண்டும், பளபளப்பாக இருக்க வேண்டும், 400 முதல் 800 கிராம் எடை இருக்க வேண்டும், கணுக்கள் திறண்டு இருக்க வேண்டும். இந்த குணங்களை கொண்ட கிழங்குகளைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.

எக்காரணம் கொண்டும் திசுவளர்ப்பு கன்றுகளை வாங்கவேண்டாம். இவற்றை இரண்டாம் தலைமுறைக்கு பயன்படுத்த முடியாது, ஏனென்றால் இரண்டாம் தலைமுறையில் மறைந்துள்ள மோசமான குணங்கள் வெளிப்படலாம்.

முருங்கை, அகத்தி

முருங்கையை மூன்று விதங்களில் நடலாம், விதைகள், நாற்று அல்லது போத்துக்கள். அகத்தி ஒரு சிறந்த சார்பு மரமாகம் இது மிளகு, வெற்றிலை திராட்சை போன்ற வளர்வதற்கு சார்பு மரமாக உள்ளது. மலர் மருத்துவ குணம் கொண்டது, மலரையும் கீரையையும் உணவாகப் பயன்படுத்தலாம். ஸ்ட்ரா பெர்ரி கொடிக்கு நிழல் வேண்டும் நகரும் நிழல் (Dancing shadow) வேண்டும் 5000 முதல் 7000 மெழுவர்த்தி வெப்பம் சூரிய ஒளி தேவைப்படுகிறது. இது மண்ணில் படர்ந்து வளரும் போது ஒவ்வொரு கணுவில் இருந்தும் வேர் விட்டு வளரும், இதனால் இதன் தண்டுகள் மூலம் இனப்பெருக்க்ம் செய்யலாம். தேவையெனில் மஹாரஷ்ட்ராவில் இருந்து வாங்கலாம்.

மழைக்காலத்தில் நடவு செய்தால் அக்டோபர் மாத்தில் படர்ந்திருக்கும் அதை வேருடன் பிடுங்கி வடிகாலில் இருபுறமும் நடவு செய்ய வேண்டும். பீஜாமிர்தம் விதை நேர்த்தி செய்து ஒரு வேரும், இரண்டு கணுக்களும் இருக்கும்படி நடவேண்டும். ஐந்தடுக்கு மாதிரி முறையில் தாவரங்கள் நடவு செய்தபின் கால அட்டவணைப்படி ஜீவாமிர்தம் கொடுக்கவும், ஜீவாமிர்த்ம் தெளிக்கவும், கூறப்பட்ட கால அளவுகள் பூச்சி விரடிகள் தெளிக்கவும்.

ஒரு ஏக்கருக்கு 6 லட்சம் வருமானம்

நமது நோக்கம் ஒரு ஏக்கருக்கு 6 லட்சம் வருமானம்  பெறவேண்டும்.

முதல் மூன்று மாதங்களில் கொள்ளு, பச்சைப்பயறு போன்றவை சுற்றியுள்ள தாவரங்களுக்கும் மண்ணிற்கும் நைட்ரஜனைக் கொடுக்கும்.

பிறகு கிளைரிசிடியா மற்றும் முருங்கையும நைட்ரஜனைக் கொடுக்கும்.

துலுக்க சாமந்தி நன்மை செய்யும் பூச்சிகளை ஈரக்கும், தேனீக்களை ஈர்க்கும் இதன் மூலம் மகரந்த சேர்க்கைக்கு உதவும்.

கரீப் பருவம் (மழைகாலம்) முடிந்தபின் பயறுகளை அறுவடை செய்துவிட்டு வேர்களையும் தண்டுகளையும் அப்படியே விட்டுவிடுங்கள், அது சிறந்த மூடாக்காகும். அடுத்தப் பருவத்திற்கான பயறு வகைகளை ஊன்றுங்கள். தொடர்ந்த பருவத்திற்கேற்ப பயறுவகைகளை விதைத்துக் கொண்டே இருங்கள்.

மூன்று மாதங்களில் பீன்ஸ் மற்றும் கொடிகளில் இருந்த வருமானம் கிடைக்கும், கீரைகள் மூலம் ஒரு மாத்தில் இருந்து மூன்று மாதம் வரை வருமானம்  வரும், (பாலக்கீரை, கொத்துமல்லி) சாமந்தி 4வது மாதத்திலும், மிளகாய் 6 வது மாதத்திலும், முருங்கை 9 வது மாதத்திலும், வாழை 10 வது மாதத்திலும் மாதத்திலும் தொடர்ச்சியாக வருமானம் தரும்.

3வது ஆண்டில் மிளகு வருமானம் தரும். பட்டை, பாக்கு 5வது வருடத்தில் வருமானம் தரும். விவசாயிகளுக்கு பணம் தொடர்ந்து வரும்.

(ஐந்தடுக்கு மாதிரியில் பல செயல்முறைகள் உள்ளதால் புதிய விவசாயிகள் அனுபவ விவசாயிகளை கேட்டறிந்து பல்வேறு ஆலோசனைகளை பெற்ற பின்பு செய்ய வேண்டும்)

சுபாஷ் பாலேக்கர் இயற்கை விவசாயப் பயிற்சி
ஈஷா விவசாய இயக்கம் – 8300093777
Start 08.2.2019 Afternoon

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.