கத்திரியில் தண்டு துளைப்பான்

கத்தரியில் புழுக்களற்ற காய்கள் brinjal-eggplant-agriwiki
Agriwiki.in- Learn Share Collaborate
கத்திரியில் தண்டு துளைப்பான் தடுக்க வழிமுறை

 

🍆கத்திரியில் காய் மற்றும் தண்டு துளைப்பான் நோய்களை இனக்கவர்ச்சி பொறிகள் வைத்து கட்டுப்படுத்துவது சரியான முறையாகும்

🍆கத்திரி சாகுபடி செய்யும் பகுதியில தண்டு துளைப்பான் மிகப்பெரும் சேதத்தை உண்டாக்கும் பூச்சியாக உள்ளது.

🍆புழு செடியின் நுனிக்குருத்து உள்ளே சென்று செடியின் மற்ற பாகங்களுக்கு செல்லும் தண்ணீர் கடத்தும் திசுக்களையும், காயையும் சேதப்படுத்தியும் விடுகிறது.அதனால், விவசாயிகள் மகசூல் இழப்பு பெரிய அளவில் ஏற்படுகிறது.

🍆அதைக் கட்டுப்படுத்த விவசாயிகள் அதிகமான அளவில் ஊடுருவிப் பாயும் பயிர் பாதுகாப்பு மருந்துகளை தெளித்து வருகின்றனர்.

🍆அதனால் கத்திரிக்காய்களில் எஞ்சிய நஞ்சு மனிதர்களுக்கு தீங்கை ஏற்படுத்துகிறது.மண் வளம் கெடுவதுடன், சுற்றுச்சூழல் மாசு ஏற்படுகிறது.

🍆கத்திரியில் காய் மற்றும் தண்டு துளைப்பானை கட்டுப்படுத்த உயிரிய பயிர் பாதுகாப்பு சாதனமாக இனக்கவர்ச்சி பொறிகள் வைத்து பயிரை பாதுகாக்க வேண்டும்.

🍆கத்திரி நாற்று நடவு செய்யப்பட்ட 15 நாட்களுக்குள் ஏக்கருக்கு 12 முதல் 16 இனக்கவர்ச்சி பொறிகள் வைக்க வேண்டும்.

🍆ஆண் அந்துப்பூச்சிகளை கவர்வதற்காக ஒரு குப்பியில் பெண் அந்துப்பூச்சியின் வாசனையுள்ள திரவம் நிரப்பி வைக்கப்பட்டிருக்கும்.

🍆பொறியினுள் இறந்து கிடக்கும் ஆண் அந்துப்பூச்சிகளை வாரம் ஒரு முறை தண்ணீருடன் கீழே கொட்டி புதிய எண்ணெய் கலந்த தண்ணீரை நிரப்பி வைக்க வேண்டும்.

🍆இரண்டு மாதத்துக்கு ஒரு முறை திரவம் நிரப்பிய குப்பியை புதியதாக விலைக்கு வாங்கி வைக்க வேண்டும். ஒரு குப்பியின் விலை 15 ரூபாய்.

🍆 மருந்து தெளிக்காமல் இனக்கவர்ச்சி பொறிகள் வைத்து கத்திரியில் காய் மற்றும் தண்டு துளைப்பானை கட்டுப்படுத்தி குறைந்த வரும் கத்திரி சாகுபடியை அதிகரிக்க வேண்டும்.