காய்கறி பயிர்களில் பூ உதிர்வதை கட்டுப்படுத்த

காய்கறி பயிர்களில் பூ உதிர்வதை கட்டுப்படுத்த chilli
Agriwiki.in- Learn Share Collaborate
காய்கறி பயிர்களில் பூ உதிர்வதை கட்டுப்படுத்த

20 கிராம் பெருங்காயத்தை ஒரு லிட்டர் தண்ணீரில் கலக்க வேண்டும். இந்த கரைசலை செடிகளுக்கு தெளிப்பதன் மூலம் சுரைக்காய், பீர்க்கங்காய், பூசணிக்காய் போன்ற காய்கறி பயிர்களில் பூ உதிர்வதை தடுக்கலாம்.

மிளகாயில் பூசணநோய்த் தாக்குவதால் பூக்கள் பூத்தவுடன் கீழே கொட்டிப் போய்விடும். இதனைக் கட்டுப்படுத்த மாலை வேளைகளில் தோட்டங்களில் சாம்பிராணி புகை போடுவதால் பூஞ்சாண நோய்கள் பரவுவதைத் தடுக்கலாம்.

காற்று வீசும் திசைக்கு நேர் எதிர் திசையில் நின்று பயிர்களின் அடிப்பகுதியில் புகை படுமாறு புகைமூட்டம் போட வேண்டும்.

ஒரு மண் சட்டியில் பற்ற வைத்த கரியைப் போட்டு சாம்பிராணி பொடியை அதில் தூவி புகைமூட்டம் போட வேண்டும்.

மேற்கண்ட முறைகளைப் பின்பற்றி வந்தால் காய்கறிப் பயிர்களில் ஏற்படும் முக்கிய பிரச்சனையான பூ உதிர்வதைக் கட்டுப்படுத்தலாம்