கிணறுகளில் சைடு போர் போடுவதற்கு வேண்டிய மிக முக்கியமான தகவல்கள்

கிணறுகளில் சைடு போர் போடுவதற்கு வேண்டிய மிக முக்கியமான தகவல்கள்
Agriwiki.in- Learn Share Collaborate

கிணறுகளில் சைடு போர் போடுவதற்கு முன் தெரிந்த கொள்ள வேண்டிய மிக முக்கியமான தகவல்கள்

அனைவருக்கும் வணக்கம் நான் உங்கள் அசோலா சதீஷ் குமார் திருவண்ணாமலை

என்னுடைய அனுபவங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மிக்க மகிழ்ச்சி

சைடுபோர் போடுவதற்கு நீர் ஊற்றுகளை எவ்வாறு தேர்வு செய்வது

கிணற்றில் இருந்து70அடி முதல் 100 அடிக்குள் நீர் ஊற்றுகளை தேர்வு செய்வது மிகவும் சிறப்பாக இருக்கும்.

நீண்ட தூரத்தில் நீர் ஊற்றுகள் கிடைத்தால் அதை தவிப்பது நல்லது

சைடு போர் போடும் போது மேற்கொள்ளவேண்டிய வழி முறைகள்

பெட் அமைக்கும் போதுகிணற்றில் தரை மட்டத்தில் இருந்து 1 அடி முதல் 1 1/2 அடி உயரம் வரை மட்டுமே இருக்க வேண்டும்.

நீர் ஊற்றுகள் தேர்வு செய்த இடத்தில் ஒரு குச்சி அடித்து அந்த குச்சியில் ஒரு கயிற்றை கட்டி அந்த கயிற்றை கிணற்றில் உள்ளே இறக்கி விட வேண்டும் .
அந்த கயிற்றை மைய புள்ளியாக கொண்டு போர் அமைக்க வேண்டும்.

சைடு போர் போடும்150அடி 200அடி போர் போடுவதை தவிர்க்க வேண்டும்.

எ.கா: சைடு போரில் 60 அடியில் தண்ணீர் வந்தால் 75 அடி முதல் 85அடி வரை மட்டுமே போர் போட வேண்டும்.

*நீண்டதூரம் போர் அமைத்தால் அதிக தண்ணீர் என்ற நம்பிக்கை தவிர்க்கவும்*.

60அடியில் எந்த அளவு தண்ணீர் வந்ததோ அதே தண்ணீர் 200அடி தூரம் போர் அமைத்தாலும் வரும்.

ஒரே நேர் கோட்டில் இரண்டு நீர் ஊற்றுகள் இருந்தால் மட்டுமே நீண்ட தூரம் போர் போட வேண்டும்.

நீண்ட தூரம் போர் அமைத்தால் உங்களுக்கு பணம் இழப்பு தான் ஏற்படும்.

நீண்ட தூரம் போர் அமைத்தால் அதிக தண்ணீர் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் உங்கள் கிணற்றில் உள்ள தண்ணீரை *நீங்களே வறண்ட பூமிக்கு வாய்க்கால் அமைப்பது போல் ஆகிவிடும்*.

இந்த தகவலை எந்த ஒரு போர் வண்டி வைத்து உள்ள நண்பர்களும் செல்ல மாட்டார்கள் அவர்களுக்கு தேவை 200அடி 300அடி மட்டுமே

சைடு போர் அமைத்த பிறகு நீர் ஊற்றுகள் வறண்டு விடாமல் இருக்க பின் பற்ற வேண்டிய மிக முக்கியமான தகவல்கள்

 

கிணற்றின் தரையில் இருந்து1 அடி முதல் 1 1/2 அடி உயரத்தில் போர் அமைத்து இருப்போம்.

சைடு போர் இருக்கிற ஊற்றுகளுக்கு மேல் ஒரு அடையாள குறியை குறித்து கொள்ளவேண்டும். ( இரும்பு கம்பி நடுவது , மூங்கில் குச்சி நடவது உங்களுக்கு எது எளிதாக உள்ளதோ அதை பின் பற்றலாம்).

குறியீட்டிற்க்கு மேலே உள்ள தண்ணீரை மட்டும் தான் பயன் படுத்த வேண்டும்.

எக்காரணம் கொண்டும்
குறியீட்டிற்க்கு கீழ் உள்ள சைடு
போரில் இருந்து வரும் நீர் *ஊற்றுகள் வெளியே தெரியாதவாறு பார்த்த கொண்டால் போதும்*
உங்களுடைய சைடு போரில் நீர் ஊற்றுகள் *வறண்டு விடாமல் இருக்கும்*

எனது 12 வருட நீரோட்டம் பார்க்கும் அனுபவத்தில் நான் மேற்கொண்ட சில வழி முறைகள் உங்களிடம் பகிர்ந்து உள்ளேன்.

*நன்றி*