கொடி வகை காய்களுக்கு பந்தல்

Agriwiki.in- Learn Share Collaborate

கொடி வகை காய்களுக்கு பந்தல்:
கொடி வகை காய்களுக்கு பந்தல் போடுவதுதான் அதிக செலவு பிடிக்கும். நிரந்தர பந்தல் போட்டுவிட்டால் மூன்று வருடங்களுக்கு கூட நாம் கொடி வகை காய்களை பயிரிடலாம்.

தண்ணீர் தேவை குறைவு. சரியான பராமரிப்பு மூலம் நல்ல லாபம் ஈட்டலாம். காய்களை பறிக்க ஆட்கள் கூலி தேவை இல்லை.

நாட்டு ரக பாகற்காய்க்கு எப்போதும் நல்ல வரவேற்பு உள்ளது. பழ ஈ கட்டுபாடு சற்று கடினம்.

கொடி வகை காய்களுக்கு மணற்பாங்கான மற்றும் செம்மண் கலந்த பூமி சிறந்தது.

பலர் பருத்தி செடியின் கடைசி காலத்தில் கொடிவகை காய்களை பயிரிடுகிறார்கள்.

கத்தரியில் புடலை மற்றும் பாகற்காய் பயிரிடலாம். கத்தரி காய்ப்பு குறையும் போது இதில் காய்கள் மூலம் தொடர்ந்து மூன்று மாதம் உழவு ஏதும் செய்யாமல் வருமானம் கிடைக்கும்.

ஆடி பட்டம் சிறந்தது. புரட்டாசி முதல் மார்கழி வரை காய்கறிகளுக்கு நல்ல விலை கிடைக்கும்.

நல்ல மழை பெய்தால் செடி பழுக்கும். நீர் தேங்கமல் பார்த்து கொள்ளவேண்டும். அதனால் மழை காலத்தில் கொடி வகை காயகள் விலை அதிகமாக இருக்கும்.

இந்த வாரத்தில் கால் ஏக்கர் நிலத்தில் 370 கிலோ கத்தரி வந்தது. ஒரு வாரத்தில் இரண்டு முறை பறித்தது எல்லாம் சேர்த்து. சொத்தை காய் மொத்தம் 50kg