கொரோனாவை விட கொடிய ஆஸ்பெஸ்டோஸ், பிளை ஆஷ் கற்கள் என்பவை என்ன

Agriwiki.in- Learn Share Collaborate

கொரோனாவை விட கொடிய ஆஸ்பெஸ்டோஸ், பிளைஆஷ் கற்கள் என்பவை என்ன ?…

இதுபற்றி என்னிடம் பலர் கேட்டுள்ளனர்.இதை பயன்படுத்தலாமா? அல்லது,உங்களுடைய கருத்து என்ன என்றும் வினாவியுள்ளனர்…

இதோ அதற்கான என்னுடைய பதில்.

நிச்சயம் வேண்டாம் என்பதே…காரணம்

ஆஸ்பெஸ்டாஸ் என்பது நமது ஊரில் சிமென்ட் ஷீட் என்றும் ஃபிளை ஆஷ் கல்லை சிமென்ட் கல் என்றும், ஹாலோ பிளாக்,சாலிட் பிரிக்ஸ் என்றும் பெயர் வைத்து ஏமாற்றுகிறார்கள்.

ஆஸ்பெஸ்டாஸ் என்பது நமது ஊரில் சிமென்ட் ஷீட் என்றும் ஃபிளை ஆஷ் கல்லை சிமென்ட் கல் என்றும், ஹாலோ பிளாக்,சாலிட் பிரிக்ஸ் என்றும் பெயர் வைத்து ஏமாற்றுகிறார்கள்.

உலக நாடுகளில் தடை செய்யப்பட்ட கேன்சர் வரவழைக்கும் விஷங்களில் (Carcinogen) ஃபிளை ஆஷ், ஆஸ்பெஸ்டாஸ் இவைகளும் மிக முக்கியமானவை.

ஐரோப்பிய நாடுகள் அனைத்திலும் 20 ஆண்டுக்கும் முன்னரே ஆஸ்பெஸ்டாஸ், ஃபிளை ஆஷ் தடை செய்யப்பட்டு விட்டன.

((காரணம் ஆலைகளில் நிலக்கரியை எரிக்கும் போது அதனுடைய சாம்பல் மட்டுமின்றி அதில் பல வேதி பொருட்களும் கலந்துவிடும்.கழிவோடு கழிவாக அவையும் இந்த கற்களினுள் கலக்கப்படுகிறது.உடலுக்கு தீங்கிழைக்கும் வேதி கழிவு பொருட்கள் பயன்படுத்துவது எப்படி eco-friendly என்று ஏமாற்றபடுகிறது என்று தெரியவில்லை))

ஆனால் அங்கு தடை ஆன உடன் எடர்நிட் என்ற ஐரோப்பிய கம்பெனி நம் நாட்டில் உள்ள கார்ப்பரேட் சதிகாரர்கள் வழியாக பல பெயர்களில் கோயமுத்தூர் உள்பட பல இந்திய ஊர்களில் கம்பெனிகளை நடத்தி வருகிறது.

ஃபிளை ஆஷ் பிரிக்ஸ் ஹாலோ பிளாக்ஸ் என்ற பெயரில் கொடிய நிலக்கரி சாம்பலை தற்போது அனைவரும் வீடு,அப்பார்ட்மென்ட் கட்ட வங்கிகள் மக்களை நிர்பந்தித்து வருகின்றனர்.

ஃபிளை ஆஷ் பிளாக் கல்லை வைத்து கட்டப் படும் வீடுகளுக்கு வீட்டு மதிப்பு கிடையாது என்பது வங்கிகளுக்கும் தெரியும். கார்பரேட்டுகளின் சிண்டிகேட் வங்கிகள் இதை தந்திரமாக அங்கீகரிக்கின்றனர்.

ஃபிளை ஆஷ் பிரிக்ஸ் ஹாலோ பிளாக்ஸ் என்ற பெயரில் கொடிய நிலக்கரி சாம்பலை தற்போது அனைவரும் வீடு,அப்பார்ட்மென்ட் கட்ட வங்கிகள் மக்களை நிர்பந்தித்து வருகின்றனர்.

ஃபிளை ஆஷ் பிளாக் கல்லை வைத்து கட்டப் படும் வீடுகளுக்கு வீட்டு மதிப்பு கிடையாது என்பது வங்கிகளுக்கும் தெரியும். கார்பரேட்டுகளின் சிண்டிகேட் வங்கிகள் இதை தந்திரமாக அங்கீகரிக்கின்றனர்.

இது மட்டும் அல்லாமல் பல சிமென்ட் கம்பெனிகள் ஃபிளை ஆஷை சிமென்ட் உடன் கலந்து கலர் காட்டி நம்மை ஏமாற்ற பயன் படுத்துகின்றனர். காரணம் பூமியை அழிக்கும் சிமென்ட் ஆலைகளும் கார்பரேட்டுகள் கைகளிலேயே உள்ளது.

ஆனால் ஆஸ்பெஸ்டாஸ், சிமென்ட், ஃபிளை ஆஷ் கார்ப்பரேட் முதலாளிகளோ தங்கள் வீடுகளை சுண்ணாம்பு சாந்து, கருப்பட்டி,கடுக்காய் போன்றவற்றை வைத்து கட்டி குளு குளு என வாழ்ந்து வருகின்றனர்.

தங்கள் தோட்டமான ஃபார்ம் ஹவுஸ்களில் லேட்ரைட்,சுண்ணாம்பு பாறை , மண் ,பனை ஓலை ,கோரை புல் என்று குளு குளு வசதிகளுடன் வாழ்கின்றனர் திருட்டு கார்பரேட்டுகள்.

கை ஓடு, குழாய் ஓடு என்றும் இந்த முதலாளிகளின் வீட்டில் ஒரே ஜில் ஜில் சொகுசுதான் என்பதை நீங்கள் கவனித்து இருப்பீர்கள்.

இவர்கள் பயன் படுத்திக் கொள்வது நம் பேராசையையும்,சிக்கன எண்ணத்தையும்தான்.

மேற்கண்ட மலிவான இயற்கை கட்டுமான பொருட்கள் நம் ஊரிலேயே கிடைத்தாலும் நம்மால் முடிந்த அளவு கை இருப்பு பணத்தை வைத்து நமக்கு வீடு கட்டிக் கொள்வது இல்லை. காலம் எல்லாம் வட்டியை கட்டிக் கொண்டே நம்மை பிச்சைக்காரனாக அலைய விடும் பேங்க் லோனுக்கு ஆசைப்படும் மன நிலையை நாம் மாற்றிக் கொண்டார் நோய் நொடி இல்லாமல் நாமும் ஒரு ஜில் ஜில் வீடு ஆரோக்கியகாக வாழ முடியும் என்பதே உண்மை.

தற்போது இவ்வாறு இயற்கை வீடுகளை அமைப்போரின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்து வருவதையும் நாம் காண முடிகிறது.

ஆனால் நம் நாட்டில் மட்டும் ஃபிளை ஆஷ்,ஆஸ்பெஸ்டாஸ்,ஃபிளை ஆஷ் சிமென்ட் பிளாக் கல்லுக்கும் சிவப்பு கம்பளம் விரிக்கப்பட்டு காலம் காலமாக நடைபெற்று வருகிறது.

https://en.m.wikipedia.org/wiki/Asbestos

https://amp.dw.com/…/breathless-the-hidden-thre…/av-51718029

https://en.m.wikipedia.org/wiki/Fly_ash

https://youtu.be/hvx-W-XAie0

நிரூபிக்கப்பட்ட கேன்சர் விளைவிக்கும் ஆஸ்பெஸ்டோஸ்,பிளை ஆஷ் ஆகியவற்றிற்கு பிரதமர் நரேந்திர மோடி அரசு தடை விதிக்க வேண்டும் என வேண்டுகிறேன்.

நிரூபிக்கப்பட்ட கேன்சர் விளைவிக்கும் ஆஸ்பெஸ்டோஸ்,பிளை ஆஷ் ஆகியவற்றிற்கு பிரதமர் நரேந்திர மோடி அரசு தடை விதிக்க வேண்டும் என வேண்டுகிறேன்.

மலிவு விலை வீடுகள் அமைக்க மண்,ஓடு எனும் பழமையை புதிய பாணியில் நாம் மாற்றி மீண்டும் இயற்கையோடு இணைந்து குளுகுளு என திரும்புவோம்.

இவைகளில் வாழ்ந்தாலே உடல் சூடு ஏற்பட்டு நமக்கு நித்தமும் உடலில் எதிர்ப்பு சக்தி பெற இயலாத நோய்தான்.

https://en.m.wikipedia.org/wiki/Concrete_masonry_unit

தனி மனித மாற்றமே நம் சமுதாயத்தின் மாற்றம்.

அவசியமாக பகிர்வோம்.

நன்றி
பொறி.ஹரிபிரசாத்…

தொடரும்