சுபாஷ் பாலேக்கர் இயற்கை விவசாயம்

சுபாஷ் பாலேக்கர் இயற்கை விவசாயம்
Agriwiki.in- Learn Share Collaborate

சுபாஷ் பாலேக்கர் வகுப்பு

*எது ஆன்மீக விவசாயம்.*
கண்ணுக்குத் தெரியாத கடவுளை நாம் கஷோவில் மசூதி சர்ச்சில் காண்கிறோம். இயற்கையில் கடவுள் காணக்கூடிய நிலையில் உள்ளார்.
ஆன்மீக விவசாயம் என்பது தேவைப்படக்கூடிய அனைத்து இடுபொருளையும் கடவுளே கொடுக்கிறார். மனிதன் எந்த சூழுநிலையிலும் கொடுக்கக்கூடாது. உரம் மற்றும் இடுபொருள் பூச்சி கட்டுப்பாடு என அனைத்தையும் மனிதன் கொடுப்தில்லை.
இதில் மனிதனுக்கு எந்த பங்கினையும் இறைவன் அனுமதிக்க வில்லை தாவரங்கள் சுய சார்பாகவே செய்து கொள்கின்றன.
இதன் மூலம் காடுளில் உள்ள தாவரங்கள் ஏற்றுமதி தரம் வாய்ந்த பழங்களைத்தருகின்றன.

வேதி விவசாயம் என்ன சொல்கிறது.
மண்ணில் எந்த சத்துக்களும் இல்லை அதை வெளியில் இருந்து கொடுக்க வேண்டும். வெளியில் இருந்து எவ்வளவு சத்து கொடுக்கிறோமோ அவ்வளவு விளைச்சல் கிடைக்கும். உண்மையில் இது சாத்தியமா? யூரியாவின் அளவை அதிகரித்தால் விளைச்சல் பத்து மடங்கு உயர்ந்து விடுகிறதா? நடைமுறையில் என்ன பாக்கிறீர்கள்.

காட்டில் உள்ள மரங்கள் இந்த குறைபாடு இருந்தால் அவற்றில் குறைபாடு ஏற்பட்டிருக்கும் அல்லவா? பிறகு எப்படி அவற்றால் தரமான பழங்களை தரமுடிகிறது.
இதில் இருந்து என்ன தெரிகிறது *மண் அண்ணபூரணி* இதுவே அனைத்த சத்துக்களையும் தாவரத்திற்கு கொடுக்கிறது.

இதிவ் இருந்து புரிவது ரசாயன விவசாயத்தை ஆதரிக்கும் *லைபிக்* போன்ற விஞ்ஞானிகள் நமக்கு மிக மோசமாக வழிகாட்டியிருக்கிறார்கள். இவர் வெளியில் இருந்து உரம் கொடுக்க வேண்டும் என்பது இவரது கோட்பாடு.

நார்மன் போரலாக் என்பவர் லைபிக் கோட்பாட்டின் படி பசுமைப்புரட்சி என்ற கோட்பாட்டை உருவாக்கினார். இதில் என்ன தெரிகிறது. இரசாயன விவசாயம் நமது தொழில் நுட்பமல்ல.வெளிநாட்டுத் தொழில் நுட்பம். பசுமைப்புரட்சி ஒரு புரட்சியல்ல அது ஒரு மோசடி.திட்டமிட்ட சதியாகும்.

இந்திய பொருளாதாரத்தை சுரண்ட ஏற்படுத்தப்பட்ட சதியாகும். புரட்சி வன்முறையின்றி செய்யப்படவேண்டும். ஆனால் பசுமைப்புரட்சி மண் வளத்தை அழித்தது. சுற்றச்சூழலை அழித்தது. நீர்வளம் மற்றும் பல்லுயிர் பெருக்கத்தையும் அழித்தது. இது புரட்சியா?
காடுகளில்தாவரங்களை ஆய்வு செய்தால் அவற்றில் எல்லா சத்துக்களும் நிறைந்துள்ளது. அந்த சத்துக்கள் மண்ணில் இருந்து எடுக்கப்படுகிறது. மண்ணே சத்தின் கடல் ஆகும் அண்ணபூரணி சத்துக்களுக்கான அண்ணபூரணி,

நமது பண்ணையில் மண்ணில் இருந்து மாதிரிகளை ஆய்வு செய்யும் போது மண்ணில் சத்துக் குறைபாடு உள்ளதாக கூறுகிறது. இது எப்படி மண்ணில் சத்துக்கள் இல்லையா?
எது சரி மண்ணில் சத்து உள்ளதா
இல்லையா?
இடைவெளிக்குப் பிறகு

எது சரி மண்ணில் சத்துக்கள் உள்ளதா இல்லையா?

இந்த கேள்வியை என் பேராசிரியரிடம் கேட்டேன் அவரிடமும் பதில் இல்லை. நான் எனது கிராமத்தில் கிணறு தோண்டும் போது அடுக்கடுக்காக மண்ணை ஆய்வு செய்தேன். நிலம் அடியில் செவ்ல செல்ல ஊட்டசத்து அதிகமாக உள்ளது.
நாம் மேல் மண்ணை ஆய்வுக்கு எடுத்தால் ஊட்டசத்து இல்லை என்ற முடிவை காண்பிக்கிறது. ஆனால் ஆழத்தில் உள்ளமண் ஊட்டசத்து உடையது.

டாக்டர் கிளார்க் மற்றும் டாக்டர் வாஷிங்டன் போன்ற விஞ்ஞாணிகள் மண்ணை ஆய்வு செய்தார்கள். இந்தியவின் பல பகுதிகளில் இந்த ஆய்வு நடந்தது. மண் பரிசோதனை முடிவுகளும் ஆழம் செல்ல செல்ல அதிகரிக்கிறது என்றே தெரிவித்தன.
அதாவது ஆறு அங்குத்திற்கு கீழே உள்ள மண் ஊட்டசத்து நிறைந்துள்ளது. ஆனால் மேல் மண்ணை எடுக்கும் போது உண்மையான முடிவுகள் கிடைப்பதில்லை.

(மண் பரிசோதனையில் Ph value வும் தவறாக காண்பிக்கும்) மண்ணின் கார அமில நிலையும் ஆழம் செல்ல செல்ல மாறுகிறது. மண் அறிக்கைகள் தவறான தகவல்களைத்தருகிறது. மேல் மண்ணில் சத்து இல்லை என்பதற்கு பதில் மண்ணில் சத்தே இல்லை என்கிறார்கள். இது மற்றொரு சதியாகும். மண்ணை சோதனை செய்வது மகா பாவம். நாம் தாய்பாலை சோதனை செயவோமா? மாட்டோமல்லவா!! மண் சோதனை இனி செய்யாதீர்கள்.

காட்டில் உள்ள மண்ணை நான் சோதனை செய்து பார்த்த போதும் வேர் அருகில் ஊட்ட சத்து இல்லை. அடியில் உள்ள சத்துக்கள் கீழிருந்து மேல் வருகின்றன. அப்படிதான், எப்படி நடக்கிறது? இதை விளங்கிக்கொள்ள மூன்று வருடம் ஆய்வு செயதேன்.

நான் கண்டறிந்தது நான்கு முறைகள் மூலம் ஊட்டச்சத்து மேல் கொண்டு வரப்படுகிறது.
அவை என்னென்ன? நான் செய்த பரிசோதனை இதுதான் 15 அடி ஆழத்திற்கு குழி எடுத்து அதில் ஆறு ஆறு அங்குலத்திற்கு மண் சேகரித்து மண் பரிசோதனை செய்தேன். வேரின் அருகில் சத்துக்கள் இல்லாமல் இருக்கலாம் ஆனால் அடிபரப்பில் சத்துக்கள் அதிகரித்த.நிலையில் உள்ளது. டாக்கர் கிளார்க், டாக்டர் வாஷிங்டன் போன்றோர்களும் இக்கருத்தை உண்மை என்கிறார்கள்.

வேர்களுக்கு அருகில் ஊட்டசத்து இல்லை என்றாலும் மரத்திற் ஊட்டசத்து கிடைக்கிறது. அப்படி என்றால் மூன்றாவது காரணிகள் மண்ணிற்கு சத்தைக்கொடுக்கிறன.
நான் மூன்று வருடங்கள்பல ஆய்வுகள் மூலம் கண்டறிந்து என்வென்றால் நான்கு இயற்கையான முறைகள் மூலம் ஊட்டசத்துக்கள் மேலே எடுத்து வழங்கப்படுகிறது.
1. ஊட்ட சத்து சுழற்சி
2.நுண்புழை ஏற்றம்
3.புயல்
4.மண்புழுக்களின் செயல்பாடு ( நாட்டு மண் புழுக்கள்)

விரிவாக பார்போம்.
ஊட்டசத்து சுழற்சி/ இயற்கையின் விதிமுறைப்படி ஒவ்வொன்றும் தோன்றிய இடத்திலேயே முடியும். இது ஊட்டசத்து சுழற்சி எனப்படுகிறது

*கார்பன் சுழற்சி*
முக்கியமானது கார்பன் சுழற்சி, நீர் சுழற்சி, சக்தி சுழற்சி மற்றும் ஊட்டசத்து சுழற்சிகள் உள்ளன.
கரிமம் அனைத்து புவி உயிர்களிலும் உள்ளது. காய்ந்த செடிகளில் 46 சதவீதம் கார்பன் உள்ளது. இந்த கார்பன் காற்றில் இருந்து ஒளிச்சேர்க்கை மூலம் எடுக்கப்படுகிறது (photosynthesis) காற்றில் உள்ள கரிமத்தின் அளவு (co2 ) 280 – 300 ppm ஆக உள்ளது. இந்த நிலை சுவாசம் மற்றும் ஒளிச்சேர்க்கைக்கு சரியான அளவாகும்.
இந்த கார்பன் தாவரந்தில் சேகரமாகும். அத்தாவரம் இறந்தபின் மக்கும் போது இந்த கார்பன் மீண்டும் வெளிவிடப்படுகிறது. இந்த கார்பன் மீண்டும் காற்று மண்டலத்திற்கு செல்கிறது. கார்பன் சுழற்சி இவ்விதம் நிகழ்கிறது.

நீர் சுழற்சி (water cycle)
மே மாதத்தில் கடல் நீர் பெறுமளவு ஆவியாகிறது. இந்த நீராவி மேகங்களால் உறிஞ்சப்படுகிறது. இந்த மழை மேகங்கள் 700 சதுர மைல் அளவுடைய நீராவியை சேகரிக்கிறது. பருவ மழையின் போது இந்த நீர் மழையாகப் பொழிகிறது. நதிகளில் சேரும் நீர் மீண்டும் கடலுக்கு செல்கிறது. இது நீர் சுழற்சி.

*சக்தி சுழற்சி* solar energy
சூரியன் சக்திக்கு மூலமாக இருக்கிறது. இது சூரிய சக்தி எனப்படுகிறது. அண்டவெளியில் இருந்து வரும் சக்தி காஸ்மிக் சக்தி எனப்படுகிறது. பொருளை சக்தியாக மாற்ற முடியும், சக்தியையும் பொருளாக மாற்றமுடியும்.
ஒரு சதுர அடி மண் பரப்பு அல்லது இலை பரப்பு 1250 கிலோ கலோரி சூரிய சக்தி படுகிறது. எனினும் தாவரம் 1 சதவீதம் சூரிய சக்தியை எடுத்துக்கொள்ள முடியும்.இது ஒளிச்சேர்க்கை மூலம் சேகரிக்கப்படுகிறது. இச்செடிகள் இறந்து மக்கும் போது இந்த சக்தியும் விடுவிக்கப்படுகிறது. அல்லது அவற்றை எரிக்கும் போது வெப்பமாக வெளியேறுகிறது.

*ஊட்டசத்து சுழற்சி* (Nutrient cycles) தாவரங்கள் ஊட்டசத்தை மண்வழியாக உள்ளெடுத்து தாவரங்களில் சேகரமாகிறது. 100 கிலோ ஊட்டசத்துக்களை வேர்கள் எடுத்தால் அவை முழுவதும் தாவரத்தில் சேகரமாகிறது. இத்தாவரம் இறந்து மக்கும் போது இந்த ஊட்ட சத்துக்கள் அனைத்தும் வேர்பகுதிக்கு திரும்புகிறது. இந்த ஊட்டசத்துக்கள் ஆழமான மண்ணில் இருந்து எடுக்கப்பட்டதாகும்.
எடுத்த சத்துக்கள் முழுவதும் மண்ணிற்கே கொடுக்கப்படுகிறது.

நாம் இந்த பயிரின் எச்சங்கள் பாகங்களை முழுவதும் மூடாக்காக பயண்படுத்தினால் இந்த மூடாக்கு மக்கும் போது எல்லா சத்துக்களும் மண்ணிற்கே கிடைக்கும்.

இதனால் மண்ணில் ஊட்டசத்து பற்றாக்குறை இருக்காது. அதாவது பயிரின் எச்சங்களை முழுவதுமாக மூடாக்காக பயன்படுத்தினால் மட்டுமே இந்த சத்துக்கள் மண்ணிற்கு கிடைக்கும் அபோது எந்தவிதமான உரமும் பயன்படுத்தத் தேவையில்லை. நாம் எந்தவொரு உரத்தையும் பயன்படுத்துவதை நிறுத்திவிடலாம். ஏனெனில் சத்து அதிலேயே உள்ளது.

ஆனால் மற்றவர்களில் ஆலோசனைப்படி பயிரின் எச்சங்களை எரித்தால் ஊட்டசத்துக்கள் மீண்டும் மண்ணிற்கு திரும்புவதில்லை. இனி நாம் எந்த ஒரு தாவரக்கழிவையும் எரிக்க மாட்டோம் என உறுதி ஏற்போம். பயிர் எச்சங்களை மூடாக்காக மட்டுமே பயன்படுத்துவோம் என்று இன்றே உறுதி ஏற்போம்.

ஆனால் பயிரின் எச்சங்களில் பூச்சிகளின் முட்டைகள் இருப்பதாக சொன்னாலும் பயிரை எரிக்கக்கூடாது. காடுகளில் இலைகள் தொடர்ந்து கீழே விழுந்து மூடாக்காக மாறுகிறது அங்கு பூச்சித்தாக்குதவ் இல்லையல்லவா.
இது எப்படி? இந்த முட்டைகள் அனைத்தும் தன்மை செய்யும் பூச்சிகளால் அழிக்கப்படுகிறது. எரித்துவிடுங்கள் என்று யார் சொன்னாலும் கேட்காதீர்கள். பூச்சித்தாக்குல் ஏற்பட்டிருந்தாலும் அதை மூடாக்காக பயன்படுத்தலாம்.
மூடாக்கு என்பது மண் தாயில் சேலையாகும். இந்த எச்சங்களை எரிப்பவர்களை துர்சாதனர்கள் என்று கூறலாமா?

*மண்ணின் மக்குதான் மண்ணின் வளமாகும். இந்த மக்கு தாவரங்கள் மக்குவதால், மூடாக்கு மக்குவதால் மட்டுமே உண்டாகிறது. பயிர் எச்சங்களை எரிப்பது என்பது மண்ணின் மக்கை அழிப்பதாகும், மண்ணின் செழிப்பை அழிப்பதாகும், மண் வளத்தை அழிப்பதாகும்.*

மக்கு என்றால் இடைவேளைக்கு பிறகு பார்ப்போம்.

*சுபாஷ் பாலேக்கர் இயற்கை விவசாயம்*
*ஈஷா விவசாய இயக்கம்*

*மண்ணின் மட்கு*

மட்குதான் மண்ணின் வளத்துக்கு ஆதாரம். மண்ணின் செழிப்பு என்பது மக்குதான். மண்ணின் உற்பத்தித் திறன் மண்ணின் செழிப்பை சார்ந்தது. எந்த அளவு மண்ணின் வளத்தை அதிகரிக்கிறோமோ அந்த அளவு பயிரின் விளைச்சலும் இருக்கும். பயிரின் விளைச்சலை அதிகரிக்க வேண்டும் என்றால் மண்ணின் வளத்தை அதிமாக்குவது நமது பொறுப்பாகிறது.
மண்ணின் வளமும் உற்பத்தித்திறனையும் வழங்குவது மட்கு தான். மட்கை நாம் அதிகபட்சமாக உருவாக்கினால் அதன்மூலம் அதிகபட்ச விளைச்சல் பெறமுடியும்.
மட்கு என்பது ஒரு அதிசயமான் உயிரவேதியியல் ஊக்கியாகும். இது மண்ணிவ் தொடர்ந்து செயல்படுகிறது. மண்ணில் வேதியியல், உயிரியல் மற்றும் உயிர் வேதியியல் செயல்களுக்கு காரணமாகிறது. இது பல்வேறு நுண்ணுயிர்களால் உருவாக்கப்படுகிறது. ஆக்சிஜன் விரும்பும் பேக்டீரியாக்கள் இதில் உள்ளன. மண்ணில் 3 அங்குல மேல் அடுக்கில் மட்டும் மட்கு உருவாகிறது. மட்கு உருவாகும் செயலில் புதிய பொருட்கள் பல உருவாகின்றன சில பொருட்கள் சிதைக்கப்படுகின்றன. இரண்டும் ஒரே நேரத்தில் நடக்கிறது.

மட்கு என்பது பயிருக்கான உணவுக்கூடமாகும். வேர்கள் சத்துக்களை மட்கின் வழியாகவே எடுத்துக்கொள்கிறது. வேர்கள் தழைசத்து, மணி சத்து, சாம்பல் சத்து போன்ற மற்றும் நுண்ணூட்டம் மற்றும் பேரூட்டங்களை மடகில் இருந்தே எடுத்தக்கொள்கின்றன. பயிரின் வளர்சிக்கு கரிம அமிலங்கள் மற்றும் ஹூமிக் அமிலமும் தேவைப்படுகின்றன. இந்த இரண்டு அமிலங்களும் மட்கில் உருவாக்கப்பட்டு வேரினால் உறிஞ்சப்படுகின்றன.

பயிர் வளர்ச்சிக்கு தேவையான பல்வேறு முக்கிய நொதிகள் மற்றும் செயலூக்கிகளும் மட்கிலேயே உருவாக்கப்படுகிறது. அதாவது மட்கு என்பது ஒரு சமையல் அறை போன்றது. நுண்ணுயிர்கள் சமைக்கும் வேலையை செய்கிறது. வேர்கள் அவற்றை எடுத்துக் கொள்கிறது. மட்கில் பல் வேறு தனிமங்கள் உள்ளன. அவற்றில் இரண்டு தனிமங்கள் மிக முக்கியமானவை அவை அங்கக கார்பன் மற்றும் அங்கக நைட்ரஜன்.

நுண்ணுயிர்கள் கழிவுகளை மட்கச்செய்து, கழிவுகள் என்பது தாவரங்களின் காய்ந்த பகுதிகள். மேலும் பூச்சிகளும் இதில் பங்கு வகிக்கின்றன. இதன்படி மட்கு உருவாக வேண்டும் என்றால் பயிகளின் எச்சங்கள் மற்றும் சிறந்த நுண்ணுயிர் கூட்டமும் தேவையாகிறது. மட்கு உருவாக கார்பன் மற்றும் நைட்ரஜன் தேவை. கார்பன் தாவரக்கழிவில் இருந்தும் நைட்ரஜன் காற்றில் இருந்தும் பெறப்படுகிறது.

மட்கில் 60 சதவீதம் அங்கக கரிமமும் 6 சதவீத அங்கக நைட்ரஜனும் உள்ளது. அங்கக கரிமம் என்பது ஒளிச்சேர்க்கையால் உருவாகிறது. பச்சயம் மூலம் ஒளிச்சேர்க்கை நடைபெற்று அவை அங்கக கரிமம் இலைகளில் சேகரிக்கப்படுகிறது.
சரி நிலக்கரி அல்லது அடுப்புக்கரி மட்கு உருவாக்க பயன்படுமா?

தழை சத்து நைட்ரஜன் நிலைப்படுத்தும் பாக்டீரியாக்களால் பெறப்படுகிறது. நைட்ரஜன்காற்றில் 78.6சதவீதம் உள்ளது என்பதால் காற்று நைட்ரஜனின் கடலாக உள்ளது. இந்த பாக்டீரியாக்கள் மட்டுமே காற்றில் உள்ள தழை சத்தை மண்ணில் நிலைப்படுத்த முடியும்.

பெரும்பாலும் பயறு வகைத்தாவர வேர்களுக்கு காற்றில் உள்ள நைட்ரஜனை மண்ணில் சேர்க்கும் திறன் உள்ளது.
மட்கு உருவாக தாவரக்கழிவுகள், தேவையான நுண்ணுயிர்கள் மற்றும் இருவித்திலைத்தாவரங்களான கடலை, கொள்ளு, பட்டாணி, பச்சை பயறு மற்றும் பல பயறு வகைத்தாவரங்கள் ஊடுபயிராக இருக்க வேண்டும். கிளைரிசிடியா போன்ற மரங்களும் உகந்தவை.
சரி நுண்ணுயிர் கூட்டத்தை எப்படி உருவாக்குவது. நான் பல்வேறு விவங்குகளின் சாணத்தை பரிசோதித்தேன். மாடு, ஆடு, காளை என பல விலங்குகளை பரிசோதித்ததில் நமது நாட்டு மாட்டு சாணம் சிறப்பாக இருந்தது. ஜெர்சி மற்றும HF மாடுகளின் சாணம் நுண்ணுயிகள் குறைவாக இருந்தது.

300 கோடி நுண்ணுயிர்கள் ஒரு கிராம் நாட்டு மாட்டு சாணத்தில் இருந்தது. எருது சாணத்திலும் பாதி நுண்ணுயிரிகள் இருந்தது. எருமை மற்றும் எச்.எப், ஜெர்சி போன்றவை நுண்ணுயிர் பெருக்கத்திற்கு உகந்ததல்ல.

எனவே நுண்ணுயிர் பெருக்கத்திற்கு நாட்டு மாட்டில் இருந்து தயாரிக்கப்படும் ஜீவாமிர்தம் மற்றும் கனஜீவாமிர்தம் பயன்படுத்த வேண்டும். ஊடுபயிராக கட்டாயம் பயறுவகை தாவரங்கள் சாகுபடி செய்ய வேண்டும்.

மட்கில் 60 சதவீதம் அங்ககக்க கரிமம் மற்றும் 6 சதவீதம் அங்ககக் நைட்ரஜன் உள்ளது. இந்த விகிதம் 60:6 என்ற விகிதத்தில் உள்ளது அதாவது 1:1என்ற விகிதம், இதை C:N விகிதம் என்கிறோம். ஒரு கிலோ நைட்ரஜன் பத்து கிலோ கார்பனுடன் கலந்தால் சரியான மக்கு உருவாகிறது இந்த விகிதம் மிகவும் முக்கியம்.

இதனால்எந்த பயிர்களின் கழிவுகளை பயன்படுத்த வேண்டும் என்பது கேள்வி எழுகிறது. ஒருவித்திலை தாவரக்குடும்பமான அரிசி குடும்பத்தில் உள்ள தாவரங்களான் அரிசி, கோதுமை, கரும்பு, சோளம், கம்பு, கேழ்வரகு போன்ற தாவரங்கள் மற்றும் சிறு தானியங்கள் மற்றும் புல் வகைகள் மற்றும் இதை போன்ற தீவனப்பயிர்கள் போன்ற அனைத்தும் (graminiacea) மூடாக்காக பயன் படுத்தினால் இவற்றில் CN விகிதம் 80:1 என்ற அளவில் மட்டுமே உள்ளது.

இந்த பயிரின் எச்சங்கள் மட்கும் போது 6:1 என்ற விகிதத்தில் கார்பன் நைட்ரஜன் இருக்காது. ஒரு கிலோ நைட்ரஜன் பத்து கிலோ கார்பனுடன் மட்டுமே இணையும். மீதி உள்ள 70கிலோ கார்பனை மட்காக மாற்ற ஏழு கிலோ நைட்ரஜன் தேவை. நைட்ரஜன் இல்லை என்பதால் கார்பன் வளிமண்டலத்தில் வெளியிடப்படும். இதுவும் பசுமை இல்ல வாயு விளவை ஏற்படுத்தி வெப்பமயமாதலுக்குக் காரணமாகிறது.

எனவே வைக்கோல், கரும்பு சக்கை போன்ற ஒரு விந்திலை தாவரங்களை பயன் படுத்தினால் குறைந்தபட்ச மட்கு மட்டுமே உருவாகும், மண் வளமடையாது எனவே இத்தகைய கழிவுகளை தனியாக மூடாக்காக பயன்படுத்தகூடாது.

என்ன தீர்வு? இவற்றுடன் இருவித்திலைத்தாவரங்களை கலந்து பயன் படுத்த வேண்டும். இரண்டு பங்கு ஒருவித்திலைத்தாவர கழிவுகள் மற்றும் ஒரு பங்கு இருவித்திலை தாவர கழிவுகளை பயன்படுத்த வேண்டும். இதற்கு நாம் ஒரு வித்திலை தாவரங்களுடன் இருவித்திலைத் தாவரங்களையும் வளர்க்க வேண்டும்.

இதே போன்று பழத்தோட்டங்களிலும் முருங்கை, கிளைரிசிடியா, துவரை, கொள்ளு, நரிபயறு தட்டை பயறு போன்றவைகளை ஊடுபயிராக செய்தால் கார்பன் நைட்ரஜன் விகிதம் சரியாக இருக்கும்.

குறிப்பிட்ட இடைவெளிகளில் தென்னை மற்றும் பாக்கு இலைகள் மரத்தில் இருந்து விழுகின்றன. இதில் கார்பன் நைட்ரஜன் விகிதம் 120:1 என்ற அளவில் உள்ளது. இந்த இலைகளை நாம் மூடாக்காக பயன்படுத்தினால் அவை மட்கும் போது 120 கிலோ கார்பனும் ஒரு கிலோ நைட்ரஜனும் வெளியிடப்படும். ஒரு கிலோ நைட்ரஜன் பத்து கிலோ கார்பனுடன் இணைந்து மட்கு உருவானால் மீதி 110 கிலோ கார்பன் அப்படியே காற்றில் விடுவிக்கப்படும்.

120 கிலோ கார்பனையும் நாம் பயன் படுத்த வேண்டும் என்றால் 11 கிலோ நைட்ரஜன் தேவை. இதனை கிளைரிசிடியா, முருங்கை, உரக்கொண்ரை, கொள்ளு, தடைப்பயிறு, நரிப்பயறு போன்றவற்றை சாகுபடி செய்வதன் மூலம் நைட்ரஜனைப் பெறலாம்.

எக்காரணம் கொண்டும் தென்னை பாக்கு போன்றவற்றின் இலைகளை தனியாக மூடாக்காக பயன் படுத்த வேண்டாம். மேலும் இலைக்கழிவுகளை எரிக்க வேண்டாம் இவற்றை கம்போஸ்ட் உரத்திற்கும் பயன் படுத்த வேண்டாம்.
பயிரின் இலை முதிரும் போது அது மஞ்சளாகும். அப்போது பழுக்கும் இலைகளில் உள்ள தனிமங்களை (பொட்டாஷ் போன்றவை) வேர்கள் எடுத்துக்கொள்ளும். இந்த வேர்கள் தனிமங்கள் சேகரிக்கும் வங்கிகளாக உள்ளன. இதனால் பயிர்களின் வேர்களை எரிக்கக்கூடாது. அவற்றை மூடாக்காக பயன் படுத்த வேண்டும் அது தான் சரியான முறை.
*சுபாஷ் பாலேக்கர் இயற்கை விவசாயம்*
*ஈஷா விவசாய இயக்கம்*

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.