திரும்ப திரும்ப அடிமைகளை உருவாக்கும் செயல்

Agriwiki.in- Learn Share Collaborate

திரும்ப திரும்ப அடிமைகளை உருவாக்கும் செயல் Waste Decomposer, தற்சார்பை எப்படியெல்லாம் ஒழிக்கலாம் என்று திட்டம் தீட்டும் கூட்டம்.

*தற்போது Waste Decomposer என்ற ஆர்கானிக் உரம் விளம்பரங்களில் பிரபலடைந்து வருகிறது. மக்களிடமும் பிரபலமாகி வருகிறது, இயற்கை விவசாயிகள்கூட இது நல்லது செய்யும் என்று நினைத்து வருகிறார்கள். பத்மஸ்ரீ சுபாஷ் பாலேக்கர் ஐயா அவர்கள் இந்த Waste Decomposer குறித்து பதிவிட்ட எச்சரிக்கை இங்கு தமிழாக்கம் செய்யப்பட்டுள்ளது.*

மத்திய ஆர்கானிக் விவசாய ஆராய்ச்சிக் கழகத்தால் தற்போது வெளியிடப்பட்டுள்ள கழிவுகளை மக்கவைக்கும் ஆர்கானிக் உரம் (Waste Decomposer) என்பது இயற்கையின் செய்லபாட்டிற்கு விடப்பட்ட நேரடி சவாலாகும்.

நாட்டு மாட்டுச் சாணத்தில் உள்ள கோடிக்கனக்கான பாக்டீரியா மற்றும் பூஞ்ஜைகளினால் மண்ணில் உள்ள அங்ககக்கரிமம் அதிகரித்து, மண்ணில் மிருதுத்தன்மையும் அதிகரிப்பதினால் மண்ணின் உயிர்ப்புத் தன்மையும், உற்பத்தித்திறனும் அதிகரிக்கும்.

மாறாக இந்த மக்கவைக்கும் ஆர்கானிக் உரத்தில் (Waste Decomposer) நாட்டுப்பசுவின் சாணத்தில் இருந்து எடுகக்பட்ட மூன்று நுண்ணுயிர்கள் மட்டுமே பயன்படுத்துவது என்பது மேற்கண்ட பலன்களை நமக்கு கிடைக்காமல் செய்வதற்கு வழிவகுக்கும்.

இயற்கை கோடிக்கணக்கான நுண்ணுயிர்கள் நாட்டுமாட்டு சாணத்தில் படைத்தது எதற்காக? இயற்கை இந்த ஒவ்வெரு நுண்ணுயிர்களுக்கும் முக்கியத்துவம் அளிக்கிறது. இந்த கழகம் வெறும் மூன்று பாக்டீரியாக்களையும், வெறும் ஐந்து பூஞ்சைகளை மட்டுமே பரிந்துரைப்பது எதற்காக?

இந்த மக்கவைக்கும் ஆர்கானிக் உரத்தை (Waste Decomposer) பிரபலப்படுத்துவதும், பயன் படுத்துவதும் இயற்கைக்கும் கடவுளுக்கும் எதிரானது, அதில் ஆன்மீகத்தன்மை இல்லை, கடவுளையும் விவசாயிகளையும் ஏமாற்றும் முயற்சி, இயற்கை மறுப்பு மற்றும் பாசாங்குத்தனத்தை வெளிப்படுத்துவதாக இருக்கிறது.

இரண்டாவதாக, இந்த ஆர்கானிக் வேளாண் விஞ்ஞானிகள் விவசாயக் கழிவுகள் மற்றும் வைக்கோல் போன்றவற்றை வேகமாக மக்கச் செய்வதற்கு முயல்வது ஏன்?

இயற்கையில் எதுவும் வேகமாக மக்கவைக்கப் படுவதில்லை, ஏனெனில், இயற்கையின் விருப்பம் அதுவல்ல, மக்கும் செயல் மெதுவாக நடைபெறும் போது புவி வெப்பமயமாதல் கட்டுப்பாட்டில் உள்ளது. இயற்கையில் பயிர்கள் அல்லது மரத்தின் தேவைக்கேற்பவே, அவற்றிற்கு எந்த அளவு சத்துக்கள் தேவைப்படுமோ அந்த அளவிற்கேற்பவே மண்ணில் உள்ள இலைதழைகள் மக்குகின்றன.

இந்த இயற்கைக்கு மாறான மக்க வைக்கும் ஆர்கானிக் உரத்தினால் (Waste Decomposer) விவசாயக் கழிவுகள் வேகமாக மக்கவைக்கும் போது அதிகப்படியான கார்பன் வெளிவருகிறது, அந்த கார்பன் ஆக்சிஜனுடன் இணைந்து கரியமில வாயுவாக மாறி, பூமியில் வெப்ப அதிகரிப்பிற்கும், பருவகால மாற்றத்திற்கும் காரணமாகிறது. (பசுமை இல்ல வாயு விளைவு)

இந்த மக்கவைக்கும் ஆர்கானிக் உரத்தை (Waste Decomposer) பிரபலப்படுத்துவதும் பயன்படுத்துவம் விவசாயத்திற்கு கேடு விளைவிக்கும். இதை பிரபலப்படுத்தவோ, பயன்படுத்தவோ செய்ய வேண்டாம். செலவில்லா ஜீரோ பட்ஜெட் இயற்கை விவசாயத்தில் பசுமாட்டில் இருந்து கிடைக்கும் சாணத்தால் தயாரிக்கப்படும் ஜீவாமிர்தம் மற்றும் கனஜீவாமிர்தம் போன்றவை இயற்கை விவசாயத்தில் முழுமையான நற்பலன்களை அளிக்கும் போது நமக்கு ஏன் இந்த மக்கவைக்கும் ஆர்கானிக் உரம் (Waste Decomposer)

பாரிவேள் அண்ணா பக்கத்தில் இருந்து…