நன்மை செய்யும் பூச்சிகளின் பயன்கள்

ஊசி தட்டான் நன்மை செய்யும் பூச்சிகளின் பயன்கள்
Agriwiki.in- Learn Share Collaborate

நன்மை செய்யும் பூச்சிகளின் பயன்கள்

தேவையின்றி மருந்து தெளிக்காமல் இருந்தால் நன்மை செய்யும் பூச்சிகளை நாம் வயலில் அதிக அளவில் பார்க்க முடியும்

1. ஓநாய் சிலந்தி

தலையும் மார்பும் சேர்ந்த பகுதியில் லு போன்று குறி இருக்கும் 100 நாட்கள் வரை வாழ்;ந்து 380 முட்டைகள் இடும். பகலில் இலை அடியிலும், தண்டின் அடியிலும், அல்லது தண்ணீரின் மேல் புறத்தில் தென்படும். இரவில் இலையின் மேல்பாகத்திற்கு சென்று விடும். ஒரே நாளில் 5 முதல் 12 பூச்சிகளை உண்ணும்

*ஓநாய் சிலந்தியின் உணவுகள்*

புகையான், மற்ற தத்துப் பூச்சிகள், கூட்டுப்புழு, குருத்து ஈ, இலை சுருட்டுப்புழு முதலியவை.

தேவைப்படாமல் மருந்து அடிக்க வேண்டாம்.

2. தரை வண்டு

இவை வண்டினத்தை சேர்ந்தது, கருப்பு மற்றும் சிகப்பு நிறத்துடன் பளபளப்பாக காணப்படும். இவ்வண்டுகள் நெற்பயிரின் மேல் பகுதியில் இருந்து இலைச்சுருட்டு புழுவை உண்டு வாழும்.

ஒரு நாளைக்கு 10 புழுக்களை உண்ணக்கூடிய திறன் படைத்தது. இவைகள் நெற்பயிரில் காணப்படும் தத்துப் பூச்சிகளை உண்டு வாழும் தன்மை படைத்தது

3. ஊசி தட்டான

இவைகள் நெற்பயிரின் மேற்பரப்பில் பறந்து கொண்டு நெற்பயிரை தாக்கும் பூச்சிகளை பிடித்து உணணும் குறிப்பாக பறக்கும் அந்து பூச்சிகள், தத்து பூச்சிகள் மற்றும் இலையின் மேல் உள்ள முட்டைகள் ஆகியவைகளை உண்டு வாழும். இவைகள் நூற்றுக்கணக்காக இலையின் மேற்பரப்பில் பறப்பதை பார்க்கலாம்.

 

தேவையின்றி மருந்து தெளிக்காமல் இருந்தால் இவைகளை நாம் வயலில் அதிக அளவில் பார்க்க முடியும். இவைகள் தட்டான் பூச்சியை போன்று சிறிய அளவாக இருக்கும். இவற்றின் குஞ்சுகள் நீரில் வாழக்கூடியது பூச்சியானதும் பறந்து பயிரின் மேல் மட்டத்திற்கு வந்துவிடும்.

4. பொறி வண்டு

இவ்வண்டு சிவப்பு, மஞ்சள் நிறங்களில் இலைகளில் அதிகம் காணப்படும். இவைகள் சுறுசுறுப்பாக இரையை தேடும் திறன் படைத்தது. இவைகள் பயிரில் ஒவ்வொரு இலையாக பூச்சிகளும், முட்டைகளும் இருக்கிறதா என பார்த்து இரையை தேடவல்லது.

வண்டுகளைவிட இவைகளின் குஞ்சுகள் அதிகமாக உண்ணும் திறன் படைத்தது. வண்டும், குஞ்சுகளும் நெற்பயிரில் காணப்படும் முட்டைகள் தத்துப்பூச்சியின் குஞ்சுகள் மற்றும் தத்துப்பூச்சிகளை உணவாக உண்ணும். தட்டை பயிரில் தோன்றும் அசுவனியை தின்பதற்காகவே அதிக அளவில் இப்டிபாறிவண்டுகள் உண்டாகும் இவை புகையான் பூச்சிகளை சாப்பிடும்.

எனவேதான் வயல் வரப்புகளில் தட்டைப்பயரை சாகுபடி செய்ய சிபாரிசு செய்யப்படுகிறது. தட்டைப்பயரை அசுவுனி தாக்கும் அசுவுனியை தேடி இந்த பொறிவண்டு வரும் இவை நெற்பயிரில் புகையான் வந்தால் அவற்றையும் விரும்பி உண்ணும் ஆக இவ்வண்டுகளை நாம் வயலில் பாதுகாப்பது அவசியம்.

5. மிரிட் நாவாய் பூச்சி

இப்பூச்சிகள் புகையான் அதிகம் உள்ள வயலில் காணப்படும். இச்சிறிய பூச்சிகள் பயிரின் அடிப்பகுதியில் இருந்துகொண்டு புகையான் முட்டைகளையும், குஞ்சகளையும் புகையான் பூச்சிகளையும் மூக்கினால் உறிஞ்சி உண்கின்றன.

ஒரு நாளைக்கு 10 முட்டைகளும் மற்ற தத்து பூச்சிகளையும் உண்ணும் திறன் படைத்தது இவைகள் மற்ற தத்து பூச்சிகளின் முட்டைகளையும் குஞ்சுகளையும் உணவாக உண்டு வாழும். இவைகளை நாம் வயலில் வாழவிட வேண்டும்;. தேவையின்றி மருந்து தெளித்து அழித்துவிடக் கூடாது.

6. நீள் தாடை சிலந்தி

10 முதல் 15 மில்லி மீட்டர் அளவுள்ள இந்த சிலந்தி நீள தாடைகளுடன், நீள வாக்கில் ஓரே வரிசையில் நீளும் தன்மை உடையது. நீண்ட கால்களை கொண்டது குஞ்சுகள் ஆறுகால் பூச்சி இனங்கள் போல் தெரிந்தாலும் கூர்ந்து கவனித்தால் 8 கால்கள் கொண்ட சிலந்தி இனம் என்று அறியலாம்.

இரவில் வலை பின்னி பூச்சிகளை பிடித்து தின்னும் வர்க்கமுடையது. 150 நாட்கள் வரை வாழ்ந்தாலும் 20 முட்டைகள் வரைதான் இடும். ஒரே நாளில் 2 அல்லது 33 பூச்சிகளை சாப்பிடும்.

புகையான் மற்றும் தத்துப்பூச்சிகளே இதன் உணவுகள் இந்த சிலந்திகளை அழிக்காமல் பாதுகாக்க வேண்டும்.