நாட்டுகோழி வளர்ப்பு முறை

நாட்டுகோழி வளர்ப்பு முறை
Agriwiki.in- Learn Share Collaborate

நாட்டு கோழி வளர்ப்பு எனது பதிவு எண் 1
/=/=/=/=/=/=/=/=/=/=/=/=/==/=/=/=/=/=/=/=
இன்றைய காலகட்டத்தில் கனவன் மனைவி சம்பாதிப்பது குடும்ப செலவீனத்திற்கே படுதிண்டாட்ட நிலையில் நம்மில் பலர் உள்ளனர் இதுதான் எதார்த்தம்

பொங்கி தின்ன அடுப்பு இல்லாவிட்டாலும்
கொத்தி பொறக்க கோழி வேண்டும் வீட்டில் என்பார்கள் முன்னோர் பழமொழி

நாட்டுகோழி வளர்ப்புதான் இன்றைய கிராமத்து வருமான வங்கி என்றே சொல்லலாம்
ஆம்
செலவீனம் மிக மிக குறைவு
அதிக வருமானம் நாட்டுகோழி வளர்ப்புமட்டும்தான்

டிப்ஸ் 1
/=/=/=/=/=/=

பெட்டைகோழி 6 மட்டும் வாங்கி வீடுகளில் வளருங்கள்

டிப்ஸ் 2
/=/=/=/==/=/=
நாம் வாங்கியுள்ள 6 பொட்டைகோழகளில் கிராப் கோழி என்று கழுத்தில் முடி இல்லாமல் இருக்கும் அந்த ரகத்தில் அவசியம் 3 பெட்டை கோழி வளருங்கள் குஞ்சுகளை பாதுகாப்பதில் இந்த கிராப் கோழிகளுக்கு இடு இணை எதுவும் இல்லை

டிப்ஸ் 3
=/=/=/=/=/=/

பெருவிடை சேவல் கோழி 1 மட்டுமே இனவிருத்திக்கு வைத்துகொள்ளுங்கள் காரணம் சண்டையிடாமல் கோழிகளை பாதுகாக்க இதுதான் சிறந்த வழி

டிப்ஸ் 3
/=/=/=/=/=/=
கோழி முதன்முறையாக முட்டை இட்டால் அந்த முட்டைகள் அனைத்தையும் அடையில் வைக்காதீர்கள் காரணம் முதன்முறை என்பதால் கோழி முட்டை மிக சிறியதாக இருக்கும். முதலில் இடும் முட்டைகளை அடைகாக்க வைத்தால் கோழி உடல் எடைகுறைவதோடு குஞ்சு மிக சிறியதாக பொறிக்கும் பொறித்த குஞ்சுகளுக்கு நோய் வந்தால் அதை தாங்கும் சக்தி குறைவு என்பதால் முதல் முட்டை அடையை களைத்துவிடுங்கள்.

டிப்ஸ் 4
////=/=/=/=/=/
முட்டை அடைகாக்க வைத்த 7 வது நாளில் நாம் நம் வீட்டில் உள்ள டார்ச்லைட் எடுத்து கையில் பக்கவாட்டில் வைத்து டார்ச் அடித்தால் அது நல்ல முட்டையா அல்லது (கூமுட்டையா) என்பதை அறிந்து பொறிக்காத முட்டைகளை முன்பே அகற்றிவிடலாம்.

டிப்ஸ் 5
////=/=/=/=/=/

கோழியை ஆற்று மணலில் வைத்து அடை வையுங்கள் அடை தட்டில் பட்டமிளகாய் ஆணி இவைகளை வைப்பது மூட நம்பிக்கையே அதை தவிர்த்து விடுங்கள்.

டிப்ஸ் 6
////=/=/=/=/=/
ஒரே நேரத்தில் 3 கோழிகள் அடை வைத்து குஞ்சு பொறித்தால் கோழி குஞ்சுகள் குறைவாக இருந்தால் அதை இரண்டு கோழிகளிடம் இரவில் சேர்த்துவிடுங்கள் 2 கோழிகள் பரமாறிக்க தொடங்கும்

கோழி குஞ்சுகள் பாதுக்கும் முறை
/=/=/=/=/=/=/=/=/=/=/=/=/=/=/=/=/=/=/=/=/=/=

டிப்ஸ் 7
////=/=/=/=/=/
குஞ்சுகளை பருந்து வர்சா எனும் பறைவகளைவிட கால மாற்றத்தால் காகம்தான் அதிகமாக குஞ்சுகளை தூக்கிசெல்கின்றன இதை தடுக்க எழிய வழி குஞ்சு பொறித்த 30 நாட்கள் வரை அதிகநேரம் வெளியில் மேய விடாதீர்கள்

அல்லது

நரிக்குறவர்களிடம் 100 ரூபாய் கொடுத்தால் இறந்து பல நாள் ஆன பதப்படுத்தபட்ட காகத்தை நம் வீட்டு தூரத்தில் உயரமான மரத்தி்ல் தொங்கவிடுவார்கள் அதை பார்த்தால் எந்த காகமும் கோழி இருக்கும் பக்கமே வராது

டிப்ஸ் 7
////=/=/=/=/=/

இரவில் கீரிபிள்ளை காட்டுபூணை இவைகளிடமிருந்து தவிர்க்க கோழி கூடை அருகே சைக்கிள் டயரை தொங்கவிடுங்கள் பாம்பு என நினைத்து இவைகள் கோழிபக்கம் வராது பனை ஓலை மட்டைகளை கட்டிவிட்டாலும் மிருகங்கள் வராது

பகலில் கீரிபிள்ளை கோழிகுஞ்சுகளை பிடித்தால் அதற்கென தணியாக கூண்டுவைத்து பிடித்து தூரகொண்டுபோய் விட்டுவிடுங்கள்

கோழி பாதுக்காக்கும் முறை
/=/=/=/=/=/=/=/=/=/=/=/=/=/=/=/=

டிப்ஸ் 8
////=/=/=/=/=/

1 இஞ்ச் சதுர பைப்பில் 10-5என்ற சைசில் சதுர நீள்வட்ட ஜன்னல் கூண்டு வெல்டிங் செய்து அதில் குஞ்சுகளை பராமறிக்கலாம்
அல்லது கோழிக்கென தணியாக பழைய மீன்வலைகள் வாங்கி நாமே கூண்டு அமைத்து கோழி வளர்க்கலாம்

டிப்ஸ் 9
////=/=/=/=/=/

கோழி வளர்ப்பிற்கு கண்டிப்பாக வங்கியில் கடன்வசதி தருவார்கள் என காத்திருக்க வேண்டாம் நம்ப வேண்டாம் காரணம் செல்வாக்கு மிக்கவர்களுக்கு கொடுத்து கணக்கை சரிகட்டிவிடுவார்கள் அதனால் வங்கியை நம்ப வேண்டாம்

டிப்ஸ் 10
////=/=/=/=/=/

கட்டாயம் கோழிகளை பகலில் அடைத்தவைத்து வளர்க்காதீர்கள் காரணம் நோய் தொற்ற வாய்ப்பு அதிகரிப்பதுடன் கோழிக்கான தீவன செலவீனம் அதிகமாகும் கோழிகள் சண்டையிடுவதை தவிர்க்க மூக்கு வெட்ட வேண்டும் மூக்குவெட்டிய கோழி அதிக விலைக்கு விற்க முடியாது இப்படி பல சிக்கல் உள்ளது எனவே கோழிகளை கொட்டகை கூண்டு அமைத்து அதிக எண்ணிக்கையில் அடைத்து வைத்து வளர்க்காதீர்கள்

பகலில் திறந்துவிட்டு இரவில் வந்து அமருகின்ற முறையை கையாளுங்கள்

டிப்ஸ் 11
////=/=/=/=/=/

கண்டிப்பாக கூடைகள் அமைத்து கோழி வளர்க்காதீர்கள் காரணம் கூடைகளுக்கென பல நூறு அடிக்கடி செலவினம் ஏற்படும்

கோழி குடாப் அமைத்து கோழிவளர்க்கலாம்அதைவிட சிறப்பு இரவில் மரத்தில் அடையும் முறையை பழக்கப்படுத்தவிட்டால் செலவினம் மிக மிக குறைவு

கோழி தீவன தவிடு அல்லது வெளி மார்க்கெட்டில் அரசி கிலோ 7 ரூபாயில் கிடைக்கிறது அதை வாங்கி தீவனமாக பயன்படுத்துங்கள்

கோழிகளுக்கு நோய் வந்தவுடன் சிகிச்சை அளித்தால் கண்டிப்பாக எந்த கோழிகளையும் காப்பாற்ற முடியாது 4 மாதங்களுக்கு ஒருமுறை அரசு கால்நடை மருந்துமனைக்கு சென்று இலவசமாக கோழி நோய் தடுப்பு பவுடர் மருந்து வாங்கி சோற்றில் கலந்து கோழிகளுக்கு கொடுத்துவிடுங்கள்

நம் வீட்டிற்கு அடிக்கடி விருந்து சமைக்க கோழி தேவைபட்டால் கருங்கோழி என்ற இன கோழிகளை நாம் வளர்க்கும் நாட்டுகோழியுடன் அடைகாத்து பொறிக்கசெய்து வளருங்கள்
அது அதிக எடை கொண்டதாக வளரும் மருத்துவ குணம் உடையது கருங்கோழி

எப்படி என்ன சைசில் இருந்தாலும் நாட்டு பெட்டை கோழி அதிகபட்சம் 500 வரை விற்பனை செய்ப்படுகிறது

நம்வீட்டு குடும்ப செலவீனத்திற்கு அதிக வருவாய் ஈட்டி தருவது நாட்டுகோழி வளர்ப்பு மட்டுமே