நீர் ஊற்று பார்க்கும் முறை

Agriwiki.in- Learn Share Collaborate

சிறந்த முறையில் வீடு மற்றும் விவசாயத்திற்கு நீர்
ஊற்று பார்க்கும் முறை

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள திரு பரந்தாமன் இளநிலை பொறியாளர் அவர்கள் விவசாயிகளுக்கு சிறந்த முறையில் நீர் ஊற்று பார்த்து வருகிறார்கள்.

விவசாயிகளின் நலன் கருதி தன்னுடைய ஆய்வின் மூலம் அவருடைய உடம்பில் உள்ள ஈர்ப்பு சக்தியின் உதவியை வைத்து நீர் ஊற்று 5 வகைகள் மூலம் கண்டுபிடித்து தருகிறார்கள்.

இவர் இளநிலை பொறியளராக பணியாற்றிக்கொண்டும் விடுமுறை நாட்களில் (சனி ஞாயிறு) விவசாயிகளுக்கு 15 ஆண்டு காலமாக நீர் ஊற்று பார்க்கும் பணியையும் செய்து வருகிறார்கள்

நீர் ஊற்று பார்க்கும் முறை

1. முதலில் எர்த்வரும் செம்பு கம்பி இரண்டை எடுத்து கொண்டு இரண்டுகைகளிலும் நேராக பிடித்தவாறு  நிலத்தில் கொண்டு செல்லும் பொழுது அவை இரண்டு கம்பிகளும் தண்ணீர் இருக்கும் இடத்திற்கு வந்தவுடன் தானாகவே இழுத்துக்கொண்டு பிளஸ் வடிவத்தில் வந்து நிற்க்கும் இவ்வாறு நிற்;கும் இடத்தில் ஆழ்துளை கிணறு ஏற்படுத்த நிலத்தடி நீர் நன்றாக கிடைக்கும்

2. ஒரு தேங்காயை எடுத்து உள்ளங்கையில் வைத்துக்கொண்டு நிலத்தில் செல்லும் பொழுது அவை தண்ணீர் இருக்கும் இடம் வந்தால் தேங்காய் தானாகவே உருண்டு கீழே விழுந்து விடும் அவ்வாறு விழும் இடத்திலும் நாம் ஆழ்துளை கிணறு அமைத்தாலும் தண்ணீர் கிடைக்கும்

3. ஒரு காசி செம்பை எடுத்து அதில் தண்ணீரை நிறப்பி உள்ளங்கையில் வைத்து ஏந்தியவாறு நிலத்திற்குள் சென்றால் அந்த தண்ணீர் அழம்பி செம்பு ஆட்டம் கண்டு கீழே விழ ஆரம்பிக்கும் நாம அங்கே ஆழ்துளை கிணறு அமைக்கலாம் தண்ணீர் நன்றாக கிடைக்கும்

4. ஒரு பிளாஸ்டிக் குடத்தில் கால் பங்கு நீரை நிரப்பி அவற்றையும் உள்ளங்கையில் வைத்து ஏந்தியவாறு சென்றால் குடம் ஆடி குடத்தில் உள்ள தண்ணீர் மேலே அழம்பி கிழே கொட்ட ஆரம்பிக்கும் அதிவேகமாக தண்ணீர் கொட்ட ஆரம்பிக்கும்; அந்த இடத்தில் ஆழ்துளை கிணறு அமைத்தால் தண்ணீரின் அழுத்தம் அதிகமாக கிடைக்கும்

5. ஒரு இரும்பு சங்கிலியை எடுத்துக்கொண்டு அதன் அடியில் காந்தத்தை கட்டி நுனி சங்கிலியை பிடித்துக்கொண்டு நிலத்திற்குள் சென்று வந்தால் செயின் தானாக வளையமாக சுற்ற ஆரம்பிக்கும் , அதிகமாக சுற்ற ஆரம்பிக்கும் இடத்தில் தண்ணீர் அதிகமாக கிடைக்க வாய்ப்புள்ளது.