பூச்சிகளை வளர விடுங்க

பூச்சிகளை வளர விடுங்க...
Agriwiki.in- Learn Share Collaborate

பூச்சிகளை வளர விடுங்க…

நன்மை தரும் பூச்சிகளை அடையாளம் கண்டு அவற்றை பாதுகாப்பதன் மூலம் வயல்களில் பயிர்களை தாக்கும் பூச்சிகளின் வளர்ச்சியை குறைக்க முடியும்.

👉 பொதுவாக பயிர்களை தாக்கும் பூச்சிகள் மற்றும் புழுக்கள் பற்றி விவசாயிகளுக்கு தெரிந்திருக்கும்.

👉 ஆனால் நன்மை செய்யும் பூச்சிகள் பற்றி அதிகம் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

👉 அப்படி நன்மை செய்யும் பூச்சிகள் இயற்கையாகவே ஒவ்வொரு வயலிலும் காணப்படும்.

👉 எனவே அந்த பூச்சிகளை அடையாளம் கண்டு, அவற்றை அழிக்காமல் பாதுகாக்க வேண்டும்.

வயலுக்கு நன்மை செய்யும் பூச்சிகள் :

தட்டான் இனங்கள்:

🐞 தட்டான் மற்றும் ஊசி தட்டான் போன்ற பூச்சிகள் வயல்களிலும், வானிலும், நீர்நிலைகளின் மீதும் பறந்து கொண்டே இருக்கும்.

🐞 இந்த பூச்சிகள் வயல்களில் பறந்துச் செல்லும் கொசு மற்றும் சிறு பூச்சிகளைப் பிடித்து உண்கின்றன.

🐞 தட்டான்கள் தனக்கான இரையை சுற்றிவளைத்து தேடும் திறன் கொண்டதால், வயல்களில் உறிஞ்சும் பூச்சிகள் மற்றும் இளம் புழுக்களை தேடிப்பிடித்து உண்ணும்.

பொறி வண்டு:

🐞 பொறி வண்டுகளில் தாய்ப் பூச்சிகள் பொதுவாக மஞ்சள் அல்லது சிவப்பு நிறத்தில் உடலில் கரும்புள்ளிகளுடன் காணப்படும்.

🐞 இதன் வாழ்நாள் 42 முதல் 70 நாள்கள். இந்த வண்டுகள் காய்ப் புழுக்கள், அதன் முட்டைகள், அசுவினி தத்துப் பூச்சிகள், வெள்ளை
அசாசின் வண்டு:

🐞 இந்த வண்டுகள் பொதுவாக நன்செய், புன்செய் பயிர்களில் திடீரென அதிகமாக காணப்படும்.

🐞 அசாசின் வண்டு கழுத்தில் 3 முட்டைகள் இருக்கும். இது 35 நாள்கள் வரை உயிர் வாழக்கூடியது.

🐞 இவைகள் அந்துப் பூச்சிகளையும், புழுக்களையும் தேடி அழிக்கும்.

🐞 உருவத்தில் தன் அளவை விட பெரியதாக உள்ள பூச்சிகளையும் தாக்கும் தன்மை கொண்டது.

சிலந்திகள்:

🐞 சிலந்திகளில் பல வண்ணங்களில் உள்ள பல வகையான சிலந்திகள் அனைத்தும் நன்மை செய்யக்கூடியவை.

🐞 இதுவும் உருவத்தில் தன்னை விட பெரிய பூச்சிகளையும் தாக்கி அழிக்கும் திறன் கொண்டது.

நீள கொம்பு வெட்டுக்கிளி:

🐞 இந்த பூச்சிகள், தன் உடலைக் காட்டிலும் சுமார் 2-3 மடங்கு நீளமுடைய கொம்பு போன்ற உணர் உறுப்பினைக் கொண்டு இருக்கும். இவைகள் பச்சை நிறமுடையது.

🐞 வெட்டுக்கிளி பொதுவாக மற்ற பூச்சிகளை மென்று விழுங்கும் வாய் உறுப்பைக் கொண்டது.

🐞 இவை பூச்சிகளின் முட்டைகள் மற்றும் தத்துப் பூச்சிகளை உணவாக உட்கொள்ளும்.

பெதிலிட்ஸ் குளவி:

🐞 பெதிலிட்ஸ் குளவிகள் கருப்புநிறம் உடையது. சிறு எறும்புபோல் இருக்கும்.

🐞 இந்த குளவிகள் காய்ப்புழுக்களை நினைவு இழக்கச் செய்து, அதன் மேல் தன் முட்டைகளை இட்டு இனப்பெருக்கம் செய்து, காய்ப்புழுக்களை அழிக்கின்றன.

டாகினிட் ஈ:

🐞 டாகினிட் ஈக்கள் 7 நாட்கள் வரை வாழக்கூடியது.

🐞 இவைகள் கருப்பு அல்லது கருநீலத்தில் இருக்கும்.

🐞 இவைகள் காய்ப்புழுக்களின் மேல் 2 முதல் 4 முட்டைகள் இடும்.

🐞 இந்த முட்டைகளில் இருந்து வெளிவரும் சிறிய புழுக்கள் காய்ப்புழுக்களஅழிக்கும்.

இந்த நன்மை தரும் பூச்சிகளை அடையாளம் கண்டு அவற்றை பாதுகாப்பதன் மூலம் வயல்களில் பயிர்களை தாக்கும் பூச்சிகளின் வளர்ச்சியை குறைக்க முடியும்.