பூச்சு வேலைக்கு பைசா செலவில்லை தேவையுமில்லை

பூச்சுவேலைக்கு பைசா செலவில்லை தேவையுமில்லை 
Agriwiki.in- Learn Share Collaborate

பூச்சு வேலைக்கு பைசா செலவில்லை

தேவையுமில்லை for ecofriendly_house

நானாவது வீட்டை பாக்க வர நட்புகள்,உறவினர்கள் வீட்டு உரிமையாளரை கிண்டல் பண்ணிருவங்களோ என்று கதவு மற்றும் ஜன்னல் முனைகள்,கூரைகள்,பீம்கள்,ஷெல்புகள் என்று சில இடங்கள் மட்டுமாவது பூசிவிடுவேன்.

சுவரையும் கொஞ்சம் மட்டமாக வேண்டும் என்பதற்காக “டேய் செங்கல்லை தூக்கு விட்டு கட்டு,லெவல் பாரு,ஒழுக்கமாக மட்டகோல் போடு என்று கத்தி கத்தியே நமக்கு பிபி எறிடும். 😂😂..செங்கல்லும் 10,12 ரூபாய்க்கு நல்ல கல்லாக வாங்குவேன்.

அதனால் செலவை குறைக்க முடியவில்லை🙄🙄🙄

இங்கு ஒரு சின்ன இடமும் பூசவும் இல்லை,சாதாரண கட்டுத்தான் இருந்தும் சுவரும் அவ்வளவு மட்டமாகவும் இல்லை,நல்ல முதல தர கல்லாகவும் தெரியவில்லை.ஆனால் வீடு பிரமிப்பாக இருக்கிறது.செலவும் இல்லை.இப்படித்தான் செலவு குறைக்கணும்😍😍😍😍😍😍💪💪

இத்தனை வேலைகள் செய்தும் இந்த மக்களை என்னால் இந்த முறைக்கு மாற்ற முடியவில்லை.ஏற்றுக்கொள்ளவும் வைக்கமுடியவில்லை.ஏதோ இந்த interlocking கற்கள் புண்ணியத்தில் வண்டி ஓடுகிறது.இப்படித்தான் வேண்டும் என்று சிலர் கேட்டாலும் வேலை பழுவுக்கு பயந்து ஒத்துக்கொள்வதும் இல்லை.இன்டெர்லோக்கில் எதிர்பார்க்கும் சுவர் அழகு கிடைப்பதால் பார்ட்டிகள் (முக்கியமாக வீட்டு பெண்கள்)ஹப்பி😊😊

ஒருவேளை இதுபோல இன்டீரியர் வேளைகளில் நான் கவனம் செலுத்தவில்லயோ? …அதுதான் காரணமா …யோசிக்கிறேன்🤔🤔🤔

கிடைக்கிற புகைப்படங்களை திருடி வந்தர்றேன்.என்னைக்கு நம்மளை எவனாவது வெச்சி செய்யபோரானோ தெர்ல…புகைப்படங்களை பார்த்து மனச தேத்திக்கோங்க😢😢

நன்றி…
ஹரி…