மண் கட்டுமானம்-Rammed earth

மண் கட்டுமானம் Rammed earth
Agriwiki.in- Learn Share Collaborate

இதுவரைக்கும் CSEB (compressed stabilized mud block) அல்லது SMB (stabilized mud block) என்ற வகை மண்கற்களை பற்றி உங்களிடம் நிறையவே பேசியிருக்கிறேன். இந்த மண் கட்டுமானங்களில் நீங்கள் – Adobe,SMB,Cob மற்றும் Rammed earth ஆகிய வார்த்தைகளை நீங்கள் ஏற்கனவே என் பதிவில் படித்திருப்பீர்கள். இந்தப்பதிவின் நோக்கம் உங்களை Rammed earth பற்றி மீண்டும் மறக்காமல் பரிச்சயப்படுத்துவது.

Rammed earth என்றால் என்ன? பெயருக்கு ஏற்றார்ப்போலே, மண்ணை இடித்து ஒரு ஸ்திரமான சுவரை உருவாக்குவது. சின்ன சின்ன கற்களால் சுவர் எழுப்பி நீங்கள் பார்த்திருப்பீர்கள். ஒரு வேளை அந்த சுவர் மொத்தமும் ஒரே கல் மாதிரி இருந்தால்? அது தான் சார் – Rammed earth

இந்த மண் கட்டுமானம் பற்றிய தேடல் ஆரம்பித்த பின்பு இந்த டெக்னாலஜி மேல ஒரு தனி ஈர்ப்பு உண்டு எங்களுக்கு. எப்படிடா இது? மண்ண மட்டும் இடிக்கற இந்த சின்ன விஷயத்த வச்சு, பெரிய சுவருங்க செய்ய முடியும். வீட்டுக்குள்ள ஒரு இதம் கொடுக்கும். பல நிறங்கள்ல, pattern கள்ல விதவிதமான சுவர் எழுப்பறதுக்கு இந்த டெக்னாலஜில அவ்ளோ scope இருக்கு.

மண்ண மட்டும் இடிக்கற இந்த சின்ன விஷயத்த வச்சு, பெரிய சுவருங்க செய்ய முடியுது, வீட்டுக்குள்ள ஒரு இதம் கொடுக்க முடியுது. பல நிறங்கள்ல, pattern கள்ல விதவிதமான சுவர் எழுப்பறதுக்கு இந்த டெக்னாலஜில அவ்ளோ scope இருக்குனு எங்களுக்கு ஒரே ஆச்சரியம் தான்.

இதப்பத்தி பேசின உடனே முதல்ல எல்லாரும் கேக்கற விஷயம். அது எப்படிங்க மண்ண இடிச்சு ஸ்ட்ராங்கா சுவர் கட்ட முடியும்னு?

இந்த டெக்னாலஜிய வெச்சு பற்பல காலகட்டங்களில் சில பல கிலோமீட்டருக்கு சீனப் பெருஞ்சுவர் கட்டிருக்காங்க. அதுவும் பல நூறு வருஷங்களா மண்ணரிப்ப கடும் தட்பவெட்ப நிலைகள்ல தாக்குப்பிடிச்சுருக்கு.

ம்ம்ம்…பேசுவோம்
HARI

One Response to “மண் கட்டுமானம்-Rammed earth”

  1. சார், மரபு கட்டிட தொழில் நுட்பத்தை நான் கற்று கொள்ள முடியுமா ? நான் எனக்காக ஒரு வீட்டை கட்டி கொள்ள விரும்புகிறேன். நன்றி .
    தாமோதரன்
    99941 54370