மாற்றுக்கட்டுமானத்தை ஏன் இஞ்சினியர்களும் பின்பற்றுவதில்லை

மாற்று கட்டுமானங்கள் ஏன் இன்னும் மாற்று கட்டுமானமாகவே இருக்கிறது??? மாற்றுக்கட்டுமானத்தை ஏன் நிறைய ஆர்கிடெக்ட்களும் இஞ்சினியர்களும் பின்பற்றுவதில்லை
Agriwiki.in- Learn Share Collaborate

#why_alternate_building_still_be_an_alternate???

மாற்று கட்டுமானங்கள் ஏன் இன்னும் மாற்று கட்டுமானமாகவே இருக்கிறது???

மாற்றுக்கட்டுமானத்தை ஏன் நிறைய ஆர்கிடெக்ட்களும் இஞ்சினியர்களும் பின்பற்றுவதில்லை?

இந்தப்பதிவில் மாற்றுக்கட்டுமானத்தை ஏன் பெரும்பாலான இஞ்சினீயர்கள் மற்றும் ஆர்கிடெக்ட்கள் இதனை பின்படுத்துவதில்லை என்று ஆராயலாம்.

இதில் உள்ளவர்களை மூன்று ரகமாக பிரிக்கலாம் – பில்டர்கள் அல்லது ப்ரமோட்டர்கள், இஞ்சினியர்கள் மற்றும் ஆர்கிடெக்ட்கள்.

முதலில் பில்டர்களின் கதையைப் பார்க்கலாம். இவர்கள் தான் கடைசியாக இந்த மாற்றுக்கட்டுமான வண்டியில் ஏற முடியும். எப்படியாவது குறைந்த நேரத்தில் நிறைய யூனிட்களை இவர்கள் விற்றாக வேண்டும். மார்க்கெட் ல பெரிய்ய டிமாண்ட் இல்லாம இவங்க ஏன் இந்த மாதிரி கட்டிடங்கள கட்டணும்? மக்களோட ரசனைய மாற்ற முயற்சிக்காம,என்ன எதிர்பாக்குறாங்களோ அத கொடுத்து வேலைய முடிக்கறது தான் அவங்களுக்கு நிம்மதி. கோடியா கோடியா பணத்த போட்டு, மக்களுக்கு புரிய வச்சு,நிதானமா வித்து, கல்லா கட்டி…. இதுலாம் நடக்கறதுக்குள்ள பொறந்த நாள் கண்டிரும். பிரம்மாண்டம் தான் அவங்க பலம். அந்த பலமே அவங்களுக்கு பலவீனம்ங்கறது தான் உண்மை. அதாவது குப்பை படம் எடுத்தாலும் அதுக்குன்னு ஒரு மார்க்கெட் வேல்யூ இருந்தா தயாரிப்பாளருங்க அங்க தான் படை எடுப்பாங்க. அது தான் மினிமம் க்யாரண்டி. அது தானங்க வணிகம். ரசனைய மாத்த முயற்சி பண்ணி எந்த காலத்து ல கல்லா கட்டுறது? பெரிய பெரிய கட்டுமான நிறுவனங்கள் இந்த மாதிரி கட்டிடம் கட்ட ஆரம்பிச்ச அப்புறம் தான் நீங்க கட்டணும்னு நினைச்சீங்கன்னா – சப்பாணிக்கு காத்திருக்கற மயில் மாதிரி ஆகிடும் உங்க நிலைமை!

அடுத்து இஞ்சினியர்

இதப்பத்தி 5 வருஷம் முன்னாடி என் நண்பன்கிட்ட சொன்னபோது அவனுக்கு இதப்பத்தி சுத்தமா தெரியல. கேரளா ஸ்டைல்ல செங்கல வெளில பூசாம விட்டுட்டா அது தான் கிரீன் பில்டிங்னு நினைச்சுட்டு இருந்தான். பில்லருங்க இல்லாம சுவரே லோடு எடுத்தா பூகம்பத்துல தாங்காதுன்னு சொன்னான். சின்ன வயசுலயே சிவில் தான் படிக்கணும்னு ஆசைப்பட்டு படிச்சவனுக்கு, தொழில் செய்யணும்னு புரிஞ்சுக்கிட்டு வேலை கத்துக்கிட்டவனுக்கு, பல அடுக்குகள் கொண்ட பெரிய ஐ.டி நிறுவனங்கள் கட்டுமானத்த தனியா சமாளிச்சவனுக்கு இந்த விஷயங்கள் புலப்படலன்னு எனக்கு ஒரே ஆச்சரியம். கொஞ்ச்ம் கொஞ்சமா நான் சொன்ன விஷ்யங்கள்-லாம் படிச்சான். நிறைய ட்ராவல் பண்ணினோம். அதுக்கு அப்புறம் அவன் சொன்னான் – டேய் காலேஜ் ல இது லாம் ஒண்ணு கூட சொல்லியே தரலயேன்னு. இத ஏன் சொல்றேன்ன்னா – இதுல பெரும்பாலான மக்கள் மாதிரி தான் இஞ்சினியர்களும். சொல்லித் தரல. கத்துக்கற மாதிரி சூழல் வேலை செய்யற எடத்துலயும் கிடையாது. அப்புறம் எப்படிங்க எல்லா இஞ்சினியர்களுக்கும் இத பத்தி தெரியும்

பெரிய இஞ்சினியர்ன்னா இன்னும் சிக்கல். அவங்க படிக்கற காலத்துல லாம் சுற்றுச்சூழலுக்கும் கட்டுமானத்துக்கும் சம்பந்தம் இருக்குன்னே யாருக்கும் தெரிஞ்ருக்காது!

ஒரு வாட்டி எங்க க்ளையண்ட் ஒரு பெரிய அரசாங்க இஞ்சினியர்க்கிட்ட இத பத்தி கேட்டாரு. கிட்டத்தட்ட 30 வருஷத்துக்கு மேல அனுபவம் அவருக்கு. அவர் உடனே-அது லாம் கூரை வீக்கா இருக்கும் சார். மாடி ல ஒரு விழா வச்சா விழுந்துடும்ன்னு சொன்னாரு. அப்போ அவருகிட்ட – சார், ஒரு நகரமே மண்ணுல கட்டுன வரலாறு தெரியுமானு கேக்கல. சீனப்பெருஞ்சுவரோட நிறைய இடங்கள்ல மண்ணால தான் கட்டிருக்காங்கன்னு சொல்லல நான். அப்போ தான் புரிஞ்சுது. நம்ம தேடலும் கத்துக்கறதும் தான் முக்கியம். இத தெரிஞ்சவங்க கிட்ட தான் இத கத்துக்க முடியும்ன்னு. இஞ்சினியர்ங்கற அனுபவம் இது ல பிரச்சனை தான்ன்னு.

ஒரு டாக்டருக்கு உணவு,ஃபிட்னஸ், பாடி கைனெட்டிக்ஸ் பத்தி லாம் தெரியணும்னு அவசியம் இல்ல.அதுக்குன்னு வேற ஆளுங்க இருக்காங்க. ஆனா நாம தான் டாக்டர்னா இதுல எக்ஸ்பெர்ட்ன்னு நினைக்கிறோம்.

இந்த ஐடியாவ மக்கள் கிட்ட கொண்டு போய் சேர்க்கற சான்ஸ் அதிக பட்சம் ஆர்கிடெக்ட்ஸ் கிட்ட தான் இருக்கு. இவங்க பாட திட்டங்கள்ல இப்போ இதுக்குன்னு முக்கியத்துவம் குடுக்க ஆரம்பிச்சுருக்காங்க. ஒரு 50 பேர் படிக்கற இடத்துல ஒரு 2 -3பேர் இந்த பாதைய தேர்ந்தெடுக்கற மாதிரி தோணுது. ஒரு நல்ல டிசைனர் இந்த இலக்கணத்த புரிஞ்சுக்கிட்டு இன்னும் கொஞ்ச வருஷங்கள்ல கட்டிடங்கள நீங்க நினைச்சு பாக்க முடியாத அளவுக்கு அழகா வடிவமைக்க முடியும்.

ஸ்குயர் ஃபீட் என்ன விலைன்னு மட்டுமே பிரதானமா இருக்கற இந்த மார்க்கெட்ல, நாங்க எல்லாருமே சந்தை ல என்ன விலை போகுதோ அத கொடுக்கறது தானே இயல்பு. நீங்க EMI கட்டுற மாதிரி தானே நாங்களும் கட்டணும்:)

அதுனால இந்த ஐடியா வளரணும்னா அது டிமாண்ட் சைட் ல தான் நிறைய மாறணும்னு நினைக்கறேன். இப்படித்தான் வீடு கட்டிக்கொடுங்கன்னு மக்கள் நிறைய பேர் கேக்க ஆரம்பிச்சா இத செஞ்சு கொடுக்கற சப்ளை சைட் தன்னை மாத்திக்கும். இது தான் சந்தைப்போக்கோட இயல்பு

பேசுவோம்.
Hari Prasath