மாற்று கட்டுமானமும் மக்களின் மனநிலையும்

Agriwiki.in- Learn Share Collaborate

மாற்று கட்டுமானமும் மக்களின் மனநிலையும்

சமீபத்தில், எங்கள் க்ளையண்ட் ஒருவரிடம் பேசும்போழுது சொன்னார் –

நீங்க எவ்ளோதான் சொல்லி புரியவெச்சாலும், யாரையும் மாத்த முடியாதுங்க. ரொம்ப நாளா ஒரே மாதிரி யோசிச்சு மைண்ட் ஃபிக்ஸ் ஆகிருக்கும். நீங்க எடுக்கற முயற்சிலாம் பிரயோஜனம் இல்லாமயே போய்டும்னு சொல்லாம சொன்னாங்க. அவருக்கு நாங்கள் ஆரம்பத்திலிருந்து  இதற்கான முயற்சிகள் எடுக்கும் போதிலிருந்தே அவர் எங்களை கவனித்து வருகிறார். ஒரு வெல்விஷராக எங்கள் மீதான அக்கறை தான் அப்படி வெளிப்படுகிறது என்று எனக்கு தோன்றுகிறது.

அவர் சொல்வது சரி தானா? இது நடுநிலையான ஒரு புரிதல் என்று எடுத்துக்கொள்ளலாமா?

பல ஆண்டுகளாக கண்டிஷன் செய்யப்பட்ட எண்ண ஓட்டத்தோடு போராடுவது அவ்வளவு எளிதல்ல. அதை நாங்கள் புரிந்தே இருக்கிறோம். இதை விளக்க ஒரு சுவாரஸ்யமான கதை உண்டு. டெட்டால் -சாவ்லான் மோதிய வரலாறு.

இதை புரிந்து கொள்ள கொஞ்சம் வரலாறு முக்கியம். ஆன்டிசெப்டிக் (Antiseptic) என்றால் நம் எல்லாருக்கும் நினைவுக்கு வருவது டெட்டால் மட்டுமே. அத்தனை பழமை வாய்ந்த வரலாறு அதற்கு.

என்னடா இவன், ஆளில்லாமயே ஆட்டத்தில் ஜெய்க்கிறானே என்று ஜான்சன் அன்ட் ஜான்சன் நிறுவனம் 1993 இல் இந்தியாவில் சாவ்லானை களமிறக்கியது. ச்சும்மா இல்லீங்க.. மார்க்கெட் ல எல்லா ஆய்வையும் செஞ்சிட்டு தான்.. அவை என்னென்ன?

பரிசோதனைக்கூடங்களில் டெட்டாலை விட சாவ்லான் பலவகை கிருமிகளை நாசம் செய்வதில் கில்லாடி என்று நிரூபணமான பின்.

அதன் வாசனை டெட்டாலை விட பெட்டர் என்று சந்தை ஆய்வுகள் முடிவு வந்த பின்.

இதை எல்லாவற்றையும் விட அவர்கள் நம்பிக்கையாக இருந்தது 3வது காரணத்தில் தான். டெட்டாலை மருந்தின் மீது போட்ட உடன் இதுக்கு புண்ணே மேல் என்று எரிஞ்சு தள்ளும். காசு கொடுத்து வாங்கிற கஸ்டமருக்கு வலிய ஏன் பரிசா குடுக்கணும்னு சொல்லி சாவ்லான் போட்டா எரியாத மாதிரி ஒரு ஃபார்முலாவ கண்டு பிடிச்சாங்க.

இத விட என்னங்க வேணும். எல்லா விதத்துலயும் டெட்டாலை விட பெட்டர். வலிக்கவே வலிக்காது. ஜான்சன் ஜான்சன் எவ்ளோ பெரிய நிறுவனம். எவ்ளோ விளம்பரம் பண்ணலாம்? இது போதாத இந்த ப்ராண்ட் வெற்றி பெற? லட்ச லட்சமா செலவழிச்சு களமிறங்கிச்சு ஜான்சன் அன்ட் ஜான்சன். மெகா சொதப்பல் ஆனது தான் பிச்சம்.. எங்க தான் தப்பு நடந்துச்சுனு பண்ணின ஆய்வுல தெரிய வந்த விஷயம் என்ன தெரியுமா?

பல வருஷ டெட்டால் விளம்பரத்துல மனசுல பதிஞ்ச அந்த விஷயம் – அண்டிசெப்டிக் போடும்போது எரியணும். எரிஞ்சா தான் அந்த மருந்து வேலை செய்யுதுனு மக்கள் நம்பினது. சாவ்லான் போட்டா மருந்து வேலையே செய்யாதுனு முடிவு பண்ணிட்டாங்க! மக்கள் நினைக்கறது தான் இங்க நிக்கும். உண்மையாவது வெங்காயமாவது.

எது அவங்க பலம்னு நம்பினாங்களோ அது தான் அங்க பிரச்சனையே.

இதுக்கும் மாற்றுக்கட்டுமானத்துக்கும் என்னங்க சம்பந்தம்?

என்னதான் 50-60 வருஷத்துக்கு முன்னாடி சிமெண்ட் கான்கிரீட் லாம் வந்துருந்தாலும், என்னதான் ஆயிரமாயிரம் ஆண்டுகளா மண்ண வைச்சு வீடுகள் கட்டி நாகரீகங்களே தழைச்சிருக்குனு வரலாறு சொன்னாலும்.. உங்க வீட மண்ல கட்டமுடியும்னு சொன்னா ஒரு பயம் வருதுல்லீங்களா? அது தான் நிதர்சனம். அந்த எண்ண ஓட்டம் சில பல வருடங்களா நீங்க எங்க திரும்பினாலும் பெரிய பெரிய விளம்பரங்கள் மூலமா பல கம்பெனிங்க உங்களுக்குள்ள ஊட்டினது. அந்த நம்பிக்கைக்கு எங்கள விட வயசு அதிகம்னா, எங்க க்ளையண்ட் சொன்னதுல கொஞ்சம் நிறைய உண்மை இருக்குனு ஒத்துக்கிட்டு தான் ஆகணும்.

ஆனா அவங்க சொன்னது முழு நிலைமையும் பிரதிபலிக்குதுனு எனக்கு தோணல. ஏன்?

ஒண்ணு – உலகத்தையே மாத்திக்கட்டறோம்னு லாம் நாங்க சவால் விடல. ஒரு வேலை செய்யறோம். அத ஏன்,எதுக்கு,எப்படினு புரிஞ்சுக்கிட்டு அத தேவைனு சொல்ற ஆளுக்கு செஞ்சு கொடுக்கணும். அத ஒழுங்கா செஞ்சாலே எங்களுக்குனு ஒரு சின்ன வட்டம் இருக்கும்.

ரெண்டு – இப்படி சொன்னவங்க என்ன மட்டும் தான் பாத்துட்டு இப்படி சொல்றாங்க. இந்த ரெண்டு வருஷ தேடல் எங்களுக்கு கற்றுகொடுத்தது என்னன்னா இந்த சித்தாந்தத்துல (எங்கள மாதிரி?) நிறைய பசங்களுக்கு நம்பிக்கை இருக்கு. இதே எண்ணத்தோட நிறைய ஆர்கிடெக்ட்களும் இஞ்சினியர்களும் இன்னும் 5-10 வருஷத்துல வருவாங்க.. இன்னிக்கு பசுமை பத்தி பேசுறது ஃபாஷனா இருக்கற நிலைமை வர்ற காலங்கள்ல ஒரு தேவையா மாறும்னு நம்பறோம்.

போக வேண்டிய தூரம் நிறைய இருக்கு. பாதையே இல்லாத இடத்துல தான் ரோடு போட முயற்சி பண்றோம். சிரமம் தான். முடியாத விஷயம் இல்லையே!

வாழ்க்கைன்ற சக்கரமே நம்பிக்கைன்ற அச்சாணில தானே சார் சுழலுது 

நடப்பதெல்லாம் நன்மைக்கே…
உங்கள் அன்புடன்
ஹரி…