வாப்சா என்பது என்ன

ஏன் பயிர் சுழற்சி அவசியம்?
Agriwiki.in- Learn Share Collaborate

வாப்சா என்பது என்ன?

வாப்சா என்பது என்ன – மண்ணில் இரண்டு மண் துகள்களுக்கு இடையே வெற்றிடங்கள் உள்ளன. இந்த வெற்றிடங்களில் 50 சதவீதம் நீராவி மற்றும் 50 சதவீதம் காற்று உள்ளது.

வாப்சா வரையறை

இயற்கையான மண்ணில் இரண்டு மண் துகள்களுக்கு இடையே வெற்றிடங்கள் உள்ளன. இத்ந வெற்றிடங்களை வாக்கியோல் என்கிறோம் இந்த துவாரங்களின் மிகப்பெரிய வலைப்பின்னல் மண்ணமைப்பில் உள்ளது.
இந்த வெற்றிடங்களில் தண்ணிர் இல்லை. இந்த வெற்றிடங்களில் 50 சதவீதம் நீராவி மற்றும் 50 சதவீதம் காற்று உள்ளது. இந்த முழு சூழ்நிலைகளும் சேர்ந்ததே வாப்சா ஆகும். (வாப்சா என்பது பாலேகர் ஐயா கொடுக்கப்பட்ட சமஸ்கிருத சொல்)

வேர்களுக்கு தண்ணீர் தேவைப்படுவதில்லை

வேர்களுக்கு தண்ணீர் தேவைப்படுவதில்லை அவைகளுக்கு நீராவிதான் தேவைப்படுகிறது. மண் துகளின் பரப்பு இழுவிசையினால மண் துகளின் மேல் மண்துகளின் மேல் பரப்பில் இரண்டு அடுக்குகள் ஏற்படுகின்றன, மண் பரப்பில் ஒரு அடுக்கும் (இரண்டாவது அடுக்கு) அதற்கு மேல் ஒரு அடுக்கும் (முதல் அடுக்கும்) உள்ளது, இந்த இரண்டு அடுக்குகளுக்கும் இடையில் ஒரு வெற்றிடம் அல்லது இடைவெளி உள்ளது.

இண்டாவது அடுக்கின் மேல்பரப்பில் நுண்ணுயிர்கள் வாழ்கின்றன. உணவையும் ஈரப்பதத்தையும் எடுக்கும் நுண்ணிய வேர்கள் இரண்டாவது அடுக்கைத் தொட்டுள்ளது. மண் துகளின் மேல் பரப்பிற்கும் முதல் அடுக்கிற்கும் இடையே தண்ணீர் இல்லை காற்று மட்டும் இருக்கிறது, அப்படி என்றால் வேருக்கு அருகில் தண்ணீரே இல்லை.

வேர்தூவிகள் இரண்டாவது அடுக்கில் இருந்து நீராவி, பிராணவாயு மற்றும் ஊட்டசத்துகளை எடுக்கிறது, இதுதான் தாவர உடலின் இயற்கையான அமைப்பு இந்த தன்மையை வாப்சா என்கிறோம்.

நுண்ணுயிர்களுக்கும் வேர்களுக்கும் ஆக்சிஜன்

நுண்ணுயிர்களுக்கும் வேர்களுக்கும் ஆக்சிஜன் தேவை. வாய்க்கால் பாசனம் அல்லது சொட்டுநீர் பசானம் செய்தாலும் கூடுதல் தண்ணீர் கொடுக்கிறோம். பாசன நீர் அல்லது மழை நீர் தண்டிற்கு அருகில் தேங்கும் போது அந்த தண்ணீர் இந்த வெற்றிடங்களில் இறங்குகிறது. மண்ணின் கொள்ளளவுக்கு அதிகமாக தண்ணிர் சேர்கிறது.

வெற்றிடம் முழுவதும் இந்த தண்ணீரால் நிரம்புகிறது. மேலும் காற்று முழுவதும் வெளியேற்றப்படுகிறது. இந்த துவாரங்கள் முழுவதும் நீரால் நிரப்புகின்றன. இப்போது மண்துகளுக்கும் இடைவெளியிலும் காற்றே இல்லாமல் போகிறது, எனவே வேர்கள் அழுகுகின்றன. ஆக்சிஜன் இல்லாததால் நுண்ணுயிர்கள் மடிகின்றன.

இதனால் தாவரத்திற்கு உணவு கிடைப்பதில்லை, எனவே இலைகள் மஞ்சளாகிறது, இலை முழுவதும் காய்ந்து விடுகிறது, பழங்கள் கிழே விழுகிறது, மரமும் காய்ந்து விடுகிறது.

உதாரணம் (படம் 2) மண் சமதளமாக இல்லாமல் இருந்தால் பள்ளத்தில் நீர் தேங்கும் போது பள்ளத்தில் உள்ள செடிகள் இறந்து விடுவதை பார்த்திருப்பீர்கள்.

நண்பகல் 12 மணிக்கு மரங்களில் நிழல் விழும் எல்லையில் வேர்களில் வாய் (வேர்தூவிகள்) உள்ளது. தண்டிற்கு அருகில் வேர்களின் கால் (அடிவேர்) உள்ளது, நாம் பாசன நீரை மரக்குடை எல்லையில் கொடுத்தால் வாப்சா உருவாகாது ஏனெனில் வேரின் வாயில் நீங்கள் ஊற்றுகிறீர்கள்.

வேர்களின் உரிமை

எந்த அளவு வாப்சா தேவை என்ற முடிவை வேர்கள் எடுப்பதில்லை அந்த முடிவை நீங்கள் எடுக்கிறீர்கள், எவ்வளவு தணணீரும் எவ்வளவு உணவும் எடுக்க வேண்டும் என்பது வேர்களின் உரிமையாகும்.
அதன்படி நாம் தண்ணீரை மரக்குடை எல்லையில் இருந்து ஆறு அங்குல தூரம் வெளிளில் தள்ளி கொடுத்தால் அந்த வேர்களுக்கு எவ்வளவு தண்ணீர் தேவையே அதை எடுத்துக்கொள்ளும்.
அப்படியானால் மரக்குடை எல்லையில் கொடுத்தால் வேர்கள் அருகில் உள்ள பூஞ்சைகள் மூலம் வேர்கள் அழுகிவிடும், ஆனால் நாம் பாசன நீரை மரக்குடை எல்லையில் இருந்து 8 அங்குலம் வெளியே  கொடுத்தால் வாப்சா சரியாக இருக்கும், தாவரமும் வீரியமாக வளரத் துவங்கும்.

மழைக்காலத்தில் வாப்ஸா

மழைக்காலத்தில்  மழைநீர் அல்லது பாசன நீர் நிழற்குடைக்கு கீழே தண்ணீர் சேர்கிறது அப்போது பைட்டோப்தோரா பூஞ்சையால் வேர்கள் அழுகிவிடும். இந்த சேதத்தை தவிர்ப்பதற்கு மரத்தின் தண்டின் அருகே மண்ணின் சரிவாக போடவேண்டும் அப்போது மழைநீர் வெளியே வந்துவிடும்.

ஆனால் வேரின் அருகில் அதிகப்படியான கூடுதலான ஈரப்பதம் இருந்தாலும் வாப்சா பராமரிக்கப்படாது. அதனால வாய்க்கால வெட்டு தண்ணீரை வெளியேற்ற வேண்டும், வாய்க்கால் வெட்டும் போது மரக்குடை எல்லையில் இருந்து 6 அங்குலம் வெளியே வாய்க்கால் வெட்டினால் கூடுதல் தண்ணீர் உடனடியாக வாய்க்காலில் வந்துவிடும்.

சொட்டு நீர் பாசனம், தெளிப்பு நீர் பாசனம்

சொட்டு நீர் பாசனத்தில் ட்ரிப்பர் வழியாக வேர் பகுதிக்கு அருகில் தண்ணீர் விழுகிறது. கூடுதல் தண்ணீர் வேர்பகுதிக்கு அருகில் தேங்குகிறது இதனால் வாப்சா உருவாகாது, ஏனெனில் ட்ரிப்பர் தணணிர் பக்கவாட்டில் எல்லா திசைகளிலும் பரவுவதில்லை, என்பதால் நோய் ஏற்பட வாய்ப்புள்ளது, அப்போது ட்ரிப்பரை மூடாக்கு மேல் வைத்தால தண்ணீர் எல்லா திசைகளிலும் பரவும்.

சொட்டுநீர் பாசனத்தைவிட தெளிப்பான் முறை பாசனமே சிறந்தது. வாப்சா பராமரிப்பதும் சுலபம். சொட்டுநீர் பாசனத்தின் மூலம் 50 சதவீதம் தணணீரை மிச்சமாகிறது கூறுகிறார்கள், சுபாஷ் பாலேக்கர் விவசாய முறையில் 90 சதவீதம் தண்ணீர் சேமிக்கிறோம், சொட்டுநீர் பாசனம் எதற்கு?

முடிவு

1. வாப்சா உருவாக மூன்று விஷயங்கள் தேவைப்படுகின்றன. வடிகால்களை மரக்குடை எல்லைக்கு வெளியே 6 அங்குல தள்ளி எடுக்கவும்.
2. மரக்குடை எல்லையில் இருந்து தண்டுவரை மண்ணை மேடாக உயர்த்தவும்.
3. சொட்டுநீர் குழாய் மூடாக்கின் மேல் இருக்க வேண்டும்.
4. தணணீர் செல்லும் அளவை குறைக்கவும்.
5. மண்ணிர் நிர் ஆவியாவதைக் குறைக்க மூடாக்கு இடவும்.

நீர் மேலாண்மை

1. எந்த ஒரு தாவரத்தின் பச்சை இலையும் உணவை உற்பத்தி செய்யும் தொழில் கூடமாகும் அந்த உணவு தண்டு, பழம் மற்றும் விதைகளில் சேமிக்கப்படுகிறது.

2. உற்பத்தி செய்யும் உணவு முழுவதும தண்டில் சேமிக்கப்பட வேண்டும். அதனால் அதிக விளைச்சல் கிடைக்கும், 100 கிலோ உணவு தண்டீல் சேமிக்கப்பட்டால் 50 கிலோ உற்பத்தி கிடைக்கிறது. இது தண்டின் பருமனைப் பொருத்தே உணவு சேமிக்கப்படுகிறது.
அதாவது தண்டின் பருமன் எந்த அளவு இருக்க வேண்டும் என்றால் உற்பத்தியாகும் உணவு முழுவதும் தண்டில் சேமிக்கும் வகையில் இருக்க வேண்டும்.

3. இலைகள் 100 கிலோ உணவ உற்பத்தி செய்யும் திறன் தண்டுக்கு இருந்தாலும், 70 கிலோ உணவை மட்டுமே தண்டால் சேமிக்க முடியும் என்றால் இலைகள் 75 கிலோ உணவை மட்டும் உற்பத்தி செய்யும், இதனால் நமக்கு 35 சதம் விளைச்சல் மட்டும் கிடைக்கும்.

அப்படியானல் இலைகள் தயாரிக்கும் உணவு முழுவதையும் தண்டில் சேமிக்க தண்டின் பருமனை அதிகரிக்க வேண்டும்.

வேரின் பருமன் அதிகரிக்கும் போது தானாகவே தண்டின் பருமனும் அதிகரிக்கிறது. அதாவது தண்டின் பருமனை அதிகரிக்க நாம் வேரின் பருமனை அதிகரிக்க வேண்டும்.

வேரின் நீளம் அதிகரிக்கும் போது தானாகவே வேரின் பருமனும் அதிகரிக்கும். எனவே தண்டின் பருமனை அதிகரிக்க வேரின் நீளத்தை அதிகரிக்கும்.

நாம் பாசன நீரை மரக்குடை நிழலிருந்து 6 அங்குலம் வெளியே வாய்க்கால் எடுக்கும் போது வேர்களின் நீளம் தன்னால் அதிகரிக்கும். அதோடு வேர்களின் பருமனும் அதிகரிக்கும்.

வேரின் பருமன் அதிகரிக்கும் போது தானாக தண்டின் பருமன் அதிகரிக்கும், தண்டின் பருமான அதிகரித்தால் மரத்தின் உயரம் அதிகரிக்கும்.

மரம் பெரிதானால் மரக்குடை அதிகரிக்கும் கிளைகளின் எண்ணிக்கை அதிகரிக்கும், இலைகளில் எண்ணிக்கையும் அதிகரிக்கும். இதனால் ஒளிச்சேர்க்கைக்கான பரப்பளவு அதிகரிக்கும் எனவே உணவு உற்பத்தி அதிகமாகும், இதனால் பழங்களில் உற்பத்தி அதிகமாகும்.

Subash பாலேக்க இயற்கை விவசாயப் பயிற்சி
ஈஷா விவசாய இயக்கம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.