வீடு கட்டும் செலவை குறைக்க

வீடு கட்டும் செலவை குறைக்க
Agriwiki.in- Learn Share Collaborate

வீடு கட்டும் செலவை குறைக்க பவுண்டேசன் எனப்படும் கடைக்கால் அமைப்பு மற்றும் பேஸ்மென்ட் எனப்படும் அடித்தள அமைப்பு இரண்டையும் எவ்வாறு அமைப்பது என்பதை பார்க்க போகிறோம்.

நம் பாரம்பாரிய கட்டிடங்களில் அனைத்திலும் கடைக்கால் இடுவதற்கு பெரும்பாலும் மணலை பயன்படுத்தினர்.காரணம் மனலுக்கு அதிக எடை தாங்கும் திறன் இருக்கிறது.இது கடைக்காளுக்கு அடியில் உள்ள மண்ணின் ஏற்ற இரக்கங்களை சரி செய்து வாகனத்தில் சஸ்பென்ஷன் அமைப்பு செயல்படுவதை போல செயல்படுகிறது.

(எ.கா )தஞ்சை பெரிய கோயிலின் கோபுரத்தின் அடியில் மணல் 4 அடிக்கு கொட்டப்பட்டு உள்ளது.

ஒரு ரயில் பெட்டியின் எடை 20 முதல் 30 டன்ங்கள். அவ்வளவு எடையையும் அதிர்வையும் தாங்க கூடியது அதற்கு அடியில் கொட்டப்பட்டுள்ள ஜல்லி கற்கள் தான்.

அதே போல L & T   சாலை கட்டுமான நிறுவனம் தான் அமைக்கும் சாலைகளுக்கு ஜல்லி மற்றும் ராக் டஸ்ட் எனப்படும் பாறை துகள்கள் கலந்த கலவை 1 அடிக்கு அமைத்து அதன் மீதே தார் ஊற்றுவதை பார்க்கலாம். அதனால் தான் அவர்களின் சாலைகள் தரமானதாக இருக்கிறது.

மணல் என்பது fine agreegate  ஜல்லி என்பது coarse aggregate

லாரி பாக்கர் தான் கட்டிய கட்டிடங்களுக்கு முதலில் 1.5 அடி அகலம் 2.5 அடி ஆலம் ஆழம் குழி எடுத்து 1 அடிக்கு ஜல்லி கற்களை கொட்டி விடுவார். மணல் அதிக விலை என்பதால் அதற்கு பதில் ஜல்லி கற்கள் அல்லது பாறைதூளை பயன்படுத்தலாம். அதன் மீது rr எனப்படும் ரப்பு கல் அடுக்கி பாறை தூளை (ராக் டஸ்ட்) நீரை கொண்டு நிரப்பி விடுவார். இதன் மூலம் பெரிய கற்களுக்கு இடையே உள்ள இடைவெளி சிறிய கற்களாலும் சிறிய கற்களுக்கு உள்ள இடைவெளி பாறை துளால் பேக் செய்யப்படுகிறது.  இதே போல அடுத்த மட்டம். பாறை தூளுக்கு பதிலாக செம் மண்ணையும் பயன்படுத்தலாம்.

ஒரு சதவிகிதம் கூட சிமெண்ட்டை பயன்படுத்தாமல் உங்கள் வீட்டின் கடைக்காலை மிக வலிமையாக இவ்வாறு அமைக்க முடியும்.  இது அதிக எடை தாங்கும் திறனைக் கொண்டது.

இதன் மூலம் லாரி பேக்கர் ஐந்து அடுக்கு மாடி வரை கட்டியுள்ளார்.

இதேபோல வீட்டின் பேஸ்மென்ட் அமைப்புக்கும் இதே ரப்புகல் மற்றும் பாறைத்தூள் சிமெண்ட் கலவை அல்லது செம்மன் கொண்டு கட்டிவிடலாம். செம்மண்  கொண்டு கட்டும்பொழுது கற்களுக்கு இடையேயான சந்தினை மட்டும் சிமெண்டு பூச்சு செய்துவிடுவார்,  இதனால் செம்மண் நீரில் கரைவது தடுக்கப்படுகிறது.

ரப்புகல் மூலம் பேஸ்மெண்ட் கட்டும்பொழுது உள் வரிசைக்கும் வெளி வரிசைக்கும் இடையே நல்ல பிணைப்பு கிடைப்பதால் நடுவில் சிமெண்ட் கரைத்து விடுவது தேவையில்லாதது.

சைஸ்கல் மூலம் கட்டப்படும் கட்டிடங்கலுக்கு தான் உள் வரிசைக்கும் வெளி வரிசைக்கும் இடையே பிணைப்பு இல்லாததால் சிமெண்ட் கரைத்து விடப்படுகிறது

கீழே இம்முறையில் கடைக்கால்  மற்றும் அடித்தளம் அமைக்கப்பட்ட கட்டிடங்களின் புகைப்படங்களை பகிர்ந்துள்ளேன்.

 

தொடரும்……
உங்கள் ஆதரவுடன் நான் ஹரி