வேளாண் கருத்தரங்கில் பேசிய முக்கிய கருத்துகளின் விபரம்

Agriwiki.in- Learn Share Collaborate

அனைவருக்கும் வணக்கம்

இன்று வேலூர் மாவட்டம் விஐடி பல்கலைக்கழகத்தில் நடந்த வேளாண் கருத்தரங்கில் பேசிய முக்கிய கருத்துகளின் விபரம்

1. தமிழகத்தில் பரவலாக குறைந்த மழை அளவு இருப்பதால் எதிர்வரும் ஒன்பது மாத அதிக வெப்பமான சூழ்நிலைய மனதில் கொண்டு  நீர் சிக்கனத்தை கடைபிடிக்க வேண்டும்.
2. அதிக தண்ணீர் இருந்தாலும் நிலத்திற்கு ஏற்றவாறு குறைந்த தண்ணீரை அல்லது சரியான தண்ணீர் அளவை பயன்படுத்தலாம்
3. சொட்டுநீர் பாசனம் அமைப்பு அமைத்துக் கொள்வது நல்லது
4. மழைக் காலம் மற்றும் பணி காலங்களில் அழுகல் அதிகமாக இருக்கும் என்பதால் குறைந்த விலையில் உள்ள உயிர் பூஞ்சான கொல்லிகளையும் பூச்சிகள் புழுவுக்கு எதிராக இயற்கை மற்றும் உயிர் திரவங்களை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
5. உயர்ந்து வரும் உற்பத்தி செலவிற்கு ஏற்ப விளைச்சலை அதிகப்படுத்திக் கொள்ள வேண்டும். இந்த எண்ணம் மிகவும் முக்கியம்.விவசாயம் வெற்றி பெற்றால் மட்டுமே எதிர்கால சந்ததியினர் விவசாயத்தில் கால் பதித்து நிற்பார்கள்.
6. களைக்கொல்லிகள் பயன்படுத்துவதை விட இயற்கை இடு பொருள்களின் அளவினை கூட்டிக் கொள்ளலாம்
7. இயந்திரங்கள் கொண்டு களை எடுப்பது மிகவும் நல்லது
8. மண்ணுக்கேற்ற தண்ணீருக்கேற்ற விவசாயம் மட்டும் பண்ணலாம்.
9. மண் பரிசோதனை மற்றும் தண்ணீர் பரிசோதனை மிகவும் முக்கியம். அதனைப் பொருத்து மட்டுமே இடுபொருள்கள் கொடுக்க வேண்டும்.
10. தரமான ஏற்கனவே அந்தந்த பகுதிகளில் உயர் விளைச்சல் தந்த விதை மற்றும் கன்றுகளை ரகங்களை மட்டுமே பயன்படுத்திக் கொள்ளலாம்.
11. ஒரு ஏக்கர் நிலம், குறைந்த நீர்ப்பாசனம் வைத்திருப்பவர்கள் கூட முறையான விவசாய முறைகளால் உயரலாம்
12. நமது சந்ததியினருக்கு விவசாயம் சார்ந்த தொழில்களை பரவலாக்கம் செய்யலாம்
13. இயற்கை விவசாயத்தின் மூலம் அதிகபட்ச லாபங்களை நம்மால் எடுக்க முடியும் என்று நம்ப வேண்டும். அது மட்டுமே மண்ணை கெடுக்காமல் குறைந்த உற்பத்தி செலவில் அதிக லாபம் எடுக்க வாய்ப்பு.
14. விவசாயிகள் தற்போதுள்ள மாறிவரும் சூழ்நிலையில் அறிவியல் பூர்வமாகவும், மிகுந்த விழிப்புணர்வோடும், இயற்கை விவசாய முறைகளைப் பயன்படுத்தி திட்டமிட்டு விவசாயம் செய்ய முயல வேண்டும்.
15. நம் தமிழ்நாடு மட்டுமல்லாது அடுத்த மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளுக்கு தேவையான பொருட்களை உற்பத்தி செய்யும் அளவிற்கு ஒன்று பட்டு உழைக்க வேண்டும்.

பிரிட்டோராஜ்
வேளாண் பொறியாளர்
15.12.22