Month: September 2017

புழுக்களை கட்டுபடுத்தும் இயற்கை வழிமுறை

புழுக்களை கட்டுபடுத்தும் இயற்கை வழிமுறை – இயற்கை பூச்சி விரட்டி 

 

ஆடு திங்காத கசப்பு அதிகம் உள்ள 10 வகையான இலை, தழைகளை  3கிலோ எடுத்து பொடியாக நறுக்கி ஒரு டிரம்மில் போட்டு இலை முழுகும் அளவு கோமியம் ஊற்றி மூடி வைத்து விடவேண்டும்.

3 நாளில் தயாராகிவிடும், ஆறு மாதம் வரை பயன்படுத்தலாம்.

10 லிட்டர் தண்ணீருக்கு பூச்சிவிரட்டி – 100 மில்லி + சுத்தமான வேப்பெண்ணை – 20 மில்லி + மெட்டாரைசியம் – 100மில்லி + பெவேரியா பேசியானா – 100 மில்லி.

இதனுடன் ஒட்டும் திரவம், அரிசி கஞ்சி 100 மில்லி ( 100 கிராம் அரிசி மாவு + 1லிட்டர் தண்ணீர் கலந்து காய்ச்சி தயாரித்து கொள்ளவும்.

சேர்த்து நன்றாக கலந்து புழுக்களின் மீது நன்கு படும்படி காலை 7 – 9 மணிக்குள் அல்லது மாலை 4 – 6 மணிக்கு தெளித்து விடவேண்டும்

மழை பெய்யும் போல இருந்தால் காலையில் தெளிப்பது சரியாக இருக்கும். தெளித்த பிறகு 3 மணி நேரம் மழை பெய்யாமல் இருக்க வேண்டும்.

தெளித்த 7 வது நாளில் மீண்டும் ஒருமுறை தெளிக்க வேண்டும்.

10 நாட்களில் புழுக்கள் இறந்துவிடும்.

செயல்படும் முறை:

இதிலுள்ள நன்மை செய்யும் பூஞ்சாணங்கள் புழுக்களுக்கு உள்ளே சென்று புழுவின் ரத்தத்தை உணவாக உண்டு புழுக்களை அழித்துவிடும்.

பூச்சிவிரட்டியும், வேப்பெண்ணையும் புழுக்களை இலை தழைகளை உண்ண விடாமல் செய்து பூஞ்சாணங்களின் வேலையை சுலபமாக்கிவிடும்.

வேப்பெண்ணைக்கு பதிலாக வேப்பங்கொட்டை கரைசலை பயன்படுத்துவது சிறந்தது.

சொட்டுநீர் குழாய் சுத்தம் செய்தல்

சொட்டுநீர் குழாய் சுத்தம் செய்தல்

சொட்டுநீர் குழாய் சுத்தம் செய்தல்:

2005 ல் இரண்டு ஏக்கர் சொட்டுநீர் பாசனம் அமைக்கும் போது வழக்கம் போல் ஒருவித பயம்..
காரணம் ஊரில் யாருமே சொட்டுநீர் குழாய் அமைக்காத போது நாம் மட்டுமே அமைக்கிறோம் என்று..
சரி பூனைக்கு நாமே மணி கட்டிவிடலாம் என்று கட்டிவிட்டோம்..
ரசாயன விவசாயம் செய்யும் போது இந்த சொட்டுநீர் குழாய்களை வருடத்திற்க்கு ஒரு முறை ஆசிட் பாசன நீரில் கலந்துவிட்டு சுத்தம் செய்து விடுவோம்.(ஹைட்ரோ அல்லது சல்பூரிக்)
ஆனால் ரசாயனத்தை நிறுத்தியபின் நேரடியாக இது போல அமிலத்தை சொட்டுநீர் குழாயில் விட மனது வரவில்லை..
காரணம் இது போல அமிலம் கலந்துவிட்ட நீர் நிலத்தில் பாயும் போது மண்ணில் உள்ள உயிரினங்கள் அழியும் என்று..

Continue reading

உயிர் உரங்களின் பயன்படுத்தும் முறைகள்

உயிர் உரங்களின் பயன்படுத்தும் முறைகள்
மிகவும் எளிமையாக உயிர் உரங்களின் பயன்படுத்தும் முறைகள

உயிர்உரங்களின் பயன்கள் மற்றும் பயன்படுத்தும் முறைகள், கேள்வி பதில்கள்

1.சூடோமோனஸ் புளோரோசன்ஸ் என்றால் என்னவென்று பார்க்கலாமா?

சூடோமோனஸ் புளோரோசன்ஸ் என்பது பயிர்களில் இலைக்கருகல் இலைப்புள்ளி , குலைநோய், துருநோய், வாடல் போன்ற நோய்களை கட்டுப்படுத்தும் உயிர் பூஞ்சாணக் கொல்லியாகும்.

2. சூடோமோனஸ் புளோரோசன்ஸ் எப்படி நோய்களை கட்டுப்படுத்தும் என்று பார்ப்போமா?

சூடோமோனஸ் புளோரோசன்ஸ் பயிர்களில் நோயை உண்டுபடுத்தம் பூஞ்சாணங்களை கட்டுப்படுத்தி நோய் வராமல் பாதுகாக்கின்றது இதனை எல்லா பயிர்களுக்கும் பயன்படுத்தலாம்.

2.சூடோமோனஸ் பயன்படுத்துவதால் நமக்கு ஏற்படும் நன்மைகளைப் பற்றி பார்க்கலாமா?

சூடோமோனஸை பயன்படுத்துவதால் பயிர்களில் ஏற்படும் நோய்களை கட்டுப்படுத்தலாம்.

பயிர்களுக்கு தேவையான வளர்ச்சி யூக்கிகளை ( ஹார்மோன்கள்) உற்பத்தி செய்கிறது

பயிர்களின் வேர்களைத் தாக்கும் நூற்புழுக்களை ( நெமட்டோடு) கட்டுப்படுத்துகிறது

3.சூடோமோனஸை எதெதுக்கு பயன்படுத்துவது என்று பார்க்கலாமா?

விதை, கிழங்கு,  நாற்று நேர்த்தி செய்யலாம்.
அடியுரமாக போடலாம்.

தண்ணீருடன் கலந்து வேர்பகுதியில் ஊற்றலாம்.
4.சூடோமோனஸ்சை கொண்டு எப்படி விதை நேர்த்தி செய்யலாம் என்று பார்க்கலாமா?

ஒரு கிலோ விதைக்கு 10 கிராம் சூடோமோனஸைசிறிது நீர் தெளித்து கலந்து அரைமணி நேரம் நிழலில் உளர்த்தி பின்பு நடவு செய்யலாம்

5.சூடோமோனஸ்சை அடியுரமாக எப்படி பயன்படுத்தலாம்?

2 கிலோ சூடோமோனஸ்சை 200 கிலோ மக்கிய இயற்கை உரத்துடன் கலந்து 4 நாட்கள் நிழலில் காற்றுபுகாமல் மூடி வைத்தபிறகு; நிலத்தில் ஈரம் இருக்கும் பொழுது இடவும்.

6.சூடோமோனஸ்சை தண்ணீருடன் எப்படி கலந்து தெளிப்பது என்று பார்க்கலாமா?

சூடோமோனஸ் ஒருகிலோ பவுடரை 100 லிட்டர் நீரில் கரைத்து தெளிப்பான் மூலம் காலை அல்லது மாலை வேளையில் பயிர் நனையுமாறு தெளிக்கலாம்.

7.வேம் என்றால் என்ன என்று பார்க்கலாமா?

வேம்( ஆர்பஸ்குளார் மைக்கோரைசா) என்பது பயிர்களுக்கு தேவையான மணிச்சத்து, கந்தகம், துத்தநாகம் மற்றும் சுண்ணாம்பு சத்தை மண்ணிலிருந்து கிரகித்து பயிர்களுக்கு கொடுக்கும் வேர் உட்பூசனமாகும்.

8.வேம் என்னால் என்ன, எந்தெந்த பயிர்களுக்கு பயன்படுத்த வேண்டும் என்று பார்க்கலாமா?

வேம் என்பது ஒரு உயிர் உரமாகும். காய்கறி பயிர்கள், பழவகைகள், மரக்கன்றுகள்,தென்னை, மலைத்தோட்டப்பயிர்கள் மற்றும் எல்லா வகை நாற்றங்கால் பயிர்களுக்கும் பயன்படுத்தலாம்.

9.வேம் பயன்படுத்துவதால் என்னென்ன நன்மைகள் என்று பார்க்கலாமா?

வேர்உட்பூசனம் கறையாத நிலையில் உள்ள நுண்ணூட்ட சத்து மற்றும் மணிச்சத்தை பயிர்களின் வேர்களில் வளர்ந்து எடுத்துக் கொடுக்கும்

வேரைத் தாக்கும் பூஞ்சான நோய்களில் இருந்து பயிரை பாதுகாக்கிறது, வேர்களுக்கு மண்ணிலிருந்து நீரை எடுத்துக்கொடுக்கிறது மகசூல் 10 மதல் 15 சதம் அதிகரிக்கிறது

10.வேம்மை எப்படி பயன்படுத்தலாம் என்று பார்க்கலாமா?

ஒரு சதுர மீட்டர் நிலப்பரப்பிற்கு 100 கிலேர் வேம் உயிர் உரத்தை விதைப்பதற்கு முன் நாற்றங்காலில் கிழே 2-3 செ.மீ ஆழத்தில் இடவும். வளர்ந்தபயிருக்கு 50 முதல் 200 கிராம் வேமை வேர்பாகத்தில் இட்டு மண் அணைக்கவும். பாலித்தீன் பையில் உள்ள நாற்றுக்களுக்கு ஒரு பைக்கு 10 கிராம் உட்பூசனம் போடவும், 1000 கிலோ மண்கலவையில் 10 கிலோ வேம் கலந்து பாக்கெட்டில் இடலாம்.

11.டிரைக்கோடெர்மா விரிடினா என்னானு தெரிந்து கொள்ளலாமா?
பயிர்களில் மண், நீர் விதையின் மூலம் பறவும் அழுகல் மற்றும் வாடல் நோய்களை கட்டுப்படுத்தும் இயற்கை பூஞ்சானக்கொல்லியாகும்.
12.டிரைக்கோடெர்மா விரிடியின் பயன்களைப் பற்றி பார்க்கலாமா?

டிரைக்கோடெர்மா விரிடி நோய்களை உண்டாக்கும் பூஞ்சானங்களின் வளர்ச்சியை கட்டுப்படுத்தி வேருக்கு பாதுகாப்பு கவசமாக விளங்குகிறது. இதனை எல்லா பயிர்களுக்கும் பயன்படுத்தலாம்.

13.டிரைக்கோடெர்மா விரிடியை பயன்படுத்துவதால் ஏற்படும் நன்மைகளைப் பற்றி தெரிந்து கொள்ளலமா?

பயிர்களில் உண்டாகும் வேரழுகல், நாற்றழுகல், வாடல் நோய்களை கட்டுப்படுத்தும் .பயிர்களுக்குத் தேவையான( ஹார்மோன்கள் ) உற்பத்தி செய்கிறது

மண்ணி;ல் உள்ள மக்காத குப்பைகளை எளிதாக, விரைவாக மக்க வைத்து உரமாக்குகின்றன. வேரின் வளர்ச்சியை துரிதப்படுத்துகிறது. இதனால் வேரின் செயல்திறன் அதிரிக்கிறது.

14.டிரைக்கோடெர்மா விரிடியை எந்தெந்த வகைகளில் பயன்படுத்தலாம் என்று பார்க்கலாமா?

அடியுரமாக போடலாம், விதைநேர்த்தி செய்யலாம், தண்ணீரில் கலந்து ஊற்றலாம்
15.டிரைக்கோடெர்மா விரிடியை விதை நேர்த்தி செய்வது எப்படி என்று பார்க்கலாமா?

ஒரு கிலோ விதைக்கு டிரைக்கோடெர்மா விரிடியை 10 கிராம், நீர் தெளித்து கலந்து அரைமணிநேரம் நிழலில் உளர்த்தி பிறகு நடவு செய்யலாம்.

16.டிரைக்கோடெர்மா விரிடியை அடியுரமாக எவ்வாறு போடாலாம் என்று பார்க்கலாமா?

டிரைக்கோடெர்மா விரிடி ஒரு ஏக்கருக்கு 2 முதல் 3 கிலோவை மண்புழு உரம் அல்லது இயற்கை உரம் ( சாணம்; உரம்) 100 கிலோவுடன் கலந்து 10- 15 நாட்கள் நிழலில் வைத்துப் பிறகு நிழத்தில் ஈரம் இருக்கும் பொழுது அடியுரமாக போடலாம்.

டிரைக்கோடெர்மா விரிடியை ஒரு கிலோவை 100 லிட்டர் நீரில் கரைத்து வேர்பகுதியில் ஊற்றலாம்.

17.அசோஸ்பைரில்லம் என்றால் என்ன?

அசோஸ்பைரில்லம் என்பது ஒரு உயிர் உரம் இது காற்றிலுள்ள தழைச்சத்தை கிறகித்து பயிருக்கு 20 முதல் 40 கிலோ தழைச்சத்தை கிடைக்க செய்யும். பாக்டீரியா இனத்தைச் சேர்ந்தது.

18.அசோஸ்பைரில்லத்தை எதுக்கு பயன்படுத்தலாம் என்று பார்க்கலாமா?

அசோஸ்பைரில்லத்தை அனைத்துவகை பயிர்வகை பயிர்களை தவிர மற்ற பயிர்களுக்கும் பயன்படுத்தலாம் குறிப்பாக நெல், கம்பு, சோளம், பருத்தி மற்றும் காய்கறிவகை பயிர்களுக்கு பயன்படுத்தலாம்

19.அசோஸ்பைரில்லத்தை பயன்படுத்துவதால் என்னென்ன நன்மைகள் என்று பார்க்கலாம்?

பயிர்களின் மகசூல் 20 முதல் 25 சதவீதம் அதிகரிக்கிறது
இரசாயண உரத்தின் அளவு 25 சதம் குறைக்கிறது.
மண்ணின் தன்மை பாதிக்கப்படாமல் பாதுகாத்து வளத்தை கூட்டுகிறது

விதை முளைப்புதறனை அதிகரிப்பதோடு பயிர்களுக்கு ஓரளவு வறட்சியைத்தாங்கும் தன்மையை அளிக்கிறது.

20.பாஸ்போ பாக்டீரியா என்றால் என்னனு பார்க்கலாமா?

பாஸ்போ பாக்டீரியா உயிர் உரம் இது மண்ணில் உள்ள கரையாத மணிச்சத்தை கரைத்து பயிர்கள் எடுத்துக் கொள்ளும் நிலையில் கொடுக்கிறது இது பாக்டீரியா இனத்தைச் சேர்ந்தது அனைத்துவகை பயிர்களுக்கும்; பயன்படுத்தலாம்

21.பாஸ்போபாக்டீரியாவை எந்நெந்த வகைகளில் பயன்படுத்தலாம் என்று பார்க்கலாமா?

விதை நேர்த்தி செய்யலாம், நாற்று மற்றும் கிழங்குகளை நனைத்து நடலாம், அடியுரமாக போடலாம்,

22.பாஸ்போபாக்டீரியாவை விதை நேர்த்தி செய்வது எப்படி என்று பார்கலாமா?

பாஸ்போபாக்டீரியா 20 கிராம் ஒரு கிலோ விதையுடன் நீர் தெளித்து கலந்து அரைமணி நேரம் நிழலில் உளர்த்தி பின்பு நடவு செய்யவும்.

23.பாஸ்போபாக்டீரியாவை அடியுரமாக எப்படி கொடுக்கலாம் என்று பார்க்கலாமா?

பாஸ்போபாக்டீரியாவை 2 கிலோவை 100 கிலோ மக்கிய உரத்துடன் கலந்து 5 நாட்கள் நிழலில் காற்றுபுகாமல் முடிவைத்து பிறகு நிழத்தில் ஈரம் இருக்கும்பொழுது தூவிவிடலாம்.

24.பாஸ்போபாக்டீரியாவை நாற்றுக்களில் எவ்வாறு நனைத்து நடவு செய்யலாம் என்று பார்க்கலாமா?

பாஸ்போபாக்டீரியா அரைக் கிலோவை 15 முதல் 20 லிட்டர் நீரில் கரைத்து விடவும் பிறகு நாற்று, கிழங்கு வகைகளை நனைத்து நடவு செய்யலாம்.

25.டிரைக்கோகிரமா முட்டை ஒட்டுண்ணி என்றால் என்ன என்று பார்க்கலாமா?

காய்ப்புழுவிற்கு டிரைக்கோகிரமா முட்டை ஒட்டுண்ணி என்பது இது ஒரு குளவி இனத்தை சேர்ந்தது தீமை செய்யும் பூச்சியின் முட்டைக் கருவை தின்று இறுதியில் கொன்று விடும். தீமை செய்யும் பூச்சிகளை முட்டை பருவத்திலே அழிப்பதால் பயிர்களில் சேதம் ஏற்படுவதில்லை

26.டிரைக்கோகிரமா முட்டை ஒட்டுண்ணியை எந்தெந்த பயிர்களுக்கு பயன்படுத்தலாம் என்று பார்க்கலாமா?

டிரைக்கோகிரமா முட்டை ஒட்டுண்ணியை நெல், கரும்பு, பருத்தி, காய்கறி பயிர்கள் மற்றும் பயிர்வகைகள் மானாவாரி பயிர்களில் பயன்படுத்தலாம்

27.டிரைக்கோகிரமா முட்டை ஒட்டுண்ணி எந்தெந்த புழுக்களின் முட்டைகளை கட்டுப்படுத்துகிறது என்று தெரிந்து கொள்வோமோ?

டிரைக்கோகிரமா முட்டை ஒட்டுண்ணி குருத்துப் புழு, இளங்குருத்துப்புழு, இடைக்கணுப்புழு, தண்டுபுழு மற்றும் காய்துளைப்பான் மற்றும் அமெரிக்கன் காய்ப்புழு போன்ற புழுக்களின் முட்டைபருவத்தை கட்டுப்படுத்துகிறது

28.டிரைக்கோகிரமா முட்டை ஒட்டுண்ணியை பயன்படுத்துவதால் ஏற்படும் நன்மைகளைப்பற்றி பர்க்கலாமா?

டிரைக்கோகிரமா முட்டை ஒட்டுண்ணியை பயன்படுத்துவதால் சுற்றுச் சூழல் பாதுகாப்பானது,எளியமுறைகளில் கையாளலாம், ரசாயணப்பூச்சி கொல்லிகளின் உபயோகம் 35 சதம்வரை குறையும்.

29.டிரைக்கோகிரமா முட்டை ஒட்டுண்ணியை எப்படி பயன்படுத்துவது என்று பார்க்கலாமா?

டிரைக்கோகிரமா முட்டை ஒட்டுண்ணி ஓரு ஏக்கருக்கு 5 மில்லி அட்டை பயன்படுத்தலாம். 1 மில்லி அட்டையிலிருந்து சுமார் 15ஆயிரம் முதல் 20 ஆயிரம் குளவிகள் வரை பொரித்து வெளிவரும்.அட்டை துண்டுகளை நூலினால் செடியின் இலையோடு கட்ட வேண்டும்
.
30.பெசிலியோமைசிஸ் என்பது என்னவென்று பார்க்கலாமா?

பெசிலியோமைசிஸ் என்பது பயிர்களில் வேரில் தாக்கும் நூற்புழுக்களை கட்டுப்படுத்தும் இயற்கை பூஞ்சாணமாகும்.

31.பெசிலியோமைசிஸை எந்தெந்த பயிர்களில்
பயன்படுத்தலாம் என்று தெரிந்து கொள்வோமா?

பெசிலியோமைசிஸை அனைத்து வகை பயிர்களுக்கும் பயன்படுத்தலாம்

32.பெசிலியோமைசிஸை பயன்படுத்தும் முறைகளைப் பற்றி தெரிந்து கொள்வோமா?

பெசிலியோமைசிஸை விதைநேர்த்தி செய்யலாம், அடியுரமாக போடலாம், நாற்று, கிழுங்கு நேர்த்தி செய்யலாம், வேரிமூலம் ஊற்றலாம்

33.பெசிலியோமைசிஸை எப்படி விதை நேர்த்தி செய்யலாம் என்று பார்க்கலாமா?

பெசிலியோமைசிஸ் ஒரு கிலோ விதைக்கு 10 கிராம் பவுடரை ஆறிய அரிசி வடிகஞ்சி 100 மில்லி;யுடன் கலந்து விதைநேர்த்தி செய்து அரைமணிநேரம் நிழலில் உளர்த்தி பின்பு நடவு செய்யலாம்.

34. பெசிலியோமைசிஸை அடியுரமாக எப்படி பயன்படுத்துவது என்று பார்க்கலாமா?

பெசிலியோமைசிஸ் 2 முதல் 3 கிலோ பவுடரை 100 கிலோ இயற்கை உரத்துடன் ( சாண உரம்) கலந்து 10 முதல் 15 நாட்கள் நிழலில் காற்றுபுகாமல் முடி வைத்து பிறகு அடியுரமாக இடலாம்.

உயிர்வேலி

இன்று இயற்கைவழி விவசாயம் செய்ய விரும்பும் பெரும்பாலோனோருக்கு பெரும் பொருளாதார விரையத்தைக் ஏற்படுத்துவதில் முதன்மையானது பாதுகாப்பு வேலி அமைக்கும் முறை.

விவசாயத்தின் தொடக்கத்திலேயே பெரும் பொருளாதாரத்தை முடக்குவது செயற்கையானக்ஷக்ஷஹ முறையில் அமைக்கப்படும் கம்பிவேலிகள் தான். எனவே, விவசாயிகள் ஆரம்பத்திலேயே பொருளாதார முடக்கத்தை சந்திக்க நேரிடுகிறது. ஆகவே வேலி அமைப்பதிலிருந்து விரையத்தை தவிர்த்தல் அவசியம்.

உயிர்வேலி அமைப்பதின் முக்கிய நோக்கமாக விலங்குகளிடமிருந்தும் மனிதர்களிடமிருந்தும் மற்றும் இயற்கை சீற்றங்களிடமிருந்தும் விளைநிலங்களை காப்பதே ஆகும்

Continue reading

பூச்சிகளை வளர விடுங்க

பூச்சிகளை வளர விடுங்க...

பூச்சிகளை வளர விடுங்க…

நன்மை தரும் பூச்சிகளை அடையாளம் கண்டு அவற்றை பாதுகாப்பதன் மூலம் வயல்களில் பயிர்களை தாக்கும் பூச்சிகளின் வளர்ச்சியை குறைக்க முடியும்.

👉 பொதுவாக பயிர்களை தாக்கும் பூச்சிகள் மற்றும் புழுக்கள் பற்றி விவசாயிகளுக்கு தெரிந்திருக்கும்.

👉 ஆனால் நன்மை செய்யும் பூச்சிகள் பற்றி அதிகம் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

👉 அப்படி நன்மை செய்யும் பூச்சிகள் இயற்கையாகவே ஒவ்வொரு வயலிலும் காணப்படும்.

👉 எனவே அந்த பூச்சிகளை அடையாளம் கண்டு, அவற்றை அழிக்காமல் பாதுகாக்க வேண்டும்.

வயலுக்கு நன்மை செய்யும் பூச்சிகள் :

தட்டான் இனங்கள்:

🐞 தட்டான் மற்றும் ஊசி தட்டான் போன்ற பூச்சிகள் வயல்களிலும், வானிலும், நீர்நிலைகளின் மீதும் பறந்து கொண்டே இருக்கும்.

🐞 இந்த பூச்சிகள் வயல்களில் பறந்துச் செல்லும் கொசு மற்றும் சிறு பூச்சிகளைப் பிடித்து உண்கின்றன.

🐞 தட்டான்கள் தனக்கான இரையை சுற்றிவளைத்து தேடும் திறன் கொண்டதால், வயல்களில் உறிஞ்சும் பூச்சிகள் மற்றும் இளம் புழுக்களை தேடிப்பிடித்து உண்ணும்.

பொறி வண்டு:

🐞 பொறி வண்டுகளில் தாய்ப் பூச்சிகள் பொதுவாக மஞ்சள் அல்லது சிவப்பு நிறத்தில் உடலில் கரும்புள்ளிகளுடன் காணப்படும்.

🐞 இதன் வாழ்நாள் 42 முதல் 70 நாள்கள். இந்த வண்டுகள் காய்ப் புழுக்கள், அதன் முட்டைகள், அசுவினி தத்துப் பூச்சிகள், வெள்ளை
அசாசின் வண்டு:

🐞 இந்த வண்டுகள் பொதுவாக நன்செய், புன்செய் பயிர்களில் திடீரென அதிகமாக காணப்படும்.

🐞 அசாசின் வண்டு கழுத்தில் 3 முட்டைகள் இருக்கும். இது 35 நாள்கள் வரை உயிர் வாழக்கூடியது.

🐞 இவைகள் அந்துப் பூச்சிகளையும், புழுக்களையும் தேடி அழிக்கும்.

🐞 உருவத்தில் தன் அளவை விட பெரியதாக உள்ள பூச்சிகளையும் தாக்கும் தன்மை கொண்டது.

சிலந்திகள்:

🐞 சிலந்திகளில் பல வண்ணங்களில் உள்ள பல வகையான சிலந்திகள் அனைத்தும் நன்மை செய்யக்கூடியவை.

🐞 இதுவும் உருவத்தில் தன்னை விட பெரிய பூச்சிகளையும் தாக்கி அழிக்கும் திறன் கொண்டது.

நீள கொம்பு வெட்டுக்கிளி:

🐞 இந்த பூச்சிகள், தன் உடலைக் காட்டிலும் சுமார் 2-3 மடங்கு நீளமுடைய கொம்பு போன்ற உணர் உறுப்பினைக் கொண்டு இருக்கும். இவைகள் பச்சை நிறமுடையது.

🐞 வெட்டுக்கிளி பொதுவாக மற்ற பூச்சிகளை மென்று விழுங்கும் வாய் உறுப்பைக் கொண்டது.

🐞 இவை பூச்சிகளின் முட்டைகள் மற்றும் தத்துப் பூச்சிகளை உணவாக உட்கொள்ளும்.

பெதிலிட்ஸ் குளவி:

🐞 பெதிலிட்ஸ் குளவிகள் கருப்புநிறம் உடையது. சிறு எறும்புபோல் இருக்கும்.

🐞 இந்த குளவிகள் காய்ப்புழுக்களை நினைவு இழக்கச் செய்து, அதன் மேல் தன் முட்டைகளை இட்டு இனப்பெருக்கம் செய்து, காய்ப்புழுக்களை அழிக்கின்றன.

டாகினிட் ஈ:

🐞 டாகினிட் ஈக்கள் 7 நாட்கள் வரை வாழக்கூடியது.

🐞 இவைகள் கருப்பு அல்லது கருநீலத்தில் இருக்கும்.

🐞 இவைகள் காய்ப்புழுக்களின் மேல் 2 முதல் 4 முட்டைகள் இடும்.

🐞 இந்த முட்டைகளில் இருந்து வெளிவரும் சிறிய புழுக்கள் காய்ப்புழுக்களஅழிக்கும்.

இந்த நன்மை தரும் பூச்சிகளை அடையாளம் கண்டு அவற்றை பாதுகாப்பதன் மூலம் வயல்களில் பயிர்களை தாக்கும் பூச்சிகளின் வளர்ச்சியை குறைக்க முடியும்.

மீன் வளர்ப்பு

மீன் வளர்ப்பு fish farming techniques

மீன் பண்ணை அமைப்பதற்கு இடம் தேர்வு செய்யும்போது பல்வேறு காரணிகளைக் கருத்தில் கொள்ள, நீர் வேளாண்மை எடுத்துரைக்கிறது. இதனால் அதிக இடர்பாடுகளின்றி, குறைந்த செலவில் தரமான மீன் வளர்ப்புக் குளங்களை அமைத்துக்கொள்ளலாம்.

Continue reading

தேன் தரும் இந்திய மரங்கள்

தேன் தரும் இந்திய மரங்கள்
தேன் தரும் இந்திய மரங்கள்

1. மதுக்காரை– MADUKKARAI TREE,  RANDIA DUMTORUM – FAMILY: RUBIACEAE (மேற்குத் தொடர்ச்சி மலையில் அதிக தேன் உபயம் செய்பவை மதுக்காரை பூக்கள்)

2. நுணா  – TOGARY WOOD OF MADRAS: MORINDA COREIA – FAMILY: RUBIACEAE (தேனீக்களுக்கு தேவைப்படும் மகரந்தத் துகளை தாராளமாகத் தரும் நுணா பூக்கள்)

3. புளியன் மரம் – TAMARIND TREE, TAMARINDUS INDICA, FAMILY: CAESALPINIACEAE (புளியம் பூக்களின் தேன்குடம் எப்போதும் நிரம்பி இருக்கும்)

5. வில்வம் மரம் – BAEL TREE,  AEGLE MARMELOS,FAMILY: RUTACEAE (மகரந்தம் இரண்டையும் கொடையாகத் தரும்)

6. விளா மரம் – WOOD APPLE – FERONIA LIMONIA,FAMILY: RUTACEAE (இனிப்பானது, சுவை தரும் பானம் தயாரிக்கலாம்)

7. வேம்பு – NEEM – AZADIRACHTA INDICA – FAMILY: MELIACEAE ( லேசான  கசப்புள்ள தேனை ஏப்ரல் மே மாதங்களில் தரும்)

8. வாதநாராயணன் – WHITE GULMOHAR – DELONIX ELATA, FAMILY: CAESALPINACEAE (வண்டி வண்டியாய் மகரந்தத்தை வாரித் தரும் மரம்)

9. மாவிலங்கு – SACRED BARNA – CRATEVA MAGNA, FAMILY: CAPARITACEAE  (மார்ச் மாதத்தில் தேன் தரும்)

10. பூவரசு – PORTIA TREE,  THESPESIA POPULNEA, FAMILY: MALVACEAE (நிறைய மகரந்தம் தரும்)

11. புங்கம் – PUNGAN, DERRIS INDICA, FAMILY: FABACEAE (மார்ச் மாதத்தில் தேனீக்களுக்குக் கொண்டாட்டம் ! அது புங்கம் பூக்கும் காலம்)

12. புரசு – FLAME OF FOREST, BUTEA MONOSPERMA, FAMILY: FABACEAE,  (ஏப்ரல் மே மாதங்களில் தேனீக்கள் இந்த மரத்தை வட்டமிடும் காரணம் தேன்தான்)

13. மகிழம் – BULLET WOOD TREE – MIMUSOPS ELENGI, FAMILY: SAPOTACEAE  (ஏப்ரல் மே மாதங்களில் தனது தேன் குடங்களை நிரப்பி வைத்திருக்கும்)

14. குமிழ் மரம் –  KUMIZH TREE,  GMELINA ARBOREA, FAMILY: VERBANACEAE – (தேன் நிரம்ப உள்ள பூக்களைக் கொண்டது)

15. கடுக்காய் – YELLOW MYROBALAN, TERMINALIA CHEBULA, FAMILLY, COMBRETACEAE (தேன் உற்பத்திக்கு அனுசரணையானது)

16. கண்டல் – TRUE MANGROVE, RHIZOPHORA MUCRANATA, FAMILY: RHIZOPHORACEAE (இந்தத் தேன் நச்சுடையது என்கிறார்கள்; வங்க தேசத்தில் இதைத்தான் அதிகம் உற்பத்தி செய்கிறார்கள்)

உலக நாடுகளில் தேன் உற்பத்தியில் இந்தியா 6 வது இடத்தில் உள்ளது; முதல் இடத்தில் இருப்பது சீனா.
இயற்கைத் தேன் ஏற்றுமதியில் நாம் 13 வது இடத்தில் உள்ளோம்;அதிலும் சீனா முதலிடத்தில் உள்ளது; ஏற்றுமதி, தரம், சுவை என்ற மூன்றிலும் முதலிடத்தில் உள்ளது சீனா.

பூமி ஞானசூரியன், செல்பேசி:+918526195370