Month: August 2018

ஆடிப்பட்டம் விளைச்சலை பெருக்கும்

ஆடிப்பட்டம் விளைச்சலை பெருக்கும்

வேளாண்மை செய்யும் விவசாயிகள் அனைவரும் ஒவ்வொரு பருவநிலையையும், காலநிலையையும் எதிர் நோக்கி காத்திருப்பார்கள்.

ஏனெனில் சரியான பருவ நிலை விளைச்சலுக்கு ஏற்றது. அவ்வகையில் தமிழ் மாதங்களான 12 மாதங்களும், விளைச்சலை சிறப்பிக்கும் வகையில் பல பழமொழிகள் உண்டு.

Continue reading

இயற்கைப் பிரசவங்கள் முறையான வழிகாட்டலுடன் பெருக வேண்டும்

வீட்டில் குழந்தை பெற்றுக்கொள்ளும் உரிமை ஒவ்வொருவருக்கும் உள்ளது. எல்லாக் குழந்தைகளும் மருத்துவமனையில்தான் பிறக்க வேண்டும் என்ற கருத்து, மக்கள் மீது திணிக்கப்படக் கூடாது. அதேவேளை, வீட்டுப் பிரசவங்களில் நிகழும் தவறுகளைப் போகிறபோக்கில் கடந்து செல்வது மன்னிக்கவியலாத செயல். பேறுகாலம், பிரசவ நேரம், குழந்தை வளர்ப்பு ஆகிய மூன்று நிலைகளைப் பற்றியும் இந்தத் தலைமுறை கற்றுக்கொள்ள வேண்டும். அவ்வாறான கல்விமுறை உருவாக்கப்பட வேண்டும். இக்கல்விமுறை, அலோபதி மருத்துவத்தின் கீழ் இல்லாமல், மரபு வழிப்பட்டதாக இருக்க வேண்டும். இதுவே என் கருத்து.

Continue reading

மடியில் பால் இருந்தும் பால் கறக்க விடவில்லை

பசு மற்றும் எருமை மடியில் பால் இருந்தும் பால் கறக்க விடவில்லை

எருமை மற்றும் பசு பால் கறக்கும் போது உதைக்கின்றது.
பசு மற்றும் எருமை மடியில் பால் இருந்தும் பால் கறக்க விடவில்லை என்றால் இந்த பிரச்சினையை சரி செய்ய இயற்கை முறையில் எளிமையான வழி உள்ளது.

Continue reading

நம் மண்ணின் மர வகைகள்

நம் மண்ணின் மர வகைகள்
நம் மண்ணின் மர வகைகள்

அடர்வனத்துக்காக சேகரித்து வைத்திருக்கும் நாற்றுக்கள் இவை. நம் மண்ணின் வகைகள். மொத்தம் அறுபத்தெட்டு வகைகளிலிருந்து ஆயிரத்து அறுநூறு நாற்றுகளை சேகரித்திருக்கிறோம்.

பட்டியலில் இல்லாத நாட்டு வகை நாற்றுகளாக இன்னமும் நானூறு நாற்றுக்கள் தேவை. தேடிக் கொண்டிருக்கிறோம். நாட்டு வகையில் இருபத்தைந்து முதல் ஐம்பது நாற்றுக்கள் வரை இருந்தால் விலை கொடுத்து வாங்கி கொள்ளலாம். ஒரே பிரச்சினை போக்குவரத்துதான். பார்சலில் அனுப்புகிற சமாச்சாரமும் இல்லை. நூறு நாற்றுக்களுக்கு தனியாக வண்டி வாடகை கொடுத்தாலும் கட்டுபடியாகாது. அதை மட்டும்தான் யோசிக்க வேண்டியிருக்கிறது.

யாராவது மர வகைகளைத் தேடும் போது இந்தப் பட்டியல் உதவும் என்பதற்காக இங்கே பதிவு செய்து வைத்துவிடலாம்.

வகையும் எண்ணிக்கையும்-

பிராய்
இடம்புரி (திருகு மரம்)
ஒதியன்
பேய் அத்தி
பச்சை கனகாம்பரம்
நுணா
நழுவை
கடுக்காய்
அழிஞ்சல்
காட்டு எலுமிச்சை
வெண் சீத்தா
பாய் மொண்ணை
நொச்சி
பாவட்டம்
வெப்பாலை
எட்டி
இரும்புளி
இலந்தை
மா
வன்னி
இங்க் மரம்
நரிவிலி
தரணி
கடல் ஆத்தி
இருவாட்சி
ஆத்தி
வெல் விளா (காட்டுபாட்சி)
வெண்ணாந்தை
வில்வம்
நீர் அடம்பை
பூந்திக் கொட்டை (சோப் நட்)
குகமதி
வீரா
முறுக்கன்
காட்டு கறிவேப்பிலை
கருமரம்
கன்னிரா
கல்யாண முருங்கை
காட்டு நாரத்தை
செருண்டி
சூரக்காய்
சிறுதும்புளி
அத்தி
அகல்யா
ஈர்குள்ளி
பாலமரம் (மனில்காரா)
பச்சைக் கிளுவை
குமிழம்
எலும்பொட்டி
விளா
புங்கன்
கல் ஆல்
புத்ரன் ஜீவா
வேம்பு
ஆய
சரக்கொன்றை
சீத்தா
நீர்மருது
நாவல்
புளி
இலுப்பை
ஈட்டி
தனக்கு
பொருசு
வேங்கை
கறிவேப்பிலை
சூரிப்பழம்
சந்தனம்

கோலியாஸ் முலிகை பயிர்

கோலியாஸ் முலிகை பயிர்

கோலியாஸ் 6-7 மாத கால முலிகை பயிர்.
பயிரிடும் காலம் ஆகஸ்ட்டு 15 மேல் அக்டோபர் 15 முடிய, இது செம்மன் கலந்து மண்ணில் நன்கு வளரும்

Continue reading

மழை காலத்தில் ஆடுகளுக்கு நோய்கள்

ஊட்டமேற்றிய ஆட்டு எரு

கால்நடைகளுக்கு பொதுவாக கோடை காலத்தில் ஏற்படும் நோய்களை விட மழை மற்றும் பனிக்காலத்தில் அதிக நோய்கள் ஏற்படுகின்றன.

🐄 மழைக்காலத்தில் புதிதாக தளிர் விடும் இலைகளையும், புற்களையும் கால்நடைகள் உண்ணும் போது அவற்றுக்கு செரிமான கோளாறுகள் ஏற்படுகின்றன.

இது தவிர கால்நடைகளின் ஊட்டச்சத்துக்காக அரைத்து வைத்த தானியங்களை உணவாக கொடுக்கும் போதும், எளிதில் செரிமானம் ஆகாத காய்கறிகளை கொடுக்கும் பொழுதும் கால்நடைகளுக்கு செரிமான கோளாறு ஏற்படும்.

Continue reading

வேளாண்பயிர்களை பாழ்படுத்தும் மயில், காட்டுப்பன்றி மற்றும் குரங்கு

வேளாண்பயிர்களை பாழ்படுத்தும் மயில், காட்டுப்பன்றி மற்றும் குரங்கு

வேளாண்பயிர்களை பாழ்படுத்தும் மயிலை கட்டுப்படுத்த வயலில் மயில் வரும் பகுதிகளில் அழுகிய கோழி முட்டையை தெளித்து விடுவதன் மூலம் மயில்கள் வேளாண் நிலங்களுக்குள் வருவதைத் தடுக்கலாம்.

Continue reading