Month: November 2020

இந்த நாலு செடி இருந்தா தென்னைக்கு உரமே தேவை இல்லை

இந்த நாலு செடி இருந்தா தென்னைக்கு உரமே தேவை இல்லை

இந்த நாலு செடி இருந்தா தென்னைக்கு உரமே தேவை இல்லை

தென்னையை சுற்றி மட்டை நிழல் விழுவதிற்குள்ள இடத்தில் இவை இருக்கவேண்டும். அதன் பலனே வேறு.
1. சப்பாத்தி கள்ளி
2. எருக்கு
3. சோற்று கற்றாழை
4. பப்பாளி.
1. சப்பாத்தி கள்ளி
சப்பாத்தி கள்ளி ஒரு செடி ஒரு தென்னை அருகில் இரண்டு மூன்று மீட்டர் தூரத்தில் இருந்தால் உரமே தேவை இல்லை.
சப்பாத்தி கள்ளி மிக சிறந்த தண்ணீர் சுத்திகரிப்பு செய்யும் தாவரம். 98% கெட்ட தண்ணீரையும் சுத்திகரிப்பு செய்யும்.
கால்சியம் சத்து மிகுந்த தாவரம்.பொட்டாசியம் , மக்னீசியம், பயிர் வளர்ச்சி அடைய பாஸ்பரஸ் மிகுந்த அளவு உள்ளது.
2. பப்பாளி
பப்பாளி உள்ள சத்துக்கள் பொட்டாசியம் மக்னீசியம் காப்பர்
பப்பாளி வேர்கள் செம்மரம் போன்று நேராக கீழே செல்லும். அடியில் உள்ள சத்துக்கள் பப்பாளி வேர்கள் உறுஞ்ச தென்னை வேர்கள் அந்தவேர்களில் உறுஞ்சி கொள்ளும்.
3. சோற்று கற்றாழை
சோற்று கற்றாழை காற்றில் உள்ள ஈரப்பதத்தை இழுத்து வளரக்கூடியது.
கால்சியம் குளோரின் பொட்டாசியம் மக்னீசியம் காப்பர் போன்ற சத்துக்கள் உள்ளன. அல்லாய்ன் எனும் பொருள் பாதி அளவு உள்ளது. இது வெப்பத்தை தாங்கும் தன்மை உள்ளது.
4. எருக்கன்

போரான் சத்து மிகுந்தது.

Kalyan Sundar from Facebook

காய்கறி பயிர்களின் உயிரியல் நோய் கட்டுப்பாடு

காய்கறி பயிர்களின் உயிரியல் நோய் கட்டுப்பாடு: சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் ரசாயன பூசண கொல்லிகளைத் தவிர்ப்பதன் மூலம், கத்தரிக்காய், தக்காளி, மிளகு, வெற்றிலை, பூசணி மற்றும் பீன்ஸ் போன்ற பயிர்களில் இயற்கையாகவே நோய்களைக் கட்டுப்படுத்தலாம். உயிரியல் முறையில் நோய்களைக் கட்டுப்படுத்துவதில் பூஞ்சை மற்றும் பாக்டீரியா முக்கிய பங்கு வகிக்கின்றன. குறிப்பாக, சூடோமோனஸ் புளுரசன்ஸ் பாக்டீரியா எதிர் உயிரியாகவும் , டிரைக்கோடெர்மா விரிடி பூஞ்சாண எதிர் உயிரியாகவும் செயல்பட்டு காய்கறி பயிர்களுக்கு பல நோய்களை கட்டுப்படுத்த உதவுகின்றன.

Continue reading

பாரம்பரிய வேளாண்மையில் பூச்சி நோய் மேலாண்மை

பாரம்பரிய வேளாண்மையில் பூச்சி, நோய் மேலாண்மை

இடைவிடாது மழை தூறிக்கொண்டே இருந்தால். அதிக எண்ணிக்கையில் பூச்சி மற்றும் நோய் தாக்குதல் ஏற்படும்.
டிசம்பர் மாதத்தின் கடைசியில் காற்று அடித்தால், அதிக பூச்சியைக் கொண்டு வரும்.

காரத்தன்மையுள்ள நிலத்தில் சாகுபடி செய்த பயிரில் நோய் தாக்குதல் அதிகமாக இருக்கும்.

வயல்களைச் சுற்றி, சோளம் அல்லது கம்பு பயிரை அடர்வாக 4 வரிசை சாகுபடி செய்தால், அது அசுவினி, சிலந்திபேன் பூச்சிகள் வயலின் உள்ளே போகமுடியா வண்ணம் அதன் தாக்குதலைத் தடுக்கலாம்.

Continue reading

தேற்றான்கொட்டை மரம்

தேற்றான்கொட்டை மரம்

தேற்றான் மரம் பளபளப்பாகவும், கரும்பச்சை நிற இலைகளையும், உருண்டையான விதைகளையும் கொண்ட குறு மரம். தமிழகத்தின் மலைக்காடுகளிலும் சமவெளிகளிலும் பரவலாகக் காணப்படுகிறது. தேற்றான் மரத்தின் பழம், விதைக்கு மருத்துவக் குணங்கள் உள்ளன.

Continue reading

பருவமழை கிடைக்காத வறண்ட சூழ்நிலையில் பயிர்களை எப்படி காப்பாற்றுவது

பருவமழை கிடைக்காத வறண்ட சூழ்நிலையில் பயிர்களை எப்படி காப்பாற்றுவது
அனைத்து விவசாய சொந்தங்களே
தமிழகத்தில் 2020 ஆம் ஆண்டு வடகிழக்கு பருவமழை குறித்த காலத்தில் துவங்காமல் சில நாட்கள் தள்ளிப் போகும் நிலை உள்ளது இதனால் மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தமிழ்நாட்டில் ஒரு சில மாவட்டங்களில் ஆங்காங்கே சிறிது மழை கிடைத்திருந்தாலும் முறையான பரவலான பருவமழை கிடைக்காத மற்றும் மண் ஈரம் அதிகரிக்கும் நிலை இல்லாமலும் உள்ளது இதன் காரணமாக இதனை நம்பி புரட்டாசிப் பட்டத்தில் பயிரிடப்பட்ட பயிர்கள் நீண்டகால தோட்டக்கலை பயிர்கள் தண்ணீரின்றி வாடும் நிலை உள்ளது மேலும் பெரும்பாலான மேட்டுப்பகுதி மாவட்டங்களில் உள்ள கிணறு மற்றும் ஆழ்துளை கிணறுகள் வறண்ட சூழ்நிலை உள்ளது மிகவும் குறைந்த அளவு தண்ணீரே இருக்கும் நிலங்களில் தண்ணீரை பயன்படுத்தி பயிர்களும் வளராமல் இருக்கும் கீழ்க்கண்ட முறைகளில் ஏதேனும் ஒன்றை சூழ்நிலைக்கேற்றவாறு பயன்படுத்தலாம்
1. சொட்டுநீர் பாசன அமைப்புகள் வழியே தண்ணீர் தருவதற்கு கூட வழியில்லாமல் உள்ளவர்கள் தண்ணீரை 2000,1000 லிட் கொள்ளளவு கொண்ட சின்டெக்ஸ் டேங்க் வாங்கி வைத்துக்கொண்டு அவற்றின் தண்ணீரை சேகரித்து ,அந்த தண்ணீரை ஒவ்வொரு மரங்களுக்கும் குறைந்தபட்சம் தினசரி 5 லிட்டர் முதல் 10 லிட்டர் வரை கிடைக்குமாறு(தென்னை மரங்களுக்கும்) சுழற்சிமுறையில், மாலை வேளையில் தண்ணீர் பாய்ச்சலாம் .இவ்வாறு பாய்ச்சும் தண்ணீருடன் இயற்கை இடுபொருட்கள் ஆன பஞ்சகாவியா இஎம் கரைசல் மீன் அமிலம் போன்றவற்றில் ஏதேனும் ஒன்றை கலந்து பயிர்களுக்கு தருவது கூடுதல் சிறப்பாக அமையும்.
2. சொட்டுநீர் பாசனம் அமைத்த நிலங்களில் சுழற்சி முறையில் தண்ணீர் கொடுக்கும் பொருட்டு சிறிய சிறிய அளவுகளாக அதாவது அரை ஏக்கர் முதல் ஒரு ஏக்கர் வரை மட்டுமே ஒருமுறைக்கு என்ற அளவில் பிரித்து பாசனம் செய்யலாம். தெளிப்பு நீர் பாசன கருவிகளை முற்றிலும் மழை வரும் வரை பயன்படுத்தாமல் இருப்பது நல்லது.
3. செம்மண் ,செம்மண் சரளை மற்றும் மணல் வாரி நிலங்களில் உள்ள பயிர்களின் மேற்பரப்பில் உள்ள வட்ட பாத்திகளில் குறைந்தபட்சம் 3 சட்டி அல்லது 15 கிலோ அளவுள்ள கரம்பை மண் பரப்பி அதன்மேல் பாசனம் செய்யலாம்.
4. நிலங்களில் ஆங்காங்கே வளர்ந்துள்ள உயரமான களைச் செடிகளை வேருடன் பிடுங்கி வட்டப்பாத்தி பரப்பி ஒரு மூடாக்காக போடலாம். மேலும் அருகில் கிடைக்கும் காய்ந்த இலை தளைகளை கொண்டு மூடாக்கு அமைக்கலாம்.
5. வேளாண்மை பல்கலைக்கழகத்தால் வழங்கப்படும்
பி .பி .எஃப். எம் (PPFM)
எனப்படும் வறட்சியை எதிர்க்கும் தன்மை உள்ள பாக்டீரியா கலவையை பத்து லிட்டர் தண்ணீருக்கு 100 மில்லி முதல் 300 மில்லி வரை கலந்து மாலை வேளையில் 100 மில்லி அசோஸ்பைரில்லம் கலந்து தெளிக்கலாம் .அல்லது பஞ்சகாவியா மீன் அமிலம் இஎம் கரைசல் இவை மூன்றில் ஏதேனும் ஒரு இடுபொருள் உடன் இதில் கலந்து தெளிக்கலாம்.
6. தரைவழி தண்ணீர் கொடுக்க முடியாத அளவுக்கு தண்ணீர் இல்லாத விவசாயிகள் குறைந்தபட்சம் 200 லிட்டர் தண்ணீர் கிடைத்தால் அதனுடன் அரை லிட்டர் மீன் அமிலம் அல்லது இஎம் கரைசல் அல்லது ஒரு லிட்டர் பஞ்சகவ்யா கலந்து குறைந்தபட்சம் ஆறு மணி நேரம் கழித்து மாலை வேளையில் பயிர்கள் மீது மூன்று நாட்களுக்கு ஒரு முறை இலைகள் நன்கு நனையுமாறு தெளிக்கலாம்
பிரிட்டோ ராஜ்
வேளாண் பொறியாளர்