🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🌴
*தென்னந்தோப்பில் ஆய்வின் போது கவனிக்க வேண்டியவை* :
விளைச்சலை அதிகப்படுத்த தென்னந்தோப்பிற்கு செல்லும் போது கீழ்க்கண்ட விவரங்களை உன்னிப்பாக கவனித்து குறிப்பெடுத்துக் கொள்வது நல்லது.
1. அனைத்து மரங்களிலும் அடித்தண்டு முதல் தலைப்பகுதி வரை மரத்தின் சுற்றளவு சீராக உள்ளதா அல்லது ஏதேனும் ஒரு மரத்தில் தலைப்பகுதி வரை அருகில் உள்ள தண்டு பகுதி சூம்பிப் உள்ளதா?
2. தண்டுப் பகுதியில் தரையில் இருந்து மூன்று அடிக்குள் சிவப்பு நீர் வெளியேற்றம் உள்ளதா?
அல்லது மர தண்டின் முழு உயரத்திலும் ஆங்காங்கே சிவப்பு நீர் வெளியேறுகிறதா?
3. தென்னையின் தண்டுப்பகுதியில் கருப்பாக நீளமான திட்டு போன்ற படிவங்கள் உள்ளதா?
4. தென்னை மரத்தின் பட்டைகள் இறுக்கமாக இல்லாமல் வெடித்து தனித்தனியாக தூக்கிக் கொண்டு இருப்பது போல் ஒட்டாமல் இருக்கிறதா?
5. கிளி பொந்துகள் போன்று அமைப்பு உள்ளதா அல்லது மரங்களில் வெடிப்பு உள்ளதா
6. மரத்தின் மொத்தம் மட்டைகளின் எண்ணிக்கை குறைந்தபட்சம் 28 உள்ளதா?
7. மரத்தில் இலைகள் ஆங்கில எழுத்து v. வீ வடிவில் வெட்டப்பட்டு உள்ளதா அதாவது முக்கோண வடிவில் மட்டையின் பாதி இடத்தில் வெட்டப்பட்டுள்ளதா
8. இலைகளின் நுனி காய்ந்தது போல் உள்ளதா? காய்ந்தது போல் இருந்தால் அதன் உள் பகுதியில் வெள்ளை படிவம் உள்ளதா
9. அடி மட்டைகள் தொங்கிக்கொண்டு உள்ளதா
10.காய்கள் முறையான வடிவத்தில் உள்ளதா
அதன் மேல்பறப்பில் சிவப்பு நிற திரவம் வழிவது போல் உள்ளதா
11. புதிதாக பாலை வந்துள்ள நிலையில் தரையில் பூக்கள் அதிகம் கொட்டி உள்ளதா குரும்பைகள் கொட்டி உள்ளதா அல்லது காய்களில் கீழே விழுந்துள்ளதா
12. மட்டைகளின் அடிப்பகுதியில் கருத்துப்போய் உள்ளதா மரத்தூள் கீழே கொட்டியது போல் உள்ளதா
13. ஒவ்வொரு மரத்திலிருந்தும் சராசரியாக பறிக்கப்படும் தேங்காய்கள் எண்ணிக்கை சரியாக உள்ளதா அல்லது தோப்பின் ஏதாவது ஒரு பகுதியில் இருந்து பறிக்கப்படும் தேங்காய்கள் எண்ணிக்கை குறைவாக உள்ளதா
14. பாசன நீர் அனைத்து மரங்களுக்கும் சரியாக செல்கிறதா? சரியான இடைவெளியில் கொடுக்கப்படுகிறதா? எவ்வளவு தண்ணீர் அல்லது எவ்வளவு நேரம் கொடுக்கப்படுகிறது என்ற விபரம்
15. இடு பொருள்கள் எவ்வாறு கொடுக்கப்படுகிறது அனைத்து மரங்களுக்கும் சரியாக பிரித்து கொடுக்கப்படுகிறதா என்ற விபரம்
16. மரத்தினுள் அடிக்கும் வெயிலின் அளவு, அதனை பொறுத்து ஊடுபயிர் எதுவும் செய்ய வாய்ப்பு உள்ளதா?
17. ஒவ்வொரு தென்னைக்கும் வட்டப்பாத்தி அல்லது சதுர பாத்தி உள்ளதா? நிலம் அரிக்கப்பட்ட மாதிரி உள்ளதா
18. தென்னை மட்டைகள் மஞ்சளாக இருந்தால் அதற்கான காரணம் என்ன? தண்ணீர் கொடுக்காததா அல்லது இடுபொருள் கொடுக்கப்படாததா
19. களைக்கொல்லி அடிக்கப்பட்டுள்ளதா? கடைசியாக பசுந்தாள் உரங்கள் வளர்த்த விபரம்
20. தரைவழியாக கடைசியாக கொடுக்கப்பட்ட பாதுகாப்பு பொருட்களின் விபரம்
தோப்பிற்கு செல்லும்போது உத்தேசமாக ஆய்வு செய்து ஒரு பதிவேட்டில் குறித்துக் கொள்ளவும் .தென்னையிலிருந்து முறையான லாபம் கிடைக்க இந்த விபரங்கள் பலன் அளிக்கும்.
தகவல்
பிரிட்டோ ராஜ்
வேளாண் பொறியாளர்
🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🌴