தென்னைக்கு 5 வருட வயதுக்கு மேல் இயற்கை முறையில் மாதவாரி உத்தேச இடுபொருள் கொடுக்கும் அட்டவணை விபரம்:
1வது நாள் : ஒரு மரத்திற்கு சூடோமோனஸ்10 மில்லி பேஸிலோ மைய்சீஸ் 10மில்லி தரைவழி மாதம் ஒரு முறை நீருடன் கலந்து தரவும்.
2 வது நாள் :ஒரு மரத்திற்கு 5லிட்டர் ஜீவாமிருதம் தரைவழி பாசனத்துடன் தரவும்.
7 வது நாள் : ஒரு மரத்திற்கு மூன்று லிட்டர் எருக்கு இலை கரைசல் தரைவழி தரவும்
9 வது நாள் : ஒரு மரத்திற்கு 30 மில்லி மீன் அமிலம் தரைவழி பாசனத்துடன் தரவும்
16 வது நாள் :ஒரு மரத்திற்கு 5லிட்டர் ஜீவாமிருதம் தரைவழி பாசனத்துடன் தரவும்
20 வது நாள் : ஒவ்வொரு மாதமும் ஒரு மரத்திற்கு 5 லிட்டர் எருக்கு இலை கரைசல் 250 கிராம் சாம்பல் தரைவழி தரவும் 3 மாதங்களுக்கு ஒருமுறை ஒரு மரத்திற்கு ஒன்றரை கிலோ கல் உப்பு (செம்மண், சரளை மண் நிலத்திற்கு மட்டும்) வட்டப்பாத்தியில் சிறிது குழிதோண்டி இட்டு மூடி விடவும்.
23 வது நாள் : ஒரு மரத்திற்கு 30 மில்லி இ. எம் கரைசல் (அல்லது) ஹீமிக் அமிலம் 10 மில்லி பாசனம் வழி தரவும்.
25 வது நாள் : ஒரு மரத்திற்கு கடலை புண்ணாக்கு கரைசல் 3லிட்டர் அல்லது கோமியம் 200 மில்லி வீதம் தரைவழி தரவும்
மேலே கொடுக்கப்பட்டுள்ளது
ஒரு உத்தேச இடுபொருள் அட்டவணை உங்கள் வசதி மற்றும் தேவைக்கேற்ப இதனை மாற்றி கொள்ளவும்
மண்புழு உரம் இரண்டு கைபிடி 15 நாட்களுக்கு ஒருமுறை வட்டபாத்தியில் தூவி விட வேண்டும்
பிரிட்டோ ராஜ்
வேளாண் பொறியாளர்