சுமார் எட்டு வருடங்களுக்கு முன்னால் இந்த பசுமை வீடுகள் பற்றி ஆராய ஆரம்பித்த பொழுது, அந்த உலகம் என்னுள் ஒரு இனம் புரியாத பரவசத்தையும் குழப்பத்தையும் ஒரு சேர தந்த உணர்வு. என்னுள் எழுந்த கேள்விகளுக்கு பதிலை தேடி தேடி அலைந்து கிடைக்காமல் அடுத்தவரின் கேள்விகளாலும் கிண்டல்களாலும் அவமானங்களை சந்தித்த வருடங்கள்.இந்த மண் சார் கட்டுமானத்தின் சித்தாந்தத்துக்கு நாங்கள் எந்த அளவு உண்மையாக இருக்க முடியும்? தமிழ்நாட்டில் குறிப்பாக எங்கள் பகுதிகளில் யாரும் கேள்விப்படாத ஒரு விஷயத்தை நாம் பொது வெளியில் எடுத்துச் செல்ல முற்படும்போது வெறும் சித்தாந்தத்தை மட்டும் நம்பி வீடு கிடைக்குமா? அதை வைத்து நாங்கள் காலம் தள்ள முடியுமா?
Author: Hari Prasath
mud blocks கொண்டு கட்டப்பட்ட மண் வீடு
கர்நாடகா எல்லையில் உள்ள அஞ்செட்டியில் உள்ள மலைப்பகுதியில் நண்பரின் mud blocks கொண்டு கட்டப்பட்ட மண் வீடு பார்வையிட வாய்ப்பு கிடைத்தது. சிறு குளம்,முன்புற திண்ணை,முற்றம்,சுற்றியும் மரங்கள்,கருங்கல் வேலைப்பாடுகள்,சாய்தள மங்களூர் ஒட்டு கூரை,மண்வாசயுடன் சுவர்,அழகான கருங்கல் படிக்கட்டு,பழைய செட்டிநாட்டு வீடுகளின் தூண்கள்,என வர்ணித்து கொண்டே போகலாம்.