Category: இயற்கை வாழ்வியல்

கோபுரம் தாங்கி செடி

கால்வாய் ஓரங்கள், நீர்பாங்கான இடங்களில் பகுதிகளில் கிடைக்க கூடியது கோபுரம் தாங்கி செடி.
இதன் இலைகள் மேல் பூச்சு மருந்தாகிறது. வேர்கள் உள் மற்றும் வெளிபூச்சு மருந்தாகிறது.

கோபுரம் தாங்கி செடி நுண்கிருமிகளை அழிக்க கூடியது. காய்ச்சலை தணிக்கவல்லது.

Continue reading

பனை நார் கட்டில்

பனை நார் கட்டில்

குழந்தைகளுக்கும்
பிரசவித்த பெண்களுக்கும்
நோயுற்றோருக்கும்
வயதில் மூத்தவர்களுக்கும்
ஏன் அனைவருக்கும்
நிம்மதியான உறக்கத்திற்கு
பரிந்துரைக்கப்படும் பனை நார் கட்டில் இதுதான்.
நான் பார்த்ததிலேயே மிக நேர்த்தியாக கட்டில் பின்னும் திறமை கொண்டுள்ள பொன்பாறைக்குளம் அருணாச்சலம் (76) நமது தலைமுறையின் இறுதி கண்ணிகளில் ஒன்று.


Palmyra (Stalk) Cot is a unique product of southern districts of Tamil Nadu. Nowhere else in the world you can see people using palmyra stalk fiber to make a cot. Arunachalam 76 from Ponparaikkulam, Kanyakumari district making fine cots. you may not find many in future. A cot can be used for over 15 years, if maintained well.

 

பாரம்பரியக் கட்டடக்கலை

பாரம்பரியக் கட்டடக்கலை கட்டிடக்கலை

வீடு கட்டுவதற்கான செலவில் 60%ற்கும் அதிகமான பங்கை இம்மூலப்பொருட்களே எடுப்பதால், குறைந்த செலவு வீடுகளைக் கட்டும்போது இம்மூலப் பொருட்களைத் தகுந்த முறையில், குறைத்த செலவில் பெற்றுக் கொள்வதற்கான வழிமுறைகள் பற்றி ஆராயவேண்டியதன் தேவை தவிர்க்க முடியாததே. வீட்டிற்கான மூலப்பொருட் செலவுகளை எவ்விதம் குறைக்கலாம்? இதற்கான விடையின் ஒரு பகுதியினைப் பாரம்பரியக் கட்டடக்கலை (Traditional Architecture) எமக்குச் சுட்டிக் காட்டுகின்றது.

Continue reading

எந்தச் சுவையை முதலில் உண்ண வேண்டும்

எந்தச் சுவையை முதலில் உண்ண வேண்டும்

உணவு என்று சொன்னால், உணவின் சுவைதான் நினைவுக்கு வரும். சுவையில்லாத உணவு உணவாகாது. ஆறு சுவையுடன் கூடிய உணவே முறையான உணவாகும். நாக்கு அறியக் கூடிய சுவைகள் ஆறுவகை எனப் பழந்தமிழ் மருத்துவம் கூறுகிறது.

உடலில் இயங்குகின்ற முக்கியமான தாதுக்களுடன் ஆறு சுவைகளும் ஒன்றுகூடி உடலை வளர்க்கப் பயன்படுகின்றன.

உடலானது ரத்தம், தசை, கொழுப்பு, எலும்பு, நரம்பு, உமிழ்நீர், மூளை ஆகிய ஏழு தாதுக்களால் ஆனது. இவற்றுள் ஏழாவது தாதுவாகிய மூளை சரியாக இயங்க வேண்டுமானால், பிற தாதுக்கள் ஆறும் தகுந்த அளவில் உடலில் இருக்க வேண்டும்.

Continue reading

ஒரு காடளவு பச்சையத்தை கண்களுக்குள் வைத்திருக்கிறாள்

ஒரு காடளவு பச்சையத்தை கண்களுக்குள் வைத்திருக்கிறாள்

குழந்தைகளுக்கான ‘இயற்கைச்சூழல் அறிதல் முகாம்’ , காட்டுப்பள்ளி நிலத்தில் கழிந்த இருதினங்களாக நிகழ்ந்தேறியது.

இயற்கையென்பதன் பேரங்கமாக நிலவுகிற சூழலமைப்பே காடுகள். மனத்தரை திடம்கொள்ளத் துவங்கும் சிறுவயதிலேயே, காட்டைப்பற்றி தெரிந்துகொள்வது ஒருவித மனோபலத்தை தருகிறது. காடுகளை அறிந்துகொள்வதற்கான அறிமுகக் கதவுகளாக பறவைகள் இருக்கின்றன. அப்பறவைகளையும், அவை வாழும் காடுகளையும், இன்னபிற சுற்றுப்புற சிற்றுயிர்களையும் அறிந்துகொள்ளச் செய்யும் முதல்வெளிச்சமாகவே இப்பயில்முகாம் தன்வழியமைந்தது.

சிறார்களுக்கானதாக மட்டுமில்லாமல், சிற்சில தருணங்களில் அவர்களின் பெற்றோர்களும் சேர்ந்து பங்கெடுக்கும் பகுதிகள் சூழலறிதலின் புத்தனுபவத்தை உண்டாக்கியது.

children
children

காடுளுக்குள் உலா போதல், பறவை பார்த்தல், பேரமைதிக்குள் ஆழ்ந்துபோதல், காதால் பார்த்து கண்ணால் கேட்டல், பறவையழைப்புகளை உணர்தல், தரையூறும் சிற்றுயிர்களையும் பட்டாம்பூச்சிகளையும் குணமறிதல்… இப்படி கானகத்துக்கு உள்ளமைந்த பயணமும், அவைகளை மையமிட்டு நிகழந்த உரையாடல், உருவம் வரைதல், மண்பொம்மையாக்கம், விதை-இறகு-உதிர் இலை சேகரித்தல், பல்லுயிர் பற்றின திரையிடல்… இப்படி வனத்துக்கு புறமமைந்த நகர்வுகள் எல்லாம் ஒன்றிணைந்து தன்னுணர்வின் அடிப்படையிலான பயிலுதலை சாத்தியப்படுத்தியது.

பறவைகள் பார்த்தறிதல், அதன் ஒலிகளை வைத்தே இனங்கண்டறிதல், தனித்தன்மையான குணாதிசியங்கள் என காடுவாழ் பறவைகள் பற்றிய முழுத்தோற்றத்தையும்… மழலையின் எளிமையோடு மனசுபதித்த ரவீந்திரன் அண்ணனின் அன்புழைப்பும் ஈடுபாடும்… வார்த்தைப்படுத்தலுக்கும் அப்பாற்பட்டது.

mittai
mittai

” இருட்டான அறை ஒரு குழந்தைக்கு பயத்தை தருகிறது. ஆனால், அங்கு வெளிச்சம் வந்துவிட்டால் பயம் போய்விடுகிறது. காரணம், அந்த அறைக்குள் என்ன இருக்கிறதென்பதை அவ்வெளிச்சம் குழந்தைக்கு காட்டிவிடுகிறது. அதேபோலத்தான் காடும், காடுகளுக்குள் என்ன இருக்கிறது என்பதனை வெளிச்சமிட்டு காட்டிவிட்டால் போதும், காட்டைப்பற்றிய பயமே குழந்தைக்கு இல்லாமல் போய்விடும் ”

boys
boys

ரவீந்திரன் அண்ணன் Raveendran Natarajan இதைச்சொன்ன போது உண்டான மனவிரிவு, காடுகளை காண்கிற பார்வைக்குள் கூடுதல் குவியம் கொடுத்திருக்கிறது.

இந்த பல்லுயிர் அறிதல் முகாமைத் தொடர்ந்து, இளம்பருவத்தினர் மற்றும் ஆசிரியர்களுக்கான சூழல்சந்திப்பு பயில்வுகளை நிகழ்ந்த முழுமையானதொரு திட்டமிடுதல் துவங்கியுள்ளது. உடனிருந்து உழைப்பை பகிர்ந்த அத்தனை மனதுக்கும் அன்பின் நன்றிகள்.

உதிர்ந்துகிடக்கும் இறகை
கையிலெடுக்கும் சிறுமி
ஒரு காடளவு பச்சையத்தை கண்களுக்குள் வைத்திருக்கிறாள்.

From : https://www.facebook.com/cuckoochildren/?hc_ref=ARR-SjjcUrEYsql3iFRYgxbLg5xSRkr5G-v91_WcejArTUfZbFsMaujoNzKHkCmKHc0

 

ஆட்டுப்பாலின் பயன்கள்

ஆட்டுப்பாலின் பயன்கள்

ஆட்டுப்பாலின் பயன்கள் – தினந்தோறும் ஆட்டுப்பால் குடித்து வந்தால் உடல் உஷ்ணம் குறையும், உடல் உஷ்ணத்தால் ஏற்படக்கூடிய கண் எரிச்சலும் குறையும்

Continue reading