Category: மரபு கட்டுமானம்

கருங்கல் கட்டிடங்களின் நன்மைகள்

கருங்கல் கட்டிடங்களின் நன்மைகள்

கொளுத்தும் கோடை வெய்யிலிலும் இதமான குளிர்ச்சியைத் தரக்கூடியவை கருங்கல் கட்டிடங்கள். அதனால்தான் பண்டைய தமிழர்கள், கோயில்களையும், கோட்டைகளையும் கருகங்கற்களால் கட்டி கட்டிடக் கலைக்கு உதாரணமாக்கினர். நீண்ட ஆயுள், நீடித்த உறுதி, பாதுகாப்பு, சுற்றுச் சூழல் கேடின்மை, இதமான குளிர்ச்சி எனக் கருங்கல் கட்டிடங்கள் தரும் பலனை அடுக்கிக்கொண்டே போகலாம். இன்றைய காலகட்டத்தில் இத்தகையை சிறப்பு வாய்ந்த கருங்கல் கட்டிடம் ஒன்றை எழுப்பி, அதில் வசிப்பதென்பது அவ்வளவு எளிதில் கைகூடும் விஷயமல்ல.

Continue reading

அழகுபடுத்தப்பட்ட கருங்கல் சுவர்

அழகுபடுத்தப்பட்ட கருங்கல் சுவர்
அழகுபடுத்தப்பட்ட கருங்கல் சுவர்:

கலை நயம் மிகுந்த சைஸ் கல்லை டிரெஸ்ஸிங் செய்து கலவை தெரியாமல் சந்துகள் தெரியாமல் மிகவும் நேர்த்தியாக கட்டப்பட்டு வருகிறது.

 

இன்று ஒரு முன்னாள் அமைச்சருடைய பண்ணை வீட்டை பார்வையிடும் வாய்ப்பு கிடைத்ததது.விட்டின் அளவு ஏறக்குறைய 1௦௦௦௦ சதுர அடி இருக்கும். அமைச்சர் பெயர் வேண்டாம்.
இந்த வீடு கடந்த 5 வருடங்களாக கட்டப்பட்டு வருகிறது. சரி வீட்ட விடுங்க…

இதனுடைய சுற்று சுவர் பற்றிதான் நாம் இப்போ பேச போகிறோம். அருமையான சுற்று சுவர். வீட்டை விட எனக்கு சுற்றுசுவர் மிக அழகாக தெரிந்தது. கலை நயம் மிகுந்ததாக இருந்தது.

நல்லதை வீட்டுக்கு வெளியவும் கெட்டதை வீட்டுக்கு உள்ளேயும் வைப்பது நமக்கு ஒன்னும் புதிது இல்லையே..அதுல மினிஸ்டர் என்ன சாதாரண மக்கள் எல்லாமே இந்த விசயத்துல ஒண்ணுதான்.

சைஸ் கல்லை டிரெஸ்ஸிங் செய்து கலவை தெரியாமல் சந்துகள் தெரியாமல் மிகவும் நேர்த்தியாக கட்டப்பட்டு வருகிறது.ஏறக்குறைய 3௦௦ M சுற்றளவு வரும்.
கடந்த ஒரு வருடமாக கட்டட்டு வருகிதாம்.


பார்ப்பதற்கு க்ரானைட் ஒட்டப்பட்டது போலவே அழகாக தெரிகிறது. நாமும் இதை மண்ணை கொண்டே கட்டி எங்காவது பயன்படுத்த வேண்டும் என்ற எண்ணம் தோன்றாமல் இல்லை. கல் வேலை செய்து கொண்டிருத்த மேஸ்திரியை பாராட்டி தொலைபேசி எண்ணை வாங்கி வந்தேன். இது போல கல் வேலை செய்பவர்கள் அழிந்து விட கூடாது. இவர்களை போன்றோருக்காகவாவது வீடு கட்டுபவர்கள் கருங்கல்லை பயன்படுத்த வேண்டும் என்பது என் ஆசை…

இந்த வீட்டை முழுவதும் கட்டி இருந்தால் எப்படி இருக்கும் என்று யோசித்து கொண்டே வீடு திரும்பினேன்…

நான் ரசித்ததை என்னுடைய சோனி புகைப்பட கருவி வழியாக உங்களுக்கும்…

நன்றி…..ஹரி

மண் வீட்டினை கட்டும் முறை

மண் வீட்டினை கட்டும் முறை

கல் வீடு கட்டுவது போன்றே சரியான திட்டமிடலுடன் மண் வீட்டினையும் அமைக்க வேண்டும்.
வீட்டின் முக்கிய அங்கங்கள் :
– அத்திவாரம்
– சுவர்
– கூரை
– தரை

முதலில் சுவர் பற்றிப் பார்ப்போமானால் ஏனையவை சுலபமாக இருக்கும். சுவர் கட்டுவதற்கு முக்கியமானவை
1 – மண்

சாதாரணமாக வயல்கள் தோட்டங்களில் கிடைக்கும் களிமண் மிகவும் சிறந்தது. மேற்பரப்பில் குப்பை கலந்திருந்தால் 2 – 3 சென்ரிமீற்றர் ஆழமான பகுதியை அகற்றிவிட்டுத் தோண்டி எடுக்கலாம். மண்ணிலுள்ள களி (clay) 25 வீதம் அளவில் இருக்க வேண்டும். களித் தன்மை அதிகமாக இருந்தால் மணல் சேர்க்க வேண்டியிருக்கும். களி அதிகமான மண் காயும்போது வெடித்து விடும். சுவர் கட்டும் விதங்களைப் பொறுத்து களியின் அளவு சற்றுக் கூடுதலாக அல்லது குறைவாக இருக்கும்.

Continue reading

Vernacular architecture என்ற வார்த்தைக்கு என்ன அர்த்தம்

Vernacular architecture என்ற வார்த்தைக்கு என்ன அர்த்தம்

Vernacular Architecture என்ற வார்த்தைக்கு என்ன அர்த்தம்.??

நம் பாரம்பரிய முறையில் இயற்கையாக கிடைக்கக்கூடிய பொருட்களையும்,பாரம்பரிய தொழில்நுட்பத்தையும் கொண்டு ஒரு கட்டிடத்தை வடிவமைப்பதே ஆகும்.

Continue reading

மண் வீட்டின் உள்புற தோற்றம்

மண் வீட்டின் உள்புற தோற்றம் mud house inside view

உனக்கு உணவளித்து ,தண்ணீர் கொடுத்து உன்னை காலம் முழுவதுமே என் மீது சுமக்கிறேன் ஆனால் நான் உன் இருப்பிடத்தை அமைக்க பயன்படமாட்டேன் என ஒதுக்கி விட்டாயே மனிதா..

மண்ணால் கட்டப்பட்ட வீட்டின் உள்புற தோற்றம்: கட்டிடம் ஆரோவில்லில் உள்ளது.இது rammed earth மற்றும் stabilized mud block இரண்டு முறையிலும் சுவர் அமைக்கப்பட்ட வீடு.கட்டம் கட்டாமாக தெரிவது block ,மற்றும் வரி வரியாக தெரிவது rammed earth

Continue reading

மண் வீடு களிமண் கற்கள் Adobe

கல் வீடு கட்டுவது போன்றே சரியான திட்டமிடலுடன் மண் வீட்டினையும் அமைக்க வேண்டும். முதலில் சுவர் பற்றிப் பார்ப்போமானால் ஏனையவை சுலபமாக இருக்கும.

Continue reading