Category: Agriculture News

பயிர்களும் பட்டங்களும்

பட்டம் என்பது காலநிலையின் குறியீட்டு வார்த்தை ஆகும் ..!

பட்டத்துக்கு ஏற்றவாறு பயிர் செய்வது மிகவும் முக்கியம் ஆகும். பாரம்பரிய விவசாயத்தில் பட்டத்துக்கு முக்கியத்துவம் கொடுப்பார்கள்.

ஒரு பயிர் சாகுபடி செய்த நிலத்தில் தொடர்ந்து மீண்டும் அதே பயிரைச் சாகுபடி செய்யவும் மாட்டார்கள்.
வருடத்தில் எந்தெந்தப் பட்டத்தில் என்னென்ன பயிர் சாகுபடி செய்ய வேண்டுமோ அந்தந்தப்பட்டத்தில் அந்தந்தப் பயிர்தான் சாகுபடி செய்வார்கள்.

Continue reading

இலாபம் தரும் ஒருங்கிணைந்த பண்ணையம்

இலாபம் தரும் ஒருங்கிணைந்த பண்ணையம்

ஒருங்கிணைந்த பண்ணைய முறை விவசாயிகளுக்கு பழக்கமானது தான் என்றாலும் விஞ்ஞான முறையில் அவற்றை ஒருங்கிணைத்து செயல்படுத்துவதில்லை. ஒன்றின் கழிவுகள் மற்றொன்றுக்கு இடுபொருளாக (input) மாறுவதன் மூலமே அவற்றின் உள்ளீட்டு செலவை குறைத்து லாபத்தை அதிகரிக்க முடியும். நன்செய் நிலங்களில் நெல், கரும்பு, வாழை (Banana) சாகுபடியுடன் மீன், கறவை மாடு, கோழி, காடை மற்றும் வாத்துகளை வளர்க்கலாம். இவற்றுக்கான தீவனப்பயிர் (Fodder) மற்றும் காளான் வளர்ப்பும் இணைத்து செயல்படுத்தலாம். நெல்லில் இருந்து கிடைக்கும் வைக்கோல் (Straw) கால்நடைகளுக்கு தீவனமாகவும், காளான் வளர்ப்பில் இடுபொருளாகவும் பயன்படுகிறது. கால்நடை கழிவுகளின் சாணம், பயிர்க் கழிவுகள் மற்றும் காளான் வளர்ப்பில் கிடைக்கும் கழிவுகளை மண்புழு உரமாக்கலாம்.
உபதொழில்கள்:
புன்செய் நிலங்களில் பயிர் சாகுபடியுடன் (Cultivation) கறவை மாடு, எருமை, ஆடு, கோழிகள் வளர்க்கலாம். இதனுடன் சாண எரிவாயுக்கலன் அமைக்கலாம். பட்டுப்புழு, தேனீக்கள் மற்றும் பழமரங்கள் வளர்க்கலாம். மண்புழு உரப்படுக்கை தயாரிப்பதுடன் வீட்டுத்தோட்டம் (Home garden) அமைக்கலாம். மானாவாரி நிலங்களில் பயிர் சாகுபடியுடன் வெள்ளாடு, செம்மறி ஆடு, கோழிகள் வளர்க்கலாம். வேளாண் காடுகள், பழ மர சாகுபடி, பண்ணைக் குட்டை ஆகியவையும் பயன் தரும். எந்த நிலமானாலும் பயிர்த் தொழிலுடன் உபதொழில்களை இணைத்து செய்வதே தொடர் லாபம் (Profit) தரும். அந்தந்த பகுதிகளில் உள்ள காலநிலை, மண்வளம், மழையளவு, விற்பனை வாய்ப்பு, விவசாயிகளின் மூலதனத்தை கருத்தில் கொள்ள வேண்டும்.
உபத்தொழில்கள் செய்வதன் மூலம் ரசாயன உரங்களின் அளவையும் சாகுபடி செலவையும் குறைத்து, மண்வளத்தை மேம்படுத்தலாம். நீர் ஆதாரம் அதிகமாக இருந்தால் 10 சென்ட் நிலத்தில் மீன் குட்டை அமைக்கலாம். இதில் கட்லா 4 பங்கு, ரோகு 3 பங்கு, மிர்கால் 2 பங்கு மற்றும் ஒரு பங்கு புல்கெண்டை என 400 மீன் குஞ்சுகளை வளர்க்கலாம். குட்டையின் மேல் கூண்டு அமைத்து கோழி அல்லது ஜப்பானியக் காடை வளர்த்தால் இவற்றின் எச்சங்கள் மீன்களுக்கு (Fish) உணவாகும். மீன் குட்டையிலிருந்து வெளியேற்றப்படும் நீர் மற்றும் மீன்குட்டை கழிவுகள் பயிர்களுக்கு எருவாகிறது. குட்டையைச் சுற்றி காய்கறி மற்றும் பழப்பயிர்கள் வளர்க்கலாம். ஒருங்கிணைந்த பண்ணையத் திட்டத்தில் வேலையாட்களை குறைத்து குடும்ப நபர்களே வேலைகளைச் செய்வதன் மூலம் அதிக லாபம் ஈட்டலாம்.
சங்கீதா, உதவி பேராசிரியர்
லதா, பேராசிரியர்
உழவியல் துறை வேளாண்மைப் பல்கலை கோவை.
agronomy@tnau.ac.in

தாளிப் பனை Talipot palm[Corypha umbraculifera]

தாளிப் பனை Talipot palm Corypha umbraculifera

தாளிப் பனை (Talipot palm, Corypha umbraculifera) இந்தியாவின் மலபார் கடற்கரையிலும் இலங்கையிலும் வளரும் பனை மர வகையாகும். இதை தமிழகத்தின் சில பகுதிகளில், விசிறிப் பனை, கோடைப் பனை என்ற பெயர்களிலும் அழைக்கப்படுகிறது.

Continue reading

இயற்கை விவசாயம் என நாம் கூறுவதன் அடிப்படை அறிவியல்

கொஞ்சம் பெரிய பதிவானலும் அனைவரும் அறிந்துகொள்ளவேண்டிய அறிவியல் உண்மை
*இயற்கை விவசாயம்* என நாம் கூறுவதன் அடிப்படை அறிவியலே இவ்வளவுதான்.இதை தெளிவாக புரிந்துகொண்டால் விசமில்லா விவசாயமும்,நோயில்லா சமுதாயமும் சாத்தியமானதே!
கண்ணுக்கு தெரியாத நுண்ணுயிர்கள் உள்படக் கோடிக்கணக்கான உயிர்களுக்கும் உறைவிடம். சிந்திக்கும் திறனை வைத்து நாங்கள்தான், உலகை ஆட்டி வைத்துக் கொண்டிருக்கிறோம் என மனிதன் எண்ணிக் கொண்டிருக்கிறான் . ஆனால் உண்மையில் மனிதனையும் சேரத்து இவ்வுலகையே ஆட்டிவைப்பவை கண்ணுக்கு தெரியாத நுண்ணுயிர்களும்தாம். நுண்ணுயிர்கள் என்றாலே மனிதனுக்கு எதிரானவை என்ற பொதுவான எண்ணம் உண்டு.
உண்மையில் அப்படியில்லை. தனது அனைத்து படைப்பிலும் இரண்டு வாசல்களை வைத்தே இருக்கிறது , இயற்கை. ஒரு வாசல் அடைத்தால், இன்னொருவாசல் திறக்கும். அதன்படி, தீமை செய்யும் நுண்ணுயிர்களைக் கட்டுப்படுத்த, சில நன்மை செய்யும் நுண்ணுயிர்களையும் படைத்துள்ளது.
நுண்ணுயிர்கள்தாம் இந்த பூமியில் ஆதியில் தோன்றிய முதல் உயிரினங்கள். அவை திடநிலையில் இருந்த ஆக்சிஜனை சுவாசித்துக் கார்பன் -டை-ஆக்சைடை வெளியேற்றின. ஏற்கெனவே பூமியில் தண்ணீர், சூரிய ஒளி ஆகியவை இருந்ததால், இந்தக் கார்பன் -டை-ஆக்சைடைப் பயன்படுத்திப் பச்சையம் அதாவது, தாவரங்கள் உருவாயின. அப்படி முதன்முதலில் தோன்றியவைதான் பெரணி வகைத் தாவரங்கள். அவை, கார்பன் -டை-ஆக்சைடை எடுத்துக்கொண்டு வாயு நிலையில் ஆக்சிஜனை வெளியேற்றின.
இந்த ஆக்சிஜனை சுவாசிக்ககூடிய நம்மைப் போன்ற உயிரினங்கள் அதற்குப் பிறகுதான் தோன்றின என்கிறது, வரலாறு. தற்போது புவி வெப்பமயமாதலால் அதிகம் பாதிப்புக்குள்ளாகி இருப்பவை, நுண்ணுயிரிகள்தாம். நுண்ணுயிர்கள் அழிந்தால், தாவரங்கள், உயிரினங்கள் என அனைத்தும் அழியும். ஒரு கிராம் மன்ணில் நூறு கோடி நுண்ணுயிர்கள், மண்ணுக்கும் உயிரினங்களுக்கும் பயிர்களுக்கும் உதவிக்கொண்டே இருக்கின்றன. அவற்றைக் காக்க வேண்டிய பணி நம்முன்னே பெரும் சவாலாக உருவெடுத்திருக்கிறது. மண்ணில் உள்ளது போல் நம் உடலும் நன்மை செய்யக்கூடிய பாக்டீரியாக்கள் அதிகமுள்ளன.
இத்தனை நன்மை செய்யும் நுண்ணுயிர்களை, வேளாண்மைக்குப் பயன்படுத்தலாம் என்பதை முதன்முதலில் கண்டுபிடித்தவர், சோவியத்ரஷ்யாவைச் சேர்ந்த விஞ்ஞானி, வினகராட்ஸ்கி அவர் கண்டுபிடித்த, அசோஸ்பைரில்லம்தான் முதன் முதலில் கண்டுபிடிக்கப்பட்ட உயிர் உரம். 1929-ம் ஆண்டில் இது கண்டுபிடிக்கப்பட்டாலும், இன்னமும்கூட நம் விவசாயிகளை முழுமையாகச் சென்றடையவில்லை என்பதுதான் வேதனை.
அசோஸ்பைரில்லத்துக்குப் பிறகுதான் ஒவ்வொரு சத்துக்களையும் கரைக்கக்கூடிய நுண்ணுயிர்கள் பயன்பாட்டுக்கு வந்தன. சூடோமோனஸ், பாஸ்போ பாக்டீரியா எனப் பலவகையான உயிர் உரங்கள் இப்போது பயன்பாட்டில் உள்ளன. தமிழக விவசாயிகள் தற்போதுதான் உயிர் உரங்களை அதிகளவில் பயன்படுத்த தொடங்கியிருக்கிறார்கள் என்பது ஆறுதலான செய்தி.
செயற்கையாக நாம் கொடுக்கும் உயிர் உரங்களை ஒருபுறம் இருந்தாலும், மண்ணில் உள்ள கோடிக்கணக்காண நுண்ணுயிர்கள்தாம் ஆண்டாண்டு காலமாக உழவர்களுக்கு உதவியாக இருந்து வருகின்றன என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.இவற்றை காக்க நாம் என்ன செய்திருக்கிறோம்.
மனிதர்களுக்குத் தேவைப்படுவது போலவே, நுண்ணுயிர்கரிகளுக்கும் உணவும் உறைவிடமும் அவசியம்.மண்ணில் விழும் பொருள்களைச் சிதைத்து, அதில் இருந்துதான் நுண்ணுயிர்கள் தங்களுக்கான உணவை எடுத்துக்கொள்கின்றன. அதைத்தான் நாம் ‘மட்குதல்’ என்கிறோம். ஒரு பொருளை மட்க வைத்து, தனது உணவுத் தேவையைப் பூர்த்திச் செய்தவுடன் , அதைத் தாதுக்களாக மாற்றி, தாவரங்களுக்குக் கொடுக்கும் பணியைச் செய்கின்றன, நுண்ணுயிர்கள்.
பாரம்பர்யாக விவசாயத்தில் பயன்படுத்தி வரும் தொழுவுரம், நுண்ணுயிர்களுக்கான ஆகச் சிறந்த உணவு. காலப்போக்கில் தொழுவுரங்களை குறைத்துவிட்டு, குப்பை உரங்கள் என்ற பெயரில் நகரத்து குப்பைகளைக் கொட்டுகிறோம். இதில், எளிதில் மட்காத உள்ளிட்ட பல பொருள்கள் கலந்திருக்கின்றன.
இவற்றை சிதைக்க முடியாததால், நுண்ணுயிர்களுக்கு உணவுப் பற்றாக்குறை ஏற்படுகிறது. நாம் இடும் உரங்களில் மூன்று பங்கு தாவரக் கழிவுகளும்(இலை தழைகள்). ஒரு பங்கு கால்நடை கழிவுகளும் கட்டாயம் இருக்க வேண்டும். அப்படி இருந்தால்தான் அது உரம். இல்லையென்றால் வெறும் குப்பைதான். மண்ணுக்கு நல்ல தொழுவுரம் கொடுத்தாலே, நுண்ணுயிர்களுக்குப் போதுமான உணவு கிடைப்பதுடன், மண்ணில் உள்ள அங்ககச் சத்துக்களும் அதிகரிக்கும்.
பூமியெங்கும் இருந்த காடுகளையும் மரங்களையும் அழித்து கான்கிரீட் காடுகளாக்கிக் கொண்டு இருக்கிறோம். அதனால், உணவுத் தட்டுப்பாடு போலவே, இருப்பிடமும் பெரும் பிரச்சனையாக உருவெடுத்திருக்கிறது. காடுகள், மரங்கள் வேகமாக அழிக்கப்படுவதால் அதன் கீழே வாழ்ந்த நுண்ணுயிர்களும் அழிந்து போகின்றன. மேலும், மண்ணில் விழும் மட்கும் பொருள்களின் எண்ணிக்கையை விட, மட்காத பொருள்களின் எண்ணிக்கை அதிகரிப்பதும் நுண்ணுயிர்கள் அழிய முக்கியக் காரணம். இவற்றை மீட்டெடுக்க நிலத்தில் தொழுவுரப் பயன்பாட்டை அதிகரிக்க வேண்டும். அதோடு, வேளாண் காடுகள் வளர்க்கப்பட வேண்டும். மரங்களை உள்ளடக்கிய விவசாயத்தை மேற்கொள்ள வேண்டும். தாவரங்களின் இலைதழைக் கழிவுகள்தான் நுண்ணுயிர்களுக்கான உயிராதாராம். அந்த ஆதாரத்தை நாம் உருவாக்கித் தர வேண்டும். நுண்ணுயிர்கள் மீது நாம் செலுத்தும் அதிபயங்கர வன்முறை, ரசாயனப் பயன்பாடு.
ஏற்கனவே, உணவில்லாமல் பட்டினியாய் கிடக்கும் நிலையில், ரசாயன உரங்களை மண்ணில் கொட்டுவது வெந்தபுண்ணில் வேல் பாய்ச்சுவதற்குச் சமமானது. இதனால், நுண்ணுயிர்கள் அழியுமே தவிர, பெருகாது. ரசாயன உரங்களால் மண்ணின் கார அமில நிலை மாறும்போது, அது நுண்ணுயிர்களையும் பாதிக்கும். வெப்பம், ரசாயன உரங்கள், பூச்சிக்கொல்லிகள், பூஞ்சணக்கொல்லிகள் போன்ற பல்வேறு காரணிகளால் நுண்ணுயிர் பெருக்கம் தடைபடுகிறது. இவை அனைத்தையும் குறைத்து, இயற்கை உரங்களை அதிகளவில் பயன்படுத்தினாலே நுண்ணுயிர்களைப் பெருக்கிவிடலாம்
நுண்ணுயிர்கள் சேவை, மண்ணோடு நின்று விடுவதில்லை. உயிரினங்களின் உடல் உறுப்புகளிலும் இவை பணியாற்றுகின்றன. உதாரணமாக, நாம் உண்ணும் உணவைச் செரிக்க வைப்பது, குடலில் உள்ள ‘லேக்டோ பேசிலஸ்’ எனும் நுண்ணுயிரி. தற்போது தாய்ப்பால் ஜீராணமாகாமல் குழந்தைகள் வாந்தியெடுக்கும் நிகழ்வுகள் அதிகம் நடக்கின்றன. இதற்குக் காரணம், ‘லேக்டோ பேசிலஸ்’ என்ற நுண்ணுயிரிக் குறைபாடுதான்.
நுண்ணுயிர்கள் அண்ட வெளியெங்கும் நீக்கமற நிறைந்திருக்கும். காற்று, தண்ணீர், நிலம் என அனைத்து இடங்களிலும் இருக்கின்றன. நம் காலுக்குக் கீழே கோடிக்கணக்கான உயிர்கள் இந்த உலகை உயிர்ப்புடன் வைத்திருப்பதற்காக ஓயாது உழைத்துக்கொண்டே இருக்கின்றன என்பதை நாம் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும்.

ஜப்பானிய இயற்கை உரம் பயன்படுத்துவதால் கிடைக்கும் பயன்கள்

japanese-organic-fertilizers

பயிருக்கு நைட்ரஜன், பாஸ்போரிக் அமிலம், பொட்டாசியம், மெக்னீசியம், கால்சியம் மற்றும் இரும்பு, மாங்கனீசு, துத்தநாகம், தாமிரம், போரான் மற்றும் சிலிக்கான் ஆகியவை சுவடு கூறுகளாக தேவைப்படுகின்றன. இவை எல்லாம், ஜப்பானில் தயாரிக்கப்பட்ட இயற்கை [ஆர்கானிக்] திட, கரிம உரத்தில் செரிந்து உள்ளன

Continue reading

C.R.1009 க்கு மாற்றாக CR 1009 sub- 1

CR 1009 sub-1
C.R.1009 க்கு மாற்றாக C.R.SUB 1 –
சீர் ஆர் 1009 சாவித்தரி , பொன்மணி
சீ.ஆர்.1009 என்ற உயர்விளைச்சல் நெல் ரகவிதைகள் இந்த பசலி ஆண்டுடோடு மறுஉற்பத்தி செய்வது நிறுத்தபடுகிறது அதற்கு மாற்றாக சீ.ஆர் சப் 1 என்ற ரகத்தை முன்மொழிவதாக அரசுதுறை தரப்பிலிருந்து வந்த அறிவிப்பு வெளியானதையடுத்து விவசாயிகளுடன் சில செய்திகளை பகிர்ந்துகொள்ள முற்படுகிறேன்.
சாவித்தரி,பொன்மணி எனும்பெயரில் தமிழக விவசாயிகளால் கடந்து நாப்பதாண்டுகளாக பயிரடபட்டுவந்த சீ.ஆர்.1009 என்ற நெல்ரகம்.தென்னிந்திய பாரம்பரிய உணவான இட்லிக்கு அதிகம் பயன்படுத்துவதால் இட்லி அரிசி என்றும் அழைக்கபட்டுவந்தது.இந்த சீ.ஆர்.1009 ரகநெல் இந்த ஆண்டுக்கு பிறகு எந்த வேளாண்மை கூட்டுறவு அங்காடியிலும்,தனியார் விதை விற்பனை மையங்களுக்கு தனது பவுண்டேஷன் விதைகளையும் சான்றிதழ் விதைகளையும் விற்பனைக்கு கொண்டுவரபோவதில்லை என்ற அரசதுறை அறிவிப்பை உங்களிடம் பகிர்ந்துகொள்ளும் அதேவேளையில்
சீ.ஆர்.1009 நெல் ரகம் குறித்து பார்ப்போம்
சீ.ஆர்.1009
பிலிப்பைன்ஸை தலைமையிடமாடாக கொண்ட IRRI(international rice research centre ) மூலமாக கடந்து 1982 ம் ஆண்டு அறிமுகம் செய்யபட்ட சம்பா பட்ட உயர்விளைச்சல் ரக நெல் சீ.ஆர்.1009
நீண்டகால நெற்பயிரான இதன் வயது 150-155 நாட்கள், தாழ்வான ஆற்றுசமவெளி பகுதிக்கு ஏற்ற ரகமான இது தமிழகத்தின் அனைத்துபகுதியிலும் பரவலாக பயிரிடபட்டுள்ளது. இதனுடைய அதி ஒளிசேர்க்கை்திறன் காரணமாக குறைந்த சூரியவெளிச்சம் கொண்ட மேகமூட்டமான சூழலிலும் அதிகம் மகசூல் தரவில்லது.புகையான் நோய்கான நோய் எதிர்ப்புதிறனை தன்னக்கதே கொண்டது.
இதன் ஆயிரம் நெல்மணிகளின் எடை 23கிராம்
இது சராசரியாக விளைச்சல் திறன் ஹெக்டேருக்கு 5 டன் அதாவது ஏக்கருக்கு 2 டன்
இதை வாசித்துகொண்டிருக்கும் விவசாயிக்களுக்கான மொழியில் சொல்வதானால் மாவுக்கு 675கிலோ நமது 24 மரக்கா 60 கிலோ முட்டையில் 11 மூட்டை.
இந்த நிலையில் நம்மிடையே சீ.ஆர்.1009 க்கு மாற்றாக முன்மொழியபடும் சீ.ஆர்.சப் 1 என்ற ரகம் பற்றிய சில தரவுகளை பார்ப்போம்.
சீ.ஆர்.சப்-1 CR 1009 sub-1

 

முதலாவதாக சீ.ஆர்.1009 க்கு மாற்றாக சீ.ஆர்.சப்1 முன்மொழியபட காரணம் இதனுடைய வெள்ளகாலத்தின் தாங்குதிறன்தான் சீ.ஆர்.1009 நீரில் மூழ்கினால் இரண்டொருநாட்களில் சேதமடைந்துவிடும் ஆனால் நீரில் மூழ்கிய நிலை 15 நாட்கள் இருந்தாலும் தாங்குதிறன் கொண்டது சீ.ஆர்.சப்.1 என்பதை இதனை முன்மொழிவதாக சொல்லப்படுது…
C.R.SUB என்பதில் submerged -எனும்பொருளில் SUB பின்னொட்டாக சேர்க்கபட்டுள்ளது
கடந்த 2009 ம் ஆண்டு IRRI யால் ஒரிசாவில் அறிமுகபடுத்தபட்ட நெல்ரகம் சீர்.ஆர்.சப் 155 நாள வயதுடையது
உருவத்தில் அளவீட்டில் சீர்.ஆர்.சப்1 ரகநெல் சீ.ஆர் 1009 நெல்லுக்கு சமமாக இருக்கும் அதேவேளையில் சீ.ஆர்.1009 தை விட இந்த நெல் 17% அதிகவிளைச்சல் கொண்டது இதனசராசர விளைதிறன் ஹெக்டேருக்கு 5759கிலோ. இவையெல்லாம் இந்த சீ.ஆர் 1009 ன் மாற்றுபயிராக சீ.ஆர் சப் 1 நெல்லின் நேர்மறை சிறப்புகள்
ஆனால் டெல்டா விவசாயிகள் தரப்பில் முன்வைக்கபடும் முக்கிய செய்தி இந்த புதிய சீ.ஆர்.சப் 1 என்ற ரக நெல் உயர்ந்து வளரும் தன்மைகொண்டதென்பதாலும் இதன் அதிகவிளைதிறன் காரணமாக 140 நாட்களுக்கு பிறகு சாய்ந்துவிடுகிறது
அதிகதழைசத்து இடுகை காரணமாகவும் தொடர்ச்சியான மழைநாட்களின் காரணமாக அதிகமாக வளர்ந்து இப்போது ஏறக்குறைய தரையோடு தரையாக படுத்துவிட்டது இந்த நிலையில் மழை தொடர்ச்சியாக பெய்துவருதால் படுத்த பயிர்களின் நெற்கதிர்கள் கொத்தோடு முளைத்து நாசமாகிவருகிறது.
நாகை தஞ்சை திருவாருர் மயிலாடுதுறை யை உள்ளடக்கிய பத்துமுதல் பதினைந்து லட்சம் ஹெக்டேர் நஞ்சை பரப்பில் கணிசமாக பரப்பில் சீ்.ஆர்.சப் ரக நெல் தரையோடு தரையாக சாய்ந்துகிடக்கிறது இது இனிவரவிருக்கும் மழைநாட்களில் முற்றிலும் சேதமடைந்துவிட வாய்ப்புள்ளது.
இதனை அரசு கவனத்தில் கொள்ளவேண்டும் .உழவர்கள் தரப்பில் இது நமக்கு மிகப்பெரிய பாடம் எனவே இனிவரும்காலங்களில் இதுபோன்ற இக்கட்டான நிலையை எதிர்கொள்ளாதிருக்க அடுத்த ஆண்டு நமது பழைய சாவித்ரி் நெல்லான சீர்.ஆர்.1009 நெல்லை மீட்டெடுத்து விதைக்காக பத்திரபடுத்துவது சாலச்சிறந்தது. நமது தரப்பில் சீ.ஆர்.1009 நெல்லை பாதுகாத்து பரவலாக்க முன்னிற்போம்.
சூழலின் தேவைகருதி சீ.ஆர்.1009 ரகநெல்லை பாதுகாத்து பரவலாக்குவோம்.
அதே வேளையில் சீ.ஆர்.சப்-1 பயிரிடநேர்ந்தால் தழைசத்து இடுவதை குறைத்துகொண்டு முழுமையாக
இயற்கைவழிமுறையில் பஞ்சகவ்யா,அமுதகரைசல் இடுகை மூலம் இட்லிஅரிசியை உற்பத்தி செய்யும்போது நெற்பயிர்கள் அதிக உயரம் வளர்ந்து சேதமடையாமலும் நஞ்சில்லா அரிசியை மனிதகுலத்துக்கு பகிர்ந்த நிறைவைவும் பெறலாம்.