Category: Agriculture News

கஜா புயல் பேரழிவுக்கு உண்மையான காரணம் பனைமரங்கள் வெட்டப்பட்டதே

சுனாமி, புயல் காற்று வரும் போது அரணாக இருந்து தடுத்து நிறுத்தக் கூடிய வலிமை பனை மரத்துக்கு உண்டு. தானே  புயலாலும் சரி. கஜா புயலாலும் பனை மரத்தை வீழ்த்த முடியவில்லை

Continue reading

புற்கள் எதிரியா, நண்பனா

புற்கள் எதிரியா நண்பனா

புல் வகையான களைகள் இயற்கை விவசாயத்தில் மிகப்பெரிய தடை என சொல்கிறார்கள். நாமும் அதை முழுமையாக நம்புகிறோம். 
ஆனால் உண்மை நிலை வேறு என தெரிகிறது. 

Continue reading

சீத்தா பழம்

சீத்தா பழம்

தமிழகத்தில் விவசாய நிலங்களை ஒட்டியிருக்கும் சிறுகாடுகள் மற்றும் கரடுகளில் சீத்தா மரங்கள் நிறைய உண்டு. குறிப்பாக, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வனம் சார்ந்த பகுதிகள் அதிகம் இருப்பதால் இங்கே சீத்தா பழ விளைச்சல் அதிகம்.

ஆடியில் மொட்டுவிடும் சீத்தா, பிஞ்சாகி காயாகி ஐப்பசி, கார்த்திகை மாதங்களில் இனிக்க இனிக்க விற்பனைக்கு வந்து விடுகின்றன.

Continue reading

தற்சார்பு விவசாயி-9 குவிக்கப்பட்ட சூரிய வெப்பம்

ஒரு தற்சார்பு விவசாயி விதை, ஆற்றல், உரம், தண்ணீர் எதற்குமே கைநீட்டக்கூடாது என்று சென்ற அத்தியாயங்களில் பார்த்தோம். தோட்டத்துக்கு வேண்டிய ஆற்றலை நாமே உற்பத்தி செய்துகொள்ள பல வழிகள் உள்ளன என்றும் தெரிந்துகொண்டோம். அது, கட்டமைத்துக்கொள்ள எளிதாகவும், விலையில்லாமலும் சுற்றுச்சூழலை பாதிக்காவண்ணமும் இருக்கவேண்டும்.

Continue reading

தற்சார்பு விவசாயி-8 சூரிய வெப்பம்

நான் பள்ளியில் படிக்கும்போது கால்பந்து மைதானத்தின் வேலியோரம் யூகலிப்டஸ் மரங்கள் வரிசையாக நடப்பட்டிருந்ததை கண்டேன். தைல மரங்கள் வேகமாக வளரும். எங்கள் பள்ளியின் தலைமையாசிரியர் ஒரு ஆயர். நீண்ட பிரம்பை முதுகுப்புறம் அங்கியினுள் மறைத்து வைத்திருப்பார்.ஒருநாள் அவரது செல்ல நாய் இறந்துவிட்டது. ஒரு தைல மரத்தடியில் இந்த நாயை புதைத்தனர். கொஞ்ச நாளில் அந்த மரம் மட்டும் மற்ற மரங்களைவிட வேகமாக நெட்டையாக வளர்ந்ததை நான் பார்த்து வியந்ததுண்டு. நாய் நல்ல உரமாகி இருக்கலாம்.

ஒருநாள் அவரது செல்ல நாய் இறந்துவிட்டது. ஒரு தைல மரத்தடியில் இந்த நாயை புதைத்தனர். கொஞ்ச நாளில் அந்த மரம் மட்டும் மற்ற மரங்களைவிட வேகமாக நெட்டையாக வளர்ந்ததை நான் பார்த்து வியந்ததுண்டு. நாய் நல்ல உரமாகி இருக்கலாம்.

Continue reading

தற்சார்பு விவசாயி-7 மாட்டுவண்டி

விவசாயத்துக்கு தேவையான தண்ணீரை இறைக்க மட்டும் ஆற்றல் இருந்தால் போதாது. எருவை கொண்டுவரவும், விளைபொருட்களை கொண்டுசெல்லவும், மண் அடிக்கவும் இன்ன பிற செயல்கள் செய்யவும் மற்றும் போக்குவரத்துக்கும் ஆற்றல் தேவை. தற்போதுள்ள நிலைமையில் ஒரு டிராக்டர் மற்றும் ட்ரைலர் மொத்தமாக சேர்ந்து குறைந்தபட்சம் 3 லட்சம் ஆகும். தற்போது ஒரு வண்டியை வேலைக்கு வாடகைக்கு எடுக்கவேண்டுமென்றால் 800 தேவை. பக்கத்து ஊருக்கு போக சுளையாக 1500 முதல் ஆகும். சிறு, குறு விவசாயிகளால் அது முடியாது.

Continue reading

தற்சார்பு விவசாயி-6 காற்றாடி

நான் விறகு பொறுக்க போகும்போது அம்மா, “அத்தி மரத்திலிருந்தோ அதனைச் சுற்றியோ காய்ந்த விறகைப் பொறுக்காதே,” என்று என்னை எச்சரித்தார். “ஏன்” என்றேன். “அது கடவுளின் மரம், அதனை வெட்டவோ, தீ எரிக்கவோ மாட்டோம்” என்றார். அப்போது அவர் என்ன சொல்கிறார் என்று எனக்கு புரியவில்லை.

அத்தி மரத்திலிருந்து இருநூறு முழம் தள்ளி ஒரு நீரோடை இருந்தது. அதற்கு ஆப்பிரிக்காவில் காணுங்கு என்று பெயர். நேரடியாகவே அந்த தண்ணீரை குடிப்போம். சிறுமியாக, நீரூற்று கொப்பழித்து புறப்படும் இடத்துக்கு போயிருக்கிறேன். ஆரோரூட் பயிரிடுவோம். செடிகளின் கீழ் நூற்றுக்கணக்கான தவளை முட்டைகள் இருக்கும். அவற்றை மாலையாக அணிய ஆசை.

அத்திமர வேர் அமைப்பிற்கும் நிலத்தடி நீர் தேக்கத்திற்கும் நேரடி தொடரிப்பு இருக்கிறது என்று பின்னல் அறிந்துகொண்டேன். வேர்கள் பாறையை குடைந்து மண்ணையும் தாண்டி நிலத்தடி நீரை அடையும். வேர்களின் வழியாக தண்ணீர் மேல் எழும்.

Continue reading