Category: Agriculture News

தென்னை ஈரியோபிட் கரையான்

தென்னை ஈரியோபிட் கரையான் coconut tree
தென்னை ஈரியோபிட் கரையான்:

 

அறிகுறிகள்:

முக்கோண வடிவ மஞ்சள் நிறத் திட்டுக்கள் காய்களின் கழுத்துப் பகுதியில் காணப்படும்.

காய்ந்த திசுக்கள் பழுப்பு நிற திட்டுக்கள், நீளவாக்கில் பிளவுகள், நார்ப்பகுதியில் வெட்டுப்பட்டிருக்கும்.

தாக்கப்பட்ட பகுதியிலிருந்து பிசின் போன்று திரவம் வடிதல் கொப்பரையின் அளவு குறைந்து காணப்படும்.

உருமாறிய காய்கள் பிளவுகளுடன், கெட்டியான நார்களுடன் காணப்படும்.

பூச்சியின் விபரம் :

இளம் பூச்சி மற்றும் பூச்சி – நீளமான உடலுடன் இளம் மஞ்சள் நிறத்தில் புழு போன்ற தோற்றத்துடன் காணப்படும்.

இதன் பாதிப்பு தவிர்க்க வை உப்பு கலந்து மஞ்சள் தூள் கலந்து
மரத்தின் மேலே வைக்கிறார்கள்​

ஊட்டஉரம்

ஊட்டஉரம் compost

நுண்ணுயிரிகளின் பெருக்கம் சிறப்பாய் இருக்க வயலுக்கு ஊட்ட உரம்

வணக்கம்,
1 ஏக்கருக்கு 100 கிலோ மட்கிய தொழுவுரம் அல்லது ஆட்டுசாணத்துடன்
மீன்அமிலம் – 1லிட்டர்
இஎம் – 500 மில்லி
கோமியம் – 10 லிட்டர்
பயறு மாவு – 2 கிலோ
பழக்கரைசல் – 2 லிட்டர்
வெல்லம் – 2 கிலோ
பஞ்சகவ்யா – 1 லிட்டர்
அசோஸ்பைரில்லம் – 1 கிலோ
சூடோமோனஸ் – 500 கிராம்
கடலைபுண்ணாக்கு -10 கிலோ
புங்கன் புண்ணாக்கு – 10 கிலோ
ஆமணக்கு புண்ணாக்கு – 10 கிலோ.

நிழல்பாங்கான இடத்தில் கீழே தார் பாய் அல்லது பிளாஸ்டிக் ஷீட் விரித்து, அதன் முதல் அடுக்கு எரு போட்டு அதன் மேல் மேலே உள்ள இடுபொருட்களை போட்டு மீண்டும் எரு வை மேலே போட்டு தண்ணீர் தெளித்து மீண்டும் அடுத்த லேயர் எரு மற்றும் இடுபொருட்கள் போட்டு தண்ணீர் தெளித்து, மேலே தார்பாய் போட்டு முழுவதுமாக நன்றாக மூடிவைக்க வேண்டும்.

6ம்நாள் தார்பாயை எடுத்து மீண்டும் தண்ணீர் தெளித்து மண்வெட்டி கொண்டு மேலும், கீழுமாக நன்கு கலந்து மீண்டும் மூடி வைத்து, மறுநாள் காலை அல்லது மாலை வேளையில், வேப்பம் புண்ணாக்கு- 10 கிலோ கலந்து வயலுக்கு தூவி விடவும்.

ஊட்டஉரம் வயலுக்கு இடும் போது வயலில் ஈரப்பதம் கண்டிப்பாக இருக்கவேண்டும். அப்பொழுது தான் நுண்ணுயிரிகளின் பெருக்கம் சிறப்பாய் இருக்கும்.

 

கற்பூர கரைசல் பூச்சி கொல்லி மற்றும் பயிர் ஊக்கி

கற்பூர கரைசல் பூச்சி கொல்லி மற்றும் பயிர் ஊக்கி

கற்பூரக் கரைசல்: கற்பூர கரைசல் பூச்சி கொல்லி மற்றும் பயிர் ஊக்கி
கற்பூர கரைசல் அணைத்து வகையான பயிர்களுக்கும் பூச்சி கொல்லி மற்றும் பயிர் ஊக்கியாக பயன்படுகிறது. இக்கரைசல் பல விவசாயிகளால் உபயோகப்படுத்தப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்று.

Continue reading

கவனம்கோடையின் தாக்கம் அதிகமிருக்கும்

sun

அன்பு விவசாய சொந்தங்களே

தற்போது தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் இருக்கவேண்டிய அதிகாலைப் பனியின் அளவு மிகவும் குறைவாக உள்ளது.இது வருத்தமளிக்கக்கூடிய நிகழ்வு.

எதிர்வரும் கோடையின் தாக்கம் அதிகமிருக்கும் என்பதற்கான அடையாளம்.

நிலத்தடி நீரீனை அளவாகப் பயன்படுத்துவது ரும் வறட்சி மாதங்களில் ஓரளவு தண்ணீர் பற்றாக்குறையைத் தீர்க்கும்.

விவசாயத்தில் இப்போதிருந்தே பயிருக்கான தினசரி தண்ணீர்த் தேவை என்னவென அறிந்து காலை, மாலை வேளைகளில் பிரித்துக் கொடுத்து பாசனம் செய்வது நல்ல பலன்தரும்.

பல்வேறு வகையான மூடாக்கு அமைத்து பாசனம் செய்வது, கொடுக்கும் தண்ணீர் வேர் வழி சென்று உறுதியாக செடியின் வளர்ச்சிக்கு உதவ வாய்ப்பாகும்.

சொட்டுநீர் பாசனம் அதிலும் சொட்டுவான்(Dripper) அமைத்து பாசனம் செய்வது சிறப்பு. மேலும் விழும் சொட்டுக்களையும் பூமியில் ஒரு அடி ஆழக்குழி அமைத்து அதில் விழவைப்பது தென்னை,தோட்டக்கலைப் பயிர்களுக்கு அவசியம்.

தெளிப்புநீர் பாசனத்தைத் தவிருங்கள். வாய்க்கால் வழிப் பாசனத்தைத் தவிர்த்து குறைந்தபட்சம் வாய்மடை வரையிலாவது குழாய் அமைத்து நீரீனைக் கடத்துவோம்.

தற்போது நிலத்தடி நீர் நிறைய இருப்பது போல் தோன்றினாலும் வற்றிப்போக நிறைய வாய்ப்புள்ளது.கவனம்.

பிரிட்டோராஜ்
வேளாண் பொறியாளர்
26.12.2017.

மண்ணில் மண்புழுக்களின் ஓட்டம் அவசியம்

மண்ணில் மண்புழுக்களின் ஓட்டம் அவசியம்

இடு பொருட்கள் விலை கொடுத்து வாங்காமல் நாம் நமது கால்நடைகளின் கழிவுகளில் இருந்து இடுபொருட்களை தயாரித்து பயிர்களுக்கு கொடுத்து வருவதே சிறந்தது.

கால்நடை கழிவுகள் நுண்ணுயிரிகளை பெருக்கம் செய்வது இல்லை.
நுண்ணுயிரிகள் அதனுள் அடங்கியுள்ளன.

Continue reading

அசோலா

அசோலா azola, natural feeds

அசோலா படுக்கை / குட்டை – நேரிடையாக வெயிலில் பட கூடாது.

உங்களது ஜல்லிக்கட்டு காளை குளிப்பாட்டும் குளம் அநேகமாக வெயிலில் படும் அமைப்பில் இருக்கலாம், அசோலா வளர அதற்கு உணவு நாம் கொடுக்க வேண்டும். தழைசத்து அதற்கு தேவை ..

Continue reading

மீன் வளர்ப்பு

மீன் வளர்ப்பு fish farming techniques

மீன் வளர்ப்பு தொழிலை தொடங்க எந்த நிலம் சரியானது? என்னென்ன செய்யணும்? இதை வாசிங்க தெரியும்

Continue reading