Category: News

உயிர்ச்சூழல் பாதுகாப்பு biodiversity conservation

உயிர்ச்சூழல் பாதுகாப்பு biodiversity conservation

நாகரீகம் மாற்றத்தால் விவசாயம் வாழ்வியல் என்ற நிலை மாறி,  விவசாயத்தை தொழிற்சாலையாக மாற்றி இரசாயன உரங்கள், பூச்சிக்கொல்லிகள் பயன்பாடு வந்ததால் விவசாயமும் கெட்டு விவசாயிகளும் கெட்டு இந்த  பல்லுயிர் ஒருங்கிணைப்பு துண்டிக்கப்பட்டு விட்டது என்பது நிதர்சனமான  உண்மை.

Continue reading

சுதேசி பொருளாதாரம் தற்சார்பு பொருளாதாரம் மேக்இன் ஹோம்

தற்சார்பு பொருளாதாரம்
சுதேசி பொருளாதாரம் தற்சார்பு பொருளாதாரம் மேக்இன் ஹோம்

 

by வெ.லோகநாதன், நம்பியூர்
சுதேசி மற்றும்  சுதேசி பொருளாதாரம்.   இது‌ நாம் அடிக்கடி பேசப்படும் விடயம். இது பற்றி இன்னும் உள்நோக்கி செல்ல வேண்டியது தற்கால சூழலுக்கு மிகவும் அவசியம்.
தற்சார்பு பொருளாதாரம் என்றால் என்ன?
இன்று நம் நாட்டில் குண்டூசி முதல் சொகுசு கார்கள் வரை பன்னாட்டு கம்பெ கம்பெனிகளின் தாக்கம் அதிகமாக இருக்கிறது அதுவும் சீன பொருட்கள் ஆதிக்கம் அதிகம்.
நாம் அனைவரும் எந்த பொருட்கள் வாங்கும் போதும் நம் நாட்டில் தயாரான பொருட்களா என்று பார்த்து வாங்க  வேண்டும்.   அதைவிட தற்சார்பு பொருளாதாரம்  மிகவும் சிறந்த விசயம்.
தற்சார்பு பொருளாதாரத்துக்கு ஒரு உதாரணம் – கற்றாழை!
தற்சார்பு பொருளாதாரம்
தற்சார்பு பொருளாதாரம்
தற்சார்பு பொருளாதாரம் பற்றி ஒரு உண்மை சம்பவம் கூறுகிறேன் சுமார் 35 வருடத்திற்கு முன் எனது தாத்தா என்பதையும் விட நமது தாத்தா என்றே கூறலாம்,  ஏதோ ஒரு பட்டையை தண்ணீர் தெளித்து வைப்பார்கள்.  தினமும் ஒரு கால் மணிநேரம் மடடுமே அதற்கு செலவு செய்வார்.
அடுத்து மதியம் சாப்பிட்டு ஓய்வுக்கு  செல்வார்.  அவர் அதை ஊறிய பின் தட்டி மருக்கேற்றுவார்.  அதை மரத்தில் கட்டி மேலும் முருக்கேற்றி கயிராக திரித்து கட்டிலுக்கு கட்டிவிடுவார்கள்.  அந்த தாவரம் –  கற்றாழை!
அதே போல் தேங்காய் மட்டை அடித்து நாராக்கி அதை கயிறு முருக்கி தண்ணீர் இறைக்க,  நுகத்தடிக்கு கட்ட,  மாடு ஆடுகள் கட்ட இப்படி பல பயன்பாட்டுக்  பயன்படுத்தி விடுவார்கள்.
மேலும் கிழிந்து போன அவரது வெள்ளை வேஷ்டி கூட மாடுகளுக்கு தும்பு , கழுத்து கயிறு என மாறிவிடும்.   கயிற்று கட்டிலுக்கு போக மீதி உள்ள கயிறு எலி முயல் போன்றவை பிடிக்கும் வளை ஆகிவிடும்.  இன்னும் அந்த வளை அவர்கள் ஞாபகமாக உள்ளது.
இவர் ஓர் ஆண்டில்  தயாரிக்கும் இதுபோன்ற பொருட்கள் இன்றைய மதிப்பில் 15000 முதல் ( இன்று வடைக்கயிறு என்பது இல்லை இது ஏத்தம் இறைக்க பயன்படும் ) 20000 ரூபாய் வரையில் இருக்கும்.  இதற்கு இவர் பயன்படுத்தும் நேரம் தினமும் 15- 30 நிமிடங்கள்.
பருத்தி விதை முதல் பழ விதை வரை எதுவும் பணம் கொடுத்து வாங்குவது இல்லை. இது போன்று எண்ணற்ற செயல்களை நம் முன்னோர்கள் செய்து வந்த பாரம்பரியத்தை சேர்ந்தவர்கள் நாம்.
இன்றைய நிலை
இன்று ராகிகளி செய்யதெரியாத அம்மாக்கள்….
பலாப்பழம் சுழை பால் இல்லாமல் பிரிக்கதெரியாத அப்பாக்கள்…..
பெப்ஸி ,  கோக்,   பாக்கெட் உணவுகளுக்கு அடிமையாக்கும் இன்னும் பன்னாட்டு உணவகங்கள் ஸ்விகி,ஜுமோட்டோ அபாயம் வேறு…… இதற்கு தீர்வு காண வேண்டியது காலத்தின் கட்டாயம்.

இன்று மேக்இன் இண்டியா போன்று  மேக்இன் ஹோம் என்பதை நாம் நம் பகுதியில் ஊக்குவிக்க வேண்டும்

தற்சார்பு பொருளாதாரம் – மேக்இன் ஹோம்
 இன்று மேக்இன் இண்டியா போன்று  மேக்இன் ஹோம் என்பதை நாம் நம் பகுதியில் ஊக்குவிக்க வேண்டும் இன்றைய நிலையில் இனிவரும் காலங்களில் சுதேசி பொருளாதாரம் அத்தோடு  தற்சார்பு மரபுவழி தேசிய பொருளாதாரம் தான் நமக்கு நீண்ட பயனளிக்கும்  என்பதுதான் நம் சந்ததிகள் பயனுற நாம் செய்யும் ஏற்பாடாக இருக்கும்
பதிவு செய்த நாள் 23 /4/2020
வெ.லோகநாதன், நம்பியூர்

மழையை வரவழைக்கும் இலுப்பை மரம்

இலுப்பை மரம்
மழையை வரவழைக்கும் இலுப்பை மரம் அழிவின் விளிம்பில் 

 

வெப்ப மண்டல மரமான இலுப்பை மரம் அழிவின் விளிம்பில்  இருக்கிறது. இலுப்பை மரம் மேகக்கூட்டங்களை தருவித்து மழையை வரவழைக்கும் குணம்கொண்டது.
இது ஒரு பணம் காய்க்கும் மரம் என்றால் மிகையாகாது. நன்கு வளர்ந்த மரத்தின் ஒரு கன அடி விலை ஆயிரம் ரூபாய்கள்

இலுப்பையின் தாயகம் தமிழகம் தவிர நேப்பாளம், இலங்கை மற்றும் மியான்மரிலும் காணப்படுகிறது. நம் நாட்டில், ஜார்கண்ட், குஜராத், மத்தியபிரதேசம், பீகார், ஒரிஸ்ஸா, கேரளா மற்றும் தமிழ்நாட்டிலும் உள்ளது. இது சப்போட்டா மரத்தின் வகையை சேர்ந்தது.

மழையை வரவழைக்கும் இலுப்பை மரம்
இலுப்பை மரம் மேகக்கூட்டங்களை தருவித்து மழையை வரவழைக்கும் குணம்கொண்டது.

தமிழகத்தில் 1950 ஆம் ஆண்டு வாக்கில் 30,000 மரங்களுக்கும் அதிகமாக இருந்தன. ஆனால் 2015 ஆம் ஆண்டு கணக்கின்படி 10,000 மரங்களுக்கும் குறைவாக உள்ளதாகக் கணக்கிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 1950 ஆம் ஆண்டு வாக்கில் 30,000 மரங்களுக்கும் அதிகமாக இருந்தன. ஆனால் 2015 ஆம் ஆண்டு கணக்கின்படி 10,000 மரங்களுக்கும் குறைவாக உள்ளதாகக் கணக்கிடப்பட்டுள்ளது.

இலுப்பை ஒரு வெப்ப மண்டல தாவரம். வறண்ட நிலங்களிலும் எளிதாக வளரக்கூடியாது. இலுப்பையின் ஆயுட்காலம் நானூறு ஆண்டுகளுக்கு மேல்.
சுமார் அறுபது அடிக்கும் மேல் வளரக்கூடியது.

இலுப்பை மரத்தின் மருத்துவ குணம்

இலுப்பை மரம் அதிகமான மருத்துவ குணமுடைய தாவரம். இதன் இலை, பூ, விதை , பட்டை, எண்ணெய், புண்ணாக்கு ஆகிய அனைத்தும் சங்க காலம் தொட்டு இன்று வரையிலும் மருத்துவத்திற்கான பயன்பாட்டில் உள்ளது. ( மேலும் அறிய)

இதன் பருவகாலம் ஜனவரி மாதம் முதல் ஏப்ரல் மாதம் வரை. முளைத்த நாளிலிருந்து பத்து வருடங்களுக்கு பின்னர்தான் பலன் தரும்.

ஆலையில்லா ஊருக்கு இலுப்பைப் பூ சர்க்கரை ” என்பது பழமொழி.

இலுப்பை மரத்தின் மருத்துவ பயன்கள்

ஒரு வருடத்திற்கு இருநூறு கிலோவிலிருந்து முன்னூறு கிலோ பூவும், இருபது முதல் இருநூறு கிலோ வரை இலுப்பை விதையும் கிடைக்கும். ஒரு கிலோ விதையிலிருந்து முன்னூறு மில்லி லிட்டர் எண்ணெய் எடுக்கலாம்.

ஒரு டன் பூவிலிருந்து எழுநூறு கிலோ சர்க்கரையும் நானூறு கிலோ ஆல்ககாலும் தயாரிக்கலாம். இலுப்பை ஆல்ககால் (சாராயம்) ஒரு மாற்று எரிபொருளாக பயன்படக்கூடியது. இலுப்பை எண்ணெய் ஒரு வலி நிவாரணி, சமையலுக்கும் இது பயன்படுகிறது.

இது தவிர பாம்பு விஷம், வாத நோய், சக்கரை வியாதி, சளி , இருமல் மூலநோய், வயிற்றுப்புண், சுவாசக்கோளாறு , காயம் ஆகியவற்றிற்கு மருந்தாக பயன்படுகிறது. இலுப்பைப் பூ ஊறுகாய் காச நோய்க்கு அருமருந்தாகும்.

இலுப்பை மரத்தின் வணிக பயன்கள்

விறகாக மட்டுமின்றி அறைக்கலன்கள், மரச்சாமான்கள், சமையல் பாத்திரங்கள், வண்டிச்சக்கரங்கள், மரப்பெட்டிகள் போன்றவற்றின் தயாரிப்பிலும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

உப்புநீரை தாங்குவதால் இம்மரம் படகுகள் செய்யவும் பயன்படுத்தப்படுகிறது.

வணிகரீதியாக ஒரு ஏக்கருக்கு சுமார் இருநூறு இலுப்பை மரங்கள் வரை நட்டு, ஆண்டொன்றுக்கு ஆயிரத்தி ஐநூறு லிட்டர் எண்ணெய் எடுத்தால் அதன் மூலமாக மூன்று லட்சம் ரூபாய் வரை சம்பாதிக்கலாம். இது தவிர பூ , பட்டை, சர்க்கரை , புண்ணாக்கு , சாராயம், சிகைக்காய் ஆகிய அனைத்துமே பணம்தான்.

பணம் காய்க்கும் இலுப்பை மரம்

ஒரு கன அடி மரம் ஆயிரம் ரூபாய் வரை விலை கொண்டது . அறுபது ஆண்டுகள் கழித்து ஒரு மரம் சுமார் ஐந்து லட்சத்திற்கு மேல் மதிப்புடையதாகிறது.

இதை ஒரு பணம் காய்க்கும் மரம் என்று கூறினால் அது மிகையாகாது.

சுற்றுசூழல் காக்க இலுப்பை மரம்

வவ்வாலுக்கு மிகவும் பிடித்தமான உணவு இலுப்பை பழங்கள்தான்.

இலுப்பையின் அழிவு வவ்வாலின் அழிவு.

வவ்வாலின் அழிவு கொசுவின் வளர்ச்சி.

கொசுக்களின் வளர்ச்சி வியாதிகளின் வளர்ச்சி.

இலுப்பையை அழிவிலிருந்து மீட்போம்,

சுற்றுச்சூழல் மற்றும் ஆரோக்கியம் காப்போம்…..

ஒவ்வொருவரும்  அவர் அவர் பங்குக்கு தன் காடுகளில் ஒரு மரமாவது  வளர்க்க பாருங்கள்..

C Raj Pandian

இலுப்பை மரம் பற்றி 

நம்மாழ்வார் என்கிற ஒரு அளவிலா விளைவுவிசை

சிவா… நான் பேசுன பேச்சுக்கள, நான் எழுதுன எழுதுன எழுத்த, நான் பகிர்ந்த தத்துவத்த… இந்த எல்லாத்தையும் நம்பி ஒருத்தன் சின்ன வைராக்கியத்தோட களத்துல இறங்கி வேல செய்வான். ‘அந்தாளு சொன்ன எல்லாமே பொய்யா இருக்குது, எதையுமே செயல்படுத்த முடியலையே’ அப்டின்னு ஒருநாள் அவன் உள்மனசுக்குத் தோணும். அந்த சமயத்துல அவனா ஒரு முடிவெடுத்து, அவனுக்கு உள்ளே புதுசா தோணுன ஒரு எண்ணத்துல இருந்து ஒரு செயல அவனே சுயமா கண்டுபிடிப்பான். அது முழுசா செயல்சாத்தியம் ஆகும். அந்த இடம்… அங்கதான்ய்யா என் தத்துவம் வெற்றி பெறுது

Continue reading

நம்மாழ்வார் பிறப்பும் இறப்பும் உணர்த்திய செய்தி

nammlavaar

பேச்சைவிட அவரது அந்தச் சிரிப்பு, வார்த்தைகளின் வசீகரத்தை விட நம்மாழ்வாரின் சிரிப்புக்கு மயங்காத நபர்களே இல்லையெனலாம், எருக்கலம் காய் வெடித்து சிதறும் பஞ்சு போல ஒரு சிரிப்பு ஒலி, யாருடைய அங்கிகார எதிர் சிரிப்புக்கும் தலையசைவுக்கும் காத்திராமல் வெடித்து சிரிக்கும் அந்த சிரிப்பு சத்தம் தான் எனை மிகவும் நெருக்கமாக உணரச் செய்தது, அருகிருப்போரை அரவணைக்கும் பார்வையும், பேச்சும், சிரிப்பும் அகலாத மனிதன்.

Continue reading

உழவு – அதிகாரம் 104

tiruvalluvar statue

சுழன்றும்ஏர்ப் பின்னது உலகம் அதனால்
உழந்தும் உழவே தலை -1031.
———-
சுழன்று கொண்டிருக்கும் இவ்வுலகில், எவ்வளவு மதிப்பை உடைய தொழில்களை மக்கள் செய்தாலும், அவரவர் வயிற்றுப் பாட்டுக்கு உணவையே எதிர்பார்த்து காத்திருக்க வேண்டும்.

எத்தகைய தொழில் நடக்காமல் நின்று போனாலும் யாரும் பசியில் வாடமாட்டார்கள். ஆனால் உழவுத்தொழில் ஒன்று மட்டும் நின்று போனால் உலகம் சுற்றுவதே நின்றது போலாகிவிடும்.

எத்தகைய தொழில் செய்வோரும் உழவினால் வரக்கூடிய உணவை உன்பவரே.

Continue reading

பனையைக் காப்போம்

பனையைக் காப்போம்

மிக நீளமான உறுதியான சல்லி வேர் தொகுப்பை இது பெற்றிருப்பதால் மண் அரிப்பைத் தடுக்கும் இயற்கை அரணாக நம் முன்னோர் இதனை வயல் வரப்புகளிலும் குளம் கால்வாய்கள், ஆற்றுப்படுகைகளிலும் கடலை ஒட்டிய பகுதிகளிலும் வளர்த்தனர். இடத்தின் எல்லைகளைக் குறிக்கவும் வயல்களிலும் தோட்டங்களிலும் நட்டனர்.

Continue reading