Category: Social Media

கொடி ஆடுகள் நாட்டு ஆடுகள்

ஆடுகளில் ஏற்படும் மடிநோய் பிரச்சனைகள்

மிக உயரமாக வளரக்கூடிய ஆடுகள்.இவை போரை ஆடு என அழைப்பதுமுண்டு.

நீண்ட கழுத்தும், உயர்ந்த கால்களும் கொண்டதும், மெலிந்த உடலமைப்பு உடையதாகவும் இருக்கும்.

ஆண், பெண் இரண்டுக்கும் கொம்பு இருக்கும்.

வெள்ளை நிறத்தில் கறுப்பு புள்ளிகள் நிறைந்து காணப்பட்டால் அவை கரும்போரை என்றும், வெள்ள நிறத்தில் செந்நிறப் புள்ளிகள் நிறைந்து காணப்பட்டால் அவை செம்போரை என்று அழைக்கப்படும்.

Continue reading

கால்காணி சாத்தியமே-உணவுத் தேவையை 33சென்ட் நிலத்தில் பூர்த்தி செய்யலாம்

கால்காணி சாத்தியமே-உணவுத் தேவையை 33சென்ட் நிலத்தில் பூர்த்தி செய்யலாம் plenty-for-all

ஒரு குடும்பத்தின் உணவுத் தேவையை 33சென்ட் நிலத்தில் பூர்த்தி செய்யலாம் என ஜே.சி.குமரப்பா கூறியுள்ளார். சாத்தியமா?

என நண்பர்களிடம் பல குழுக்கள் மற்றும் முகநூல் வாயிலாக கேட்டேன் அதன் மூலமாக பல தகவல்கள் கிடைத்தன… சில தகவல்களை பகிர்கிறேன்…

1) சாத்தியம். 1 சென்ட் 436 அடி 33 சென்ட் x 436 அடி = 14,388.00 அடி. 1/3rd of an acre.

5 அடுக்கு முறையில் 36 x 36 அடி = 1296.00 அடி.

Continue reading

வேர்களுக்கு, நேரடியாக தண்ணீர் செல்லும் முறை

வேர்களுக்கு, நேரடியாக தண்ணீர் செல்லும் முறை tree-root-irrigation

வேர்களுக்கு, நேரடியாக தண்ணீர் செல்லும் முறை: வருவாய் நிர்வாக ஆணையர் சத்யகோபால், தண்ணீர் மற்றும் மின்சாரத்தை, சிக்கனமாக பயன்படுத்தி, மரங்களை வளர்க்கும் முறையை கண்டு பிடித்துள்ளார். இதை செயல்பாட்டுக்கு கொண்டு வர, அரசு துறைகள் பரிந்துரை செய்துள்ளன.

Continue reading

தமிழக ஆடு இனங்கள்

தமிழக ஆடு இனங்கள் goat

இந்த கிழ்கண்ட இனங்களே நமது தமிழக கால/பருவ சூழ்நிலைகளுக்கு மிகவும் ஏற்றது. இந்த இனங்கள் மேய்ச்சல் மற்றும் கொட்டில் முறை வளர்ப்புக்கு மிகவும் ஏற்றது.

Continue reading

இட்டேரி எனும் ஈகோ சிஸ்டம்

இட்டேரி எனும் ஈகோ சிஸ்டம்

இந்த இட்டேரி என்பது “ஒரு தனி உலகம்.” இதை நான் “Itteri eco-system” என்று அழைப்பேன்.
கள்ளி வகைகள், முள்ளுச்செடிகளுக்கு இடையே, வேம்பு, மஞ்ச கடம்பு, நுணா, புரசு போன்ற மரங்கள், நொச்சி, ஆடாதொடை, ஆவாரம் போன்ற செடிவகைகள், பிரண்டை, கோவை போன்ற கொடிவகைகள், மற்றும் பெயர் தெரியாத எண்ணற்ற புற்பூண்டுகள் நிறைந்திருக்கும்.

இவை உயிர்வேலியாய் விவசாய நிலங்களை காத்து வந்தன. இங்கு எண்ணற்ற உயிர்கள் வாழ்ந்து வந்தன.
கறையான் புற்றுகள் , எலி வங்குகள் நிறைய காணப்படும். நிழலும் ஈரமும், இலைக்குப்பைகளும் எப்போதும் காணப்படுவதால் எண்ணற்ற பூச்சியினங்கள் காணப்படும்.

Continue reading

குமரியை வெல்ல குமரியை உண்க

சோற்றுக் கற்றாழையை பனங்கற்கண்டுடன் சேர்த்து சாப்பிட்டுவர வயாகரா இன்றி இளைஞர்களின் இல்வாழ்க்கை அளவோடு சிறக்கும். இதைத்தான் சித்தர்கள் தங்களுடைய பரிபாஷையில் ‘குமரியை வெல்ல குமரியை உண்க’ என்று குறிப்பிட்டுள்ளனர்.

Continue reading