Category: Social Media

சிவப்பு அரிசி சிறப்பு

red rice

*சிவப்பு அரிசி சிறப்பு?*
`சாப்பிட்டுட்டுப் போங்க!’ என்கிற தமிழர்களின் உபசரிப்பு அர்த்தமுள்ளது. `வயிறார சாதம் சாப்பிட்டுவிட்டுப் போங்களேன்!’ என்கிற விருந்தோம்பல் அது. ஆனால், நமக்கே தெரியாமல், விருந்துக்குப் பயன்படுத்துவது கொஞ்சம்கூட சத்தே இல்லாத உணவை; அதோடு, பல பக்கவிளைவுகளை ஏற்படுத்தும் ஓர் உணவை! உங்களுக்குத் தெரியுமா… சிவப்பு அரிசி சாதாரண அரிசியைவிட ரொம்பவே பெஸ்ட்!

Continue reading

90 நாட்களில் மரம் வளர்ப்பது எப்படி

tree-in-90-days

90 நாட்களில் மரம் வளர்ப்பது எப்படி?
மற்றவர்களைப் போல விதை போட்டு நாற்று வெச்சு மரம் வளர்த்தா எந்தக் காலத்துல நடக்கிறதுன்னு வேகமா வளர்க்கிற வழியைக் கண்டுபிடித்தாராம்.

Continue reading

தாய்ப்பாலுக்கு இணை தேங்காய் பால்

தாய்ப்பாலுக்கு இணைதேங்காய் பால்

🔔🔔🔔🔔🔔🔔🔔🔔🔔
தாய்ப்பாலுக்கு இணை
தேங்காய் பால்
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥

தேங்காய் உபயோகம்
மாரடைப்பில் முடியும்
என்று நிறைய பேர்
கைவிட்டனர்.

உண்மை இதோ,
பச்சை தேங்காயின் பயன்கள்:-
🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥

தேங்காயை பச்சையாக
ஒரு வேலை உணவாக
எடுப்பதினால் ஏற்படும்
நன்மைகள்….

பொதுவாக தேங்காயில்
அதிகமாக கொழுப்பு உள்ளது
என்பது உண்மைதான்….!
ஆனால்,
எப்பொழுது கொழுப்பு
உருவாகுமென்றால், அதை சமைக்கும் போதுதான்…,
தேங்காய் கொழுப்பாய் மாறும்!

👌தேங்காயை உடைத்த
அரைமணி நேரத்திற்க்குள்
பச்சையாக சாப்பிட்டுவிட்டால்,
அதுதான் அமிர்தம்……!

👌சகலவிதமான நோய்களையும்
குணமாகக்கும்……..!

உடம்பில் உள்ள
கெட்ட கொழுப்பு மற்றும்
அழுக்குகளை அகற்றும்…!
இரத்தத்தை சுத்தமாக்கும்!!

👌உடலை உரமாக்கும்……!

👌உச்சிமுதல் பாதம்வரை
உள்ள உருப்புகளை
புதுப்பிக்கும்!

தேங்காய்க்கும் நமக்கும்
உள்ள ஒற்றுமை: –
🚥🚥🚥🚥🚥🚥🚥🚥
நாம்,
அன்னை வயிற்றிலிருந்து
பூமிக்குவர 10 மாதம்…..!

அதுபோல…,
தேங்காய் கருவாகி பூமிக்கு
வர 10 மாதம் ஆகும்….!

இனி முடிந்த அளவு
தேங்காயை பச்சையாக
உண்போம்…!

🕊குறிப்பு:-🕊
**************
🚨தேங்காயை குருமா
வைத்து சமைத்து உண்டால்
கெட்ட கொழுப்பாக
(கொலஸ்ட்ரால்) மாறிவிடும்.
👌சமைக்காமல் அப்படியே
உண்டால் நல்ல கொழுப்பு
(கொலஸ்ட்ரால்)…..!

👌தேங்காயை துருவி சிறிது
நாட்டு சர்க்கரை சேர்த்து
குழந்தைகளுக்கு மாலை
சிற்றுண்டியாக அளியுங்கள்!
அவ்வளவு ஆரோகியம்…!!

👌பழங்காலத்தில், இறக்கும்
தருவாயில் இருக்கும்
நபர்களுக்கு தேங்காய் பால்
கொடுத்து, வாழ்நாட்களை
நீட்டிப்பு செய்துள்ளார்கள்!
ஆனால் இப்போது,
மாட்டு பால் ஊற்றி
துக்கத்தில் ஆழ்கிறார்கள்..!

👌தாய்ப்பாலுக்கு மாற்றாக,
தேங்காய் பாலை
குழந்தைகளுக்கு கொடுத்து
காப்பாற்றி இருக்கிறார்கள்!

🚨ஆனல் இப்போது,
இரசாயண கலவையுடன்
பாக்கெட் பால்……🤔……?

👌காலையில் தேங்காயை
துருவி, அதனை அரைத்து
பாலெடுத்து அதனுடன்
நாட்டுச் சர்க்கரை அல்லது
கருப்பட்டி அல்லது தேன்
சேர்த்து, (பாக்கட் பாலை
தவிர்த்து விட்டு), அதற்கு
பதிலாக தந்து பாருங்கள்
ஆரோகியத்தை………!

👌தாய்ப்பாலில் இருக்கும்
மோனோலாரின் சக்தி
தேங்காயை தவிர
வேரெதிலும் இல்லை….!!
🔔🔔🔔🔔🔔🔔🔔🔔🔔
பகிர்ந்து கொள்ளுங்கள்,
மக்கள் அரிந்து கொள்ளட்டும்!

நன்றி 🙏🙏🙏.

வயலில் மழைநீர் சேகரிப்பில் வெற்றிக்கதை

வயலில் மழைநீர் சேகரிப்பில் வெற்றிக்கதை

எனது பெயர் ரகுபதி.என் அப்பா விவசாயத்தைக் கவனித்து வருகிறார்.

திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறையில் கடந்த 31.7.2017 இரவு 2 இஞ்ச் மழை பெய்தது.

மழைநீர் சேகரிப்பு அமைப்பு அமைக்காததால் என் வயலைச் சுற்றி அமைந்த இடங்களில் வயல்களில் மழைநீர் தேங்காமல் ,பயனில்லாமல் ஓடையில் கலந்து சென்றுவிட்டது.

திரு.பிரிட்டோராஜ் அவர்களின் ஆலோசனைப்படி எனது ஒவ்வொரு வயலிலும் ,சரிவின் குறுக்கே அடிப்பகுதியில் Jcb இயந்திரம் மூலம் 30*3*2 அடிகள் கொண்ட குழி எடுத்து தோண்டிய மண்ணை குழியின் கீழ் உள்ள வரப்பின் மேல் போட்டுவிட்டேன்.அனைத்து வயலிலும் அமைத்தேன். 4.5 ஏக்கருக்கு குழி எடுக்க ரூ.24000 செலவானது.இதில் 6000அடி நீளமுள்ள குழி தோண்டப்பட்டது. இந்த ஒரு நாள் மழையில்
இக்குழிகளில் மொத்தமாக சுமார் 9.3 லட்சம் லிட் நீர் சேமிக்கப்பட்டது. இது 60*60*10 அடி அளவுள்ள ஒரு பண்ணைக்குட்டையின் கொள்ளளவாகும்.

ஆரம்பத்தில் இந்த மாதிரி வயலில், மழைநீர்சேகரிப்பில் ஆர்வமின்றியும் இடம் வீணாகிறதே என கவலைப்பட்ட என் அப்பாவிற்கு இக்குழி எடுத்து வரப்பமைக்கும் திட்டத்தால் இரட்டைப் பலன் கிடைத்தது குறித்து பெரு மகிழ்ச்சி.

இம்மாதிரி அமைப்பால் சரிவாக இருக்கும் மலையடிவாரம் முதல் அனைத்து வகை மண் உள்ள அனைத்து தமிழகப் பகுதிகளுக்கும் தென்னை மற்றும் தோட்டக்கலைப் பயிர்களுக்கிடையேயும் மானாவாரி நிலங்களிலும் அமைக்க ஏற்ற, குறைந்த செலவில் அருமையான திட்டம்.கிணறுகளிலும் போரிலும் நீர் பெருமளவு உயர அருமையான அமைப்பு.

மகிழ்ச்சி.

காட்டுப் பன்றியிடம் இருந்து பயிர்களை காக்கும் வழிகள்

காட்டுப் பன்றியிடம் இருந்து பயிர்களை காக்கும் வழிகள் wild pig
காட்டுப் பன்றியிடம் இருந்து பயிர்களை காக்கும் வழிகள் !!

🐖 காட்டுப் பகுதிகளை ஒட்டியுள்ள விவசாய நிலங்களில் காட்டுப் பன்றி போன்ற வனவிலங்குகளினால் ஏற்படும் சேதம் அதிகமாக இருக்கும்.

🐷 இவைகள், காட்டில் உள்ள இயற்கையான உணவைக் காட்டிலும், நெல், சோளம், மக்காச் சோளம், பயறு வகைகள், போன்றவைகளை அதிக அளவில் நாடுகின்றன.

🐖 காட்டுப் பன்றிகள், பயிர்களை உண்பதை விட அவற்றை அதிக அளவில் சேதம் செய்கிறது.

🐷 பெரும்பாலும், இவைகள் மாலை மற்றும் விடியற்காலை வேளைகளில் வெளியே செல்லும்.

🐖 காட்டுப் பன்றிகள் இந்திய வனவிலங்கு பாதுகாப்புச் சட்டத்தில் பட்டியலில் இடம் பெற்றுள்ளதால் இவற்றைக் கொல்வது தண்டனைக்குரிய குற்றமாகக் கருதப்படுகிறது.

🐷 எனவே, இவற்றை தாக்காமல், அவைகளிடம் இருந்து பயிர்களைக் காக்க சில வழிகளை மேற்கொள்ளலாம்.

பாரம்பரிய வழிமுறை :

🐖 இவைகளுக்கு மோப்பத்திறன் அதிகம் உள்ளதால் பயிர்களை எளிதில் கண்டுபிடித்து விடுகிறது.

🐷 எனவே விவசாயிகள் முடிதிருத்தும் கடையிலிருந்து மனித முடிகளை வாங்கி பயிர்களைச் சுற்றி வேலிப் போல், மெலிதாக கோடுபோல் பரப்பி விட வேண்டும்.

🐖 இதனால் காட்டுப்பன்றிகள் அந்த இடத்தை நுகரும் போது, இந்த மனித முடிகள் பன்றிகளுக்கு எரிச்சலை உருவாக்கும்.

🐷 இதன் மூலம் அவை பாதிப்புக்குள்ளாகி, அபாயக் குரல் எழுப்பும். இதனால் மற்ற காட்டுப் பன்றிகளும் சேர்ந்து விரட்டப்படும்.

வரப்புகளில் ஆமணக்கு பயிரிடுதல் :

🐖 நெல், சோளம் போன்ற பயிர்கள் பயிரிட்டு, வரப்பினைச் சுற்றி 4 வரிக்கு ஆமணக்கு பயிரிட வேண்டும்.

🐷 ஏனெனில் ஆமணக்கு வாசம் மற்ற பயிரின் வாசத்தை மறைத்துவிடும்.

🐖 மேலும் ஆமணக்கில் அதிக அளவு ஆல்காய்டுகள் இருப்பதாலும், அவை சுவையின்றி இருப்பதாலும், காட்டுப் பன்றிகளுக்கு பிடிக்காது

வாங்க பதநீர் குடிக்கலாம்

வாங்க பதநீர் குடிக்கலாம்

வாங்க பதநீர் குடிக்கலாம் யார் கிட்டயும் சண்டை சச்சரவு இல்லாமல் இருக்கலாம் நமக்கு தெரியும் நாம் உண்ணும் உணவு 70% அதிகமாக மூளையின் செயல்பாட்டிற்கு தான் செலவாகிறது என்று,நவீன அறிவியலும் இதை தான் சொல்கிறது

Continue reading