Category: Organic Agriculture

இயற்கை முறை பயிர் சாகுபடி

இயற்கை முறை பயிர் சாகுபடி natural-farming-agriwiki

நோய்க் கிருமிகளைகட்டுப்படுத்தும் இயற்கை முறை பயிர் சாகுபடி
பயிர்களுக்கு இயற்கை சார்ந்த நோய் நிர்வாக முறைகளைக் கையாளுவதன் மூலம் பயிர்களைத் தாக்கும் கிருமிகள், நோய்களைக் கட்டுப்படுத்தி, சுற்றுச்சூழலுக்கு தீங்கில்லாத, நஞ்சில்லாத விளைபொருள்களை சாகுபடி செய்யலாம்.

Continue reading

கால்கிலோ விதையில் நான்கு டன் அறுவடை

கால்கிலோ விதையில் நான்கு டன் அறுவடை

கால்கிலோ விதையில் நான்கு டன் அறுவடை: இவரது தொழில் நுட்பத்தை இயற்கை விவசாயிகள் மட்டுமல்லாது இரசாயன விவசாயிகளும் பின்பற்றுகின்றனர். தமிழகத்தில் பல்வேறு பகுதிகளிலும், ஆந்திர மாநிலத்திலும் கூட ஒற்றை நாற்று நடவு நுட்பம் பரவியுள்ளது. தற்போது ஆலங்குடி பெருமாள் அவர்கள் கால் கிலோ விதை நெல்லைப் பயன்படுத்தி நிறைவான மகசூல் கிடைக்கும்படி ஒற்றை நாற்று நடவு முறையை மேலும் மேம்படுத்தியுள்ளார். நம்முடன் பெருமாள் அவர்கள் பகிர்ந்துகொண்ட தொழில் நுட்பங்களையும் அவரது அனுபவங்களையும் அவரது மொழியிலேயே விவசாயிகளுடன் பகிர்ந்து கொள்கிறோம்.

Continue reading

இயற்கை முறையில் கத்தரி சாகுபடி

கத்தரியில் புழுக்களற்ற காய்கள் brinjal-eggplant-agriwiki

இயற்கை முறையில் கத்தரி சாகுபடி

😥 நம் அன்றாட உணவில் அதிகமாக பயன்படுத்தும் காய்கறிகளில் முதன்மை யானது கத்தரி. இதில் பல வகை உண்டு.

😈சாதாரணமாக தை .சித்திரை மற்றும் ஆடி ஆகிய பட்டத்தில் நடவு செய்கின்றனர்.

🐰முப்பது நாள் நாற்று நடலாம். நாற்றங்கால் ல் தொழு உரம் அதிகமாக இடுவதன் மூலம் நீளமான வேர்கள்.விரைவில் நாற்று துளிர் விடும்.

Continue reading

Important tips

தொடர்ந்து இரண்டு அல்லது மூன்று முறை (அடர்த்தியாக)சோளம் விதைத்தால் கோரை வருவதில்லை.

சோளம் விதைத்த பூமியில் மஞ்சள் நடவு செய்து பாருங்க மகசூல் அதிகம் இருக்கும்.

கம்பு விதைத்த பூமியில் வாழை நடவு செய்து பாருங்க வாழை மகசூல் அதிகம் இருக்கிறது.

கம்புபோட்ட வயலில் கடலையும் ,கடலலைபோட்ட வயலில் கம்பும் ,பயிரிட்டால் விளைச்சல் அதிகமாக இருக்கும்.

யூரியாவுக்கு பதிலா மாட்டு கோமியம்
டிஏபி க்கு பதிலா ஜீவாமிர்தம்,அமுதகரைசல்
பொட்டாஷ்க்கு பதிலா அடுப்பு சாம்பல்
தலைசத்தை பயிருக்கு இழுத்துகொடுக்க பலதானியம், கொழுஞ்சி விதைப்பு
ஆல் 19 க்கு பதிலா பஞ்சகவ்யா
பயிர் ஊக்கிக்கும் பஞ்சகவ்யா

பூச்சிகொல்லிக்கு பதிலா சிட்டுக்கு குருவி,கரிச்சாங்குருவி, காகம், தேன்சிட்டு, பல்லி, பூரான், தேள், மயில், பாம்பு
பூச்சி விரட்டிக்கு வேப்ப எண்ணை, புங்க எண்ணை
மகரந்த சேர்க்கைக்கு தேன்பூச்சி

பார்த்தீனியா விஷசெடியை அழிக்க நாம் சாப்பாட்டுக்கு பயன்படுத்தும் கல் உப்பு
களைக்கொல்லிக்கு பதிலா மாட்டு கோமியம்

ஏழு அடி ஆழத்தில் மண்ணில் இருக்கும் சத்துக்களை மேலே எடுத்து கொண்டுவர மண்புழு.
பூமியை காற்றோட்டத்தை உருவாக்க கரையான், எலி

நாட்டுக் கோழி முட்டைய பாதுகாத்து வைக்க சுலபமான வழி இருக்கு.
மண் பானையில பாதி அளவுக்கு அடுப்புச் சாம்பல் போட்டு நிரப்புங்க. அதுக்குள்ள கோழி முட்டைகளை அடுக்கி வைங்க. இப்படி செஞ்சா ஒருமாசம் வரைக்கும் கூட முட்டை கெட்டுப் போகாம இருக்கும்.

மா, கொய்யா, சப்போட்டா பழத் தோட்டங்கள்ல அணிளோட நடமாட்டம் அதிகமாக இருக்கும். அணில்கள விரட்ட ஒரு யோசனை சொல்றேன் கேட்டுக்குங்க. ஒரு கைப்பிடி பூண்டு எடுத்து அரைச்சுக்குங்க. அதை நாலு லிட்டர் தண்ணியில கலந்து பழ மரத்து மேல தெளிங்க. பூண்டு வாசனையை கண்ட அணில்கள் தலைத்தெறிக்க ஓடிபோயிடும். பழத் தோட்டமும் பாதிப்பு இல்லாம இருக்கும்.

தென்ன மரம் அதிகம் காய் காய்க்க, ஒரு யுக்தியை செஞ்சிகிட்டு இருக்காங்க ஒரிசா மாநில விவசாயிங்க. அதாவது தென்னம் பாளையில ஒரு செங்கல்லைக் கட்டித் தொங்க விடறாங்க. இதனால பாளையில இருக்குற குரும்பைகள் கொட்டாம குலை குலையா தேங்காய் காய்க்குதாம்.

அவரையில் இருக்கும் பெரிய பிரச்னையே, காய் துளைப்பான் நோய் தான். இதை கட்டுப்படுத்த, வேப்ப எண்ணெயை தெளிக்க வேண்டும். வாரத்திற்கு ஒரு மணி நேரம் தண்ணீர் பாய்ச்ச வேண்டும்

வாகை மரம் வரட்சி தாங்கி வளரக்கூடியது.

கொழிஞ்சியை பிடுங்கி காய்காத தென்னை மரத்தில் பாளைகளுக்கு இடையில் வைத்தால் காய் நன்றாக பிடிக்கும்.
மாட்டு உரம் மறுதாம்புக்கு , ஆட்டு உரம் அன்னைக்கே பயன்படும்.

பலாப்பழத்தின் காம்புக்கு அருகில் உள்ள சிறு முட்களை எண்ணி ஆறாலே பெருக்கி ஐந்தால் வகுக்க பலாப்பழத்தினுள் உள்ள சுளைகளின் எண்ணிக்கையை அறியலாம் !

தாமரை இலையை கரையான் அரிப்பதில்லை.
தொழுஉரத்தை நீர் பாய்ச்சும்முன் போட்டு பிறகு பக்குவமான ஈரத்தில் உழவு செய்தால் கட்டிகள் குறையும்.

பயிர் சுழற்சி Crop rotation

பயிர் சுழற்சி Crop rotation benefits-of-rotation

பயிர் சுழற்சி Crop rotation: தொடர்ந்து ஒரே வகையான பயிர்கள் சாகுபடி செய்யும்போது சத்துக்கள் குறைபாடு ஏற்படும் அதை நிவர்த்தி செய்யத்தான் பயிற்சுழற்சி முறையை பின்பற்றுகிறோம்.

Continue reading

அமிர்தகரைசல்

அமிர்தகரைசல்

அமிர்தகரைசல் தேவையான பொருட்கள்

🍯 நாட்டுப்பசு சாணம் – 10 கிலோ

🍯 நாட்டுப்பசு கோமையம் – 10 லிட்டர்

🍯 கருப்பட்டி (அ) கருப்பு வெல்லம் – 250 கிராம்

🍯 தண்ணீர் – 200 லிட்டர்

தயாரிக்கும் முறை

🍯 முதலில் சாணம் மற்றும் நாட்டுப்பசு கோமையம் (பசு சாணம் புதியதாக இருந்தல் அவசியம், கோமையம் பழையதாக இருந்தால் வீரியம் அதிகமாக இருக்கும்) இவற்றை ஒரு வாளியில் (அ) ஏதாவது ஒரு கலனில் எடுத்துக் கொள்ள வேண்டும்.

🍯 அதில் குறிப்பிட்ட அளவு வெல்லம் மற்றும் தண்ணீர் ஆகியவற்றை சேர்க்க வேண்டும்.

🍯 இந்த கலவையை 24 மணி நேரம் நிழலான இடத்தில் வைக்க வேண்டும். இவ்வாறு தயாரிக்கப்பட்ட கரைசலே அமிர்த கரைசல் ஆகும்.

🍯 ஒரு பங்கு அமுதக்கரைசலுடன் 10 பங்கு தண்ணீர் சேர்த்துப் பயிர்களுக்குத் தெளிக்கலாம். வாய்க்கால் நீரிலும் கலந்து விடலாம்.

நன்மைகள்

🍯 இதை நிலத்தில் தெளித்ததும், 24 மணி நேரத்தில் நுண்ணுயிரிகள் பெருகும்.

🍯 பயிர்கள் நோய், நொடியில்லாமல் வளர உதவும்.

🍯 பொதுவாக 15 நாட்களுக்கு ஒரு தடவை இந்தக் கரைசலைக் கொடுக்கலாம். பயிர்கள் மிகவும் வாட்டமாக காணப்பட்டால் வாரம் ஒரு முறை கூட கொடுக்கலாம்.

🍯 தண்ணீர் பாய்ச்சும் போதெல்லாம் பாசன நீருடன் கலந்துவிடலாம். இதனால் பயிர்களின் வளர்ச்சி சீராக இருக்கும்.

வறட்சியை சமாளிக்கும் சுழற்சி முறை சாகுபடி

வறட்சியை சமாளிக்கும் சுழற்சி முறை சாகுபடி

வறட்சியை சமாளிக்கும் சுழற்சி முறை சாகுபடி
விவசாயிகள் தற்பொழுது நிலவி வருகின்ற வறட்சியை சமாளித்து வெற்றியடைய ஒரே மாதிரியான பயிரை சாகுபடி செய்வதைத் தவிர்த்து, சுழற்சி முறையில் பயிர்களைத் தேர்வு செய்ய வேண்டும்.

Continue reading