அன்பு விவசாய சொந்தங்களே
தற்போது தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் இருக்கவேண்டிய அதிகாலைப் பனியின் அளவு மிகவும் குறைவாக உள்ளது.இது வருத்தமளிக்கக்கூடிய நிகழ்வு.
எதிர்வரும் கோடையின் தாக்கம் அதிகமிருக்கும் என்பதற்கான அடையாளம்.
நிலத்தடி நீரீனை அளவாகப் பயன்படுத்துவது ரும் வறட்சி மாதங்களில் ஓரளவு தண்ணீர் பற்றாக்குறையைத் தீர்க்கும்.
விவசாயத்தில் இப்போதிருந்தே பயிருக்கான தினசரி தண்ணீர்த் தேவை என்னவென அறிந்து காலை, மாலை வேளைகளில் பிரித்துக் கொடுத்து பாசனம் செய்வது நல்ல பலன்தரும்.
பல்வேறு வகையான மூடாக்கு அமைத்து பாசனம் செய்வது, கொடுக்கும் தண்ணீர் வேர் வழி சென்று உறுதியாக செடியின் வளர்ச்சிக்கு உதவ வாய்ப்பாகும்.
சொட்டுநீர் பாசனம் அதிலும் சொட்டுவான்(Dripper) அமைத்து பாசனம் செய்வது சிறப்பு. மேலும் விழும் சொட்டுக்களையும் பூமியில் ஒரு அடி ஆழக்குழி அமைத்து அதில் விழவைப்பது தென்னை,தோட்டக்கலைப் பயிர்களுக்கு அவசியம்.
தெளிப்புநீர் பாசனத்தைத் தவிருங்கள். வாய்க்கால் வழிப் பாசனத்தைத் தவிர்த்து குறைந்தபட்சம் வாய்மடை வரையிலாவது குழாய் அமைத்து நீரீனைக் கடத்துவோம்.
தற்போது நிலத்தடி நீர் நிறைய இருப்பது போல் தோன்றினாலும் வற்றிப்போக நிறைய வாய்ப்புள்ளது.கவனம்.
பிரிட்டோராஜ்
வேளாண் பொறியாளர்
26.12.2017.