ஐந்திலை கரைசல்

ஐந்திலை கரைசல் #

வெப்பமண்டலப் பகுதிகளில் உள்ள செடிகளுக்கு ஐந்திலை கரைசல் பரிந்துரைக்கப்பட்டுள்ளது #

 

தேவையான பொருட்கள் : #

மாட்டு சிறுநீர்   மற்றும்  கீழ்கண்ட இலைகள் 

1.வேம்பு(அசாடிரக்ட்டா இன்டிகா)
2.எருக்கம் (கேலோடிராபிஸ்)
3.கொலின்ஜி (டெப்ரோசியா பர்ப்யூரியா)
4.நொச்சி (விட்டெக்ஸ் நெகுண்டோ)
5.ஊமத்தை (டட்டுரா மிட்டல்)
6.காட்டாமணக்கு (ஜட்ரோபா கர்கஸ்)
7.அடாதோடா (அடத்தோடா வேசிகா)
8.புங்கம் (பொங்கேமியா பின்னட்டா)

மேற்கூறப்பட்டதில் ஏதாவது 5 இலைகளைப் பயன்படுத்தலாம்.

பயன்: #

இதனை பூச்சி மற்றும் நோய் தாக்குதலுக்கு எதிராக செயலாற்றி இயக்கியாகப் பயன்படுகின்றது.

ஐந்திலை கரைசல் செய்யும் முறை: #

தாவர வடிசாரை தயாரிக்க தனியாக மாட்டு சிறுநீர் 1:1 விகிதத்தில் (1கிலோ நறுக்கிய இலைகள் – 1 லிட்டர் மாட்டு நீரில்) தழைகளை 10 நாட்களுக்கு முக்கி வைக்கவும்.

எப்படி பயன்படுத்துவது: #

வடிகட்டிய கரைசலை இயற்கை பூச்சி விரட்டியாக 10 லிட் டேங்கிற்கு 9 லிட் தண்ணீருடன் 1 லிட் கலந்து பயிர்களுக்குத் தெளிக்கலாம்.

Powered by BetterDocs

Proudly powered by WordPress