குமுட்டிக்காய் சோற்றுக் கற்றாழை கரைசல்

மண்ணில் தேங்கியுள்ள வைரஸ் மற்றும் புழுக்கள் வண்டுகளை அழிக்கும் ஒரு இயற்கை கரைசல்:

தேவையான பொருட்கள்: #

குமுட்டிக்காய் – 10 எண்கள்
சோற்றுக் கற்றாழை – 15 கிலோ
மாட்டுக் கோமியம். -15 லிட்டர்
தண்ணீர். – 170 லிட்டர்

செய்யும் முறை: #

200 லிட்டர் டிரம்மில் உள்ள 170 லிட்டர் தண்ணீருடன் 15 லிட்டர் கோமியம் உடன் நன்கு அரைக்கப்பட்ட சோற்றுக்கற்றாழை 15 கிலோவுடன் 10 எண்ணிக்கையிலான ஆற்று குமட்டி காயை அரைத்து கலந்து, ஒரு நாள் ஊறவைத்து, பின்பு பாசன நீருடன் தரைவழி அனுப்பலாம்.

பயன்கள்: #

இதனால் மண்ணில் சிறிது ஆழத்தில் படிந்துள்ள வைரஸ் கிருமிகள் , பயிர்களை தாக்கும் பல்வேறு வகையான வேர்ப்புழு சாணிப் புழு மற்றும் வண்டுகளை அழிக்க பயன்படுத்தலாம்.

எப்படி பயன்படுத்துவது? #

15 நாட்களுக்கு ஒரு முறை அல்லது மாதம் ஒரு முறை இப் பொருட்கள் கிடைக்கும் அளவை பொருத்து பயன்படுத்தலாம்.

எந்த பயிர்களுக்கு தெளிப்பது? #

பூமிக்கடியில் விளையும் மரவள்ளி, நிலக்கடலை, வெங்காயம் ,உருளைக்கிழங்கு, பீட்ரூட், கேரட் போன்ற பயிர்களுக்கு முக்கியமாக பயன்படுத்தலாம்.

Powered by BetterDocs

Proudly powered by WordPress