அக்னி அஸ்திரம்

அக்னிஅஸ்திரம், பெயருக்கேற்றார் போல் அக்னியாய்,பயிர்களை தாக்கும் பூச்சிகளையும் புழுக்களையும் அழித்து, அவைகளால் உண்டாகும் அழிவுகளை தீர்க்கும் அஸ்திரமாகவும் செயல்படுகிறது.

தேவையான பொருட்கள் :
1. வேப்பிலை. — 5 கிலோ
2.புகையிலை — அரைகிலோ
3.பச்சை மிளகாய் — அரைகிலோ
4. பூண்டு — அரைகிலோ.
5. கோமியம் — 10 லிட்டர்

செய்முறை
1. பூண்டு, பச்சைமிளகாயை விழுதாக அரைத்து கொள்ளவும்.
2. புகையிலையை சிறு, சிறு துண்டுகளாக நறுக்கி, வேப்பிலையுடன் சேர்த்து அரைக்கவும்.
3. அரைத்த விழுதுகளை, கோமியத்தில் இட்டு கரைத்து, விறகடுப்பில் ஏற்றி கொதிக்க விடவும்.

4. கலவை நன்கு கொதிக்க ஆரம்பித்ததும் 10 நிமிடங்கள் அதே கொதிநிலையில் வைத்து, பின் அடுப்பின் தணலை முழுவதுமாக குறைக்கவும்.
5. அரை மணிநேரம் கழித்து, மீண்டும் தணலை கூட்டி கொதிக்கவிடவும்.
இந்த செயல்முறையை தொடர்ந்து 4 முறை செய்யவும்.
6. நான்கு முறை கொதித்த பின்னர், அடுப்பிலிருந்து இறக்கி, பாத்திரத்தின் வாயை பருத்தி துணியால் கட்டி, நிழலில் 48 மணிநேரம் வைக்கவும்.
7. இரண்டு நாட்கள் கழித்து, மெல்லிய பருத்தி துணியில் வடிகட்டி பயன்படுத்தவும்.
8. கைபடாமல், கண்ணாடி குடுவையில் சேமிக்கும்போது, மூன்று மாதங்கள் வரை இருப்பு வைத்து பயன்படுத்தலாம்.

பயன்படுத்தும் அளவு

எந்த பயிருக்கும்
நடவு செய்து 15 நாட்களுக்குள்
10 லிட்டர் தண்ணீருக்கு — 300 மில்லி
15 நாட்களுக்கு மேல்
10 லிட்டர் தண்ணீருக்கு – 500 மில்லி.

பயன்கள்

1. புழுக்கள் மீது படும்போது தண்டுதுளைப்பான், காய்ப்புழு ஆகியவற்றை அழிப்பதோடு மட்டுமல்லாது, தண்டு பகுதியின் உட்புறத்திலுள்ள புழுக்களின் முட்டையையும் கருக செய்கின்றது.
2 . பயிரில் பல புழுக்களும் வந்த பின்னர், தெளிப்பதை காட்டிலும், பூக்கள் வரும் தருணத்தில் தேமோர் கரைசல் அல்லது அரப்புமோர் கரைசல் தெளித்த ஒரு வாரம் முன் மற்றும் கழித்து முன்னெச்சரிக்கையாக அக்னி அஸ்திரம் தெளிக்கும்போது பல்வேறு புழுக்களை உருவாக்கும் பூச்சிகளை விரட்டிவும், பயிர்களை தாக்காத வண்ணம் பாதுகாக்கலாம்.

Powered by BetterDocs

Proudly powered by WordPress