ஒரு மாடு தினம் தருவது 10 கிலோ சாணம்

ஒரு மாடு தினம் தருவது 10 கிலோ சாணம் cow_dung
Agriwiki.in- Learn Share Collaborate

அனைவரின் மனதில் பதிய ஒரு எளிமையான செய்தி தருகிறோம்.

ஒரு மாடு தினம் தருவது 10 கிலோ சாணம், 7 லிட்டர் கோமூத்திரம்.

ஒரு வருடத்தில்  3500 கிலோ சாணம், 2500 லிட்டர் கோமூத்திரம் கிடைக்கும்.

சாணத்தை விட கோமூத்திரத்தில் 50% தழை  சத்து மற்றும் 25% சாம்பல் சத்து அதிகமாக கிடைக்கிறது. ஆகையால்

உடனே கோமூத்திரம் சேகரிக்க ஏற்பாடு செய்யுங்கள்.

தொழு எரு தயாரித்தல்:

15 அடி நீளம், 8 அடி அகலம், 3 அடி ஆழம் உள்ள குழி தேவை.

இதன் மூலம் 5 டன் தொழு எரு தயாரிக்கலாம். நீளம் அகலம் மாறுபட்டாலும், ஆழம் 3 அடி இருப்பது அவசியம். குழியில் முதல் அடுக்காக 3/4அடி உயரத்திற்கு சான கழிவுகளை நிரப்பி, அதன் மீது 3 அங்குலம் மண் பரப்பி விட வேண்டும். இதை முதல் அடுக்காக கொள்ளலாம்.

இது போல் 3 அடுக்குகள் செய்தால் குழி நிரம்பிவிடும்.

பிறகு இதன் மேல் 1 அடி உயரம் மண் போட்டு நீரை தெளித்து மொழுக்கி விடவேண்டும்.
6 மாத காலத்திற்குள் எரு நன்கு மக்கிவிடும்.

100 கிலோ நன்கு மக்கிய தொழு உரத்தில்
500 கிராம் தலை சத்து
300 கிராம் மணி சத்து
500 கிராம் சாம்பல் சத்து உள்ளது.

பெரும்பாலான விவசாயிகள் தொழு உரத்தை மேற்கண்ட முறையில் மக்க வைப்பது இல்லை.
நல்ல முறையில் மக்க வைத்தால்தான் நல்ல பலன் கிடைக்கும்.

உதாரணமாக
சரியான முறையில் பாலில் உரை ஊற்றினால்தான் பால் தயாராகும், பால் திரிந்துபோனால் அதை யாரும் சாப்பிடுவதில்லை.

அதே போல் தொழு எருவை சரியான முறையில் மக்க வைக்காவிட்டால் அது பயனற்று போகும்.
பயிர் என்னும் குழந்தைக்கு திரிந்த பாலுக்கு சமமான மக்காத தொழு உரத்தை கொடுப்பதில் என்ன பயன்?

அதனால் முறையோடு மக்கிய தொழு உரம் தயாரிக்க ஆவண செய்யுங்கள்.

வணக்கதுடன் நன்றி. அசோக்குமார் கார்கூடல்பட்டி