கொசு விரட்டும் தும்பை இலை

கொசு விரட்டும் தும்பை இலை thumbai plant
Agriwiki.in- Learn Share Collaborate
கொசு விரட்டும் தும்பை இலை:

கொசுவினால் பரவும் நோய்களை எவராலும் பட்டியலிட முடியாது. அவ்வளவு நோய்களையும் மனிதர்களிடம் பரப்பும் சத்தி கொசுவிற்கு உண்டு. கிராமங்களில் கொசு விரட்ட தும்பையைப் பயன்படுத்துவது உண்டு.

இன்று சந்தையில் கிடைக்கும் கொசு விரட்டிகள் நிறையப் பேரை ஆஸ்துமா நோயாளியாய் ஆக்கிவிட்டுள்ளது. அதற்கு மாற்றாகப் பின் வரும் முறையை நீங்கள் கையாண்டு பாருங்கள்.

காய்ந்த தும்பையிலை அரை கிலோ, சாம்பிராணி அரை கிலோ அளவில் எடுத்து இரண்டையும் ஒன்றாக அரைத்து வைத்துக் கொள்ளவும். இதில் ஐம்பது கிரம் ஓம உப்பு, ஐம்பது கிராம் பச்சைக் கற்பூரம் ஆகியவற்றைத் தனித்தனியே தூள் செய்து கலந்து வைக்கவும்.

இதனைச் சிறிதளவு நெருப்பிலிட புகை வரும். இப்புகை பட்ட இடமெல்லாம் கொசு நம்மை அண்டாது. நாமும் நலமுடன் இருப்போம்.

தொகுப்பு:- அகத்தியர் ஹெர்பேரியம், ஏற்காடு