மிகவும் பயனுள்ள குறிப்புகள்

மிகவும் பயனுள்ள குறிப்புகள்

1. உடல் சக்தி பெற
இரவு உணவாக வாழைப்பழம் 2, தேங்காய் 1 மூடி சாப்பிட்டு வர உடல் சக்தி பெறும்.

2. முகப்பொலிவிற்கு
உலர்ந்த ரோஜா இதழ்களுடன் சிறிது பன்னீரும் சந்தனமும் அரைத்து முகத்தில் தடவ தோலின் நிறம் பொலிவு பெறும்.

3. முடி உதிர்வதை தவிர்க்க
நன்கு முற்றிய தேங்காயை சிறிது தயிர்விட்டு அரைத்து தலைக்கு தேய்த்துக் குளித்தால் முடி உதிர்வதைத் தவிர்க்கலாம்.

Continue reading

இயற்கை விவசாயம்

இயற்கை விவசாயம் Basics of natural farming

இயற்கை விவசாயம் பற்றி தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும்.

இடுபொருள்களை வெளியிலிருந்து வாங்க முயற்சிக்க வேண்டாம்.

மண் வளமாக இருந்தாலே போதுமானது.

நிறைய தொழு உரம் கொடுங்கள்.
விவசாய கழிவுகளை மண்ணுக்கு கொடுங்கள்.

முடிந்த அளவு ஜீவாமிர்தம் தொடர்ந்து கொடுங்கள்.
இரண்டு போகம் பயிர் செய்யுங்கள்.

அடுத்து ஏதாவதொரு பசுந்தாள் பயிரிட்டு பூக்கும் நிலை மடக்கி உழுது விடுங்கள்.
இதுவே போதும்.

பயிர் பாதுகாப்பு என்பதும் இயல்பான நடக்கும்.

இலை தழைகளை கோமியத்தில் ஊறவையுங்கள். இது பூச்சி விரட்டியாக பயன்படும்.

நீங்கள் செய்ய வேண்டியது எல்லாம் ஜீவாமிர்தம் தொடர்ந்து கொடுப்பது மட்டுமே.

தேவையான அனைத்து சத்துக்களும் அபரிமிதமாக மண்ணில் உருவாகும்.

மிகவும் எளிமையாக உயிர் உரங்களின் பயன்படுத்தும் முறைகள

மிகவும் எளிமையாக உயிர் உரங்களின் பயன்படுத்தும் முறைகள
#உயிர்உரங்களின் பயன்கள் மற்றும் பயன்படுத்தும் முறைகள், கேள்வி பதில்கள்

Continue reading

விளைநிலங்களை எலிகளிடம் இருந்து பாதுகாக்கும் முறைகள்

விளைநிலங்களை எலிகளிடம் இருந்து பாதுகாக்கும் முறைகள்

விளைநிலங்களை எலிகளிடம் இருந்து பாதுகாக்கும் முறைகள்

விவசாயத்தில் பூச்சி தாக்குதல் என்று எடுத்துக்கொண்டால், அவற்றை கட்டுப்படுத்த பல வழிகள் உள்ளது. ஆனால் தானிய பயிர்களை மட்டுமே அதிகமாக தாக்கும் எலிகளின் நடவடிக்கைகளை கட்டுப்படுத்த விவசாயிகள் அதிகம் கஷ்டப்படுவார்கள். எனவே எலிகளிடம் இருந்து பயிர்களை பாதுகாக்கும் முறைகள் பற்றி பார்ப்போம்.

எலி தாக்குதல் :

🐀 நெல், மக்கசோளம், கரும்பு, பயிறுவகைகள், பருத்தி, கடலை போன்ற வயல்களில் எலிகளின் தாக்குதல் அதிகமாக இருக்கும்.

🐀 எலிகள் தாக்கப்பட்ட பயிர்களின் நாற்றுகள் துண்டுகளாய் வெட்டப்பட்டது போல் காணப்படும்.


🐀 மேலும் நெற்பயிர் வயலின் கரையோரங்களில் ஆரம்ப நாட்களில் சிறுசிறு பொந்துகள் ஆங்காங்கே காணப்படும். வளர்ச்சியடைந்த நெற்பயிர்களையோ அல்லது முதிர்ச்சியடைந்த நெல்மணிகளை கொhpத்து தின்றது போல காணப்படும்.

🐀 பொதுவாக நெல் வயல்களில் உள்ள எலிகள் கருப்பு அல்லது பழுப்பு நிறத்தில் காணப்படும்.

தடுக்கும் முறைகள் :

🐀 வயல்களில் முதலில் உழவுக்கு முன்பு ஆட்டுப்பட்டி அமைத்தால், அந்த வயல்களில் எலி வரவே வராது.

🐀 ஒரே வயலில் தொடர்ந்து தானிய பொருட்களை மட்டும் சாகுபடி செய்யாமல், பு ச்செடிகள், மரவகைகள் என மாற்றி சாகுபடி செய்ய வேண்டும். மேலும் வைக்கோல் போர்களை வயலுக்கு அருகில் அமைக்காமல் இருக்க வேண்டும்.

🐀 பப்பாளிப்பழத்தை சின்ன சின்ன துண்டுகளாக்கி வயலில் ஆங்காங்கே வைத்தால் எலிகள் அதனை விரும்பி உண்ணும். இவை இனிப்பாக இருப்பதால் அவற்றை அதிகமாக உண்டு வயிற்றோட்டம் ஏற்பட்டு இறந்து விடும்.

🐀 வயல்களில் தெர்மோகோல் துண்டுகளை சீனிப்பாகு அல்லது சர்க்கரைப்பாகில் தோய்த்து ஆங்காங்கே வைத்தாலும் எலிகள் அவற்றை உண்டு உணவு செரிக்காமல் இறந்து போகும்.

🐀 வரப்புகளை அவ்வப்போது சீராக்குதல், கோடையில் வரப்பை வெட்டி அழிப்பது, எலி வலைக்குள் வைக்கோல் புகை மூட்டம் செய்து களிமண்ணால் வலை முழுவதும் பு சுவது, எலி பொந்துகள் சுவர் அருகில் இருப்பின் கல், சிமெண்ட், வைத்து பு சுதல் போன்றவைகளை பின்பற்றலாம்.

🐀 இரவு பறவையான ஆந்தைகள் வயல்களில் வந்து அமர்ந்து எலிகளை பிடிப்பதற்கு ஏதுவாக காலிப்பானைகள் அல்லது மண்சட்டிகளை தலைகீழாக கவிழ்த்து வு வடிவில் குச்சிகளை வைத்து அவற்றில் கட்டி வைக்கலாம்.

🐀 நெல் வயலில் எலியை கட்டுப்படுத்த சணப்பு பு வை சிறிய துண்டுகளாக்கி, அதை பரவலாக தூவி விட்டால் அதிலிருந்து வரும் வாடையினால் எலிகள் ஓடி விடும்.

🐀 எலி எண்ணிக்கையை குறைக்க ஒவ்வொரு பயிர் அறுவடைக்குப்பின்பும், எலி வலையைத்தோண்டி எலிகளை அழிக்க வேண்டும்.

🐀 எலிகள் அதிகம் தங்கும் வலைகள் உள்ள இடத்தில், தனி ஆட்கள் கொண்டு அவற்றைப் பிடித்து அழிக்க வேண்டும்.

பாசன நிலத்தை எவ்வாறு தயார் செய்வது

பாசன நிலத்தை எவ்வாறு தயார் செய்வது

1. நெல் அறுவடைக்குப் பின் கரும்பு பயிரிட பாசன நிலத்தை எவ்வாறு தயார் செய்வது?

நன்செய் நிலங்களில் மண்ணினை உழவு செய்து நல்ல மென்மை தன்மையைக்கொண்டு வர இயலாது.

நெல் அறுவடை செய்தபின் நிலத்தை நன்றாக உழுது 40 செ.மீ ஆழமும், 30 செ.மீ அகலமும் கொண்ட பாசன வாய்க்கால் – வடிகால்வாய் அமைக்கவும்.

Continue reading

புண்ணாக்கு

coconut-oil-cake

புண்ணாக்கு என்பது எண்ணெய்வித்து பயிர்களில் உருவாகும் விதையில் இருந்து எண்ணையை பிரித்தெடுத்த கழிவு. எந்த வகை புண்ணாக்கில் என்ன சத்துக்கள் உள்ளன என்பது பற்றி

Continue reading

முருங்கைக்காயும் அதன் சுவையும்..!

முருங்கைக்காயும் அதன் சுவையும் moringa-oleifera-leaves-and-pods
முருங்கைக்காயும் அதன் சுவையும்..!

பொதுவாகவே அசைவப்;பிரியர்;களுக்கு ஞாயிற்றுக்கிழமை என்றாலே அசைவம் சாப்பிட்டால் தான் அந்த நாள் ஞாயிற்றுக்கிழமை போல் உள்ளது என தோன்றும்.

அதேபோன்று பருப்பு சாம்பார் என்றாலே முங்கைக்காயும், முள்ளங்கியும் இருக்க வேண்டும். விருந்து நிகழ்ச்சிக்கு உறவினர்கள் உள்ளார்களோ இல்லையோ, ஆனால் விருந்துக்கு சமைத்த சாம்பரில் முருங்கக்காய் இருக்கனும். அந்த அளவிற்கு சுவை தரக்கூடியது முருங்கக்காய்.

எதற்காக முருங்கையை பற்றி சொல்லறாங்கனு பார்க்கறீங்களா… ஏனா.. இப்போ நாம் முருங்கை சாகுபடி பற்றி தெரிஞ்சுக்க போறோம்.

முருங்கை :

🌱 முருங்கைக்காயுக்கு பொதுவாக ஆண்டு முழுவதுமே சந்தையில் கிராக்கி உண்டு. அதுவும் முகூர்த்த நாட்கள், விரத காலங்களில் சொல்லவே வேண்டியதில்லை. அவ்வளவு உச்சத்திலிருக்கும் முருங்கையின் விலை.

🌿 தற்போதும் முருங்கையின் விலை அப்படி தான் உள்ளது. ஒரு கிலோ குறைந்தபட்சம் 90 ரூபாயிலிருந்து 130 ரூபாய் வரை விற்கப்படுகிறது.

🌱 ஒரு கிலோ ரூ. 10, ரூ. 20 க்கு விற்க்கப்பட்ட காலம் போய், தற்போது ரூ. 90, ரூ. 100-க்கு கூட முருங்கை கிடைக்காத காலமாக உள்ளது.

🌿 இதனால் முருங்கை செடிகளை பயிரிட்டு தற்போது முருங்கை அறுவடை செய்யும் விவசாயிகள் உற்சாகம் அடைந்துள்ளனர். ஆனால் மக்கள்தான் மயக்கமாகியுள்ளனர்.

🌱 இவ்வளவு விலை விற்கும் முருங்கை செடிகளை வளப்பது அவ்வளவு ஒன்றும் கஷ்டம் இல்லை. வீட்டு உபயோகத்திற்கு தேவையான முருங்கை காய்களை பெற வீட்டின் வெளிப்புறத்தில் மூன்று அடி நீளமுடைய இரண்டு முருங்கை குச்சிகளை நட்டு வளர்த்தாலே போதும்.

🌿 முருங்கை கீரை முதல் காய் வரை அனைத்தையும் அந்த மரத்தில் இருந்தே பெற்றுக்கொள்ளலாம்.

🌱 முருங்கையின் பயனை நம் முன்னோர்கள் ஆண்டாண்டு காலமாக அனுபவித்து வந்துள்ளனர். இலைகள், வேர், காய், விதை எண்ணெய் என முருங்கையின் அனைத்து பாகங்களுமே மருத்துவ குணம் கொண்டவை.

நடவு செய்வதற்கு ஏற்ற பருவம் :

🌱 தற்போது முருங்கை செடி அல்லது முருங்கை குச்சிகளை நடவு செய்து வளர்த்துவதற்கு ஏற்ற பருவமாகும்.

🌿 முருங்கை கன்றுகளை 45 செ.மீ நீள, அகல இடைவெளியில் நட்டு வளர்த்தாலே போதும். இதற்கு பாதுகாப்பு அதிகம் தேவைப்படாது. நன்கு வளரும் வரை ஆடு, மாடுகள் கடிக்காமல் பார்த்துக்கொண்டாலே போதும்.

🌱 ஒரு கன்றுக்கு வேப்பம் புண்ணாக்கு 150 கிராம் மற்றும் 1 கிலோ மண்புழு உரம் அல்லது தொழு உரத்தை போட்டு முருங்கை மரக்கன்றை நடவு செய்து தண்ணீர் பாய்ச்ச வேண்டும். மரம் கணுவு விடும் போது ஒரு கணுவு விட்டு அடுத்தகணுவை கிள்ளி விடவேண்டும்.

🌿 முருங்கை மரத்தின் அடியிலேயே கிள்ளி விட்டால் அதிக உயரம் வளராமல், மரம் நிறைய போத்துகள் வெடித்து அதிக பக்ககன்றுகளுடன் இருக்கும். வாரத்திற்கு ஒரு முறை தண்ணீர் ஏற்றினாலே போதும். 6 மாதத்தில் காய் வந்துவிடும்.

🌱 தொடர்ந்து 5 வருடங்கள் வரை காய்வரும். பூச்சி, புழு தென்பட்டால் வேம்பு சார்ந்த மருந்துகள் அடித்தாலே போதும். முருங்கை பூ பூக்கும் சமையத்தில் தண்ணீர் பாய்ச்சுவதை குறைக்க வேண்டும்.

🌱 முருங்கையில் பூ எடுக்கும் சமையத்தில் ஒரு லிட்டர் தண்ணீருக்கு 2 மில்லி நன்கு புளித்த தயிரை செடியின் மீது தெளித்துவிட்டால் பூக்கள் கொட்டாமல் காய் நிறைய பிடிக்கும்.

🌿 அப்பரம் என்னங்க.. இன்றே முருங்கை செடி அல்லது மரத்தை நட்டு வளர்க்க ஆரப்பியுங்கள்.