இயற்கை முறையில் கத்தரி சாகுபடி

கத்தரியில் புழுக்களற்ற காய்கள் brinjal-eggplant-agriwiki

இயற்கை முறையில் கத்தரி சாகுபடி

😥 நம் அன்றாட உணவில் அதிகமாக பயன்படுத்தும் காய்கறிகளில் முதன்மை யானது கத்தரி. இதில் பல வகை உண்டு.

😈சாதாரணமாக தை .சித்திரை மற்றும் ஆடி ஆகிய பட்டத்தில் நடவு செய்கின்றனர்.

🐰முப்பது நாள் நாற்று நடலாம். நாற்றங்கால் ல் தொழு உரம் அதிகமாக இடுவதன் மூலம் நீளமான வேர்கள்.விரைவில் நாற்று துளிர் விடும்.

Continue reading

சிவப்பு அரிசி சிறப்பு

red rice

*சிவப்பு அரிசி சிறப்பு?*
`சாப்பிட்டுட்டுப் போங்க!’ என்கிற தமிழர்களின் உபசரிப்பு அர்த்தமுள்ளது. `வயிறார சாதம் சாப்பிட்டுவிட்டுப் போங்களேன்!’ என்கிற விருந்தோம்பல் அது. ஆனால், நமக்கே தெரியாமல், விருந்துக்குப் பயன்படுத்துவது கொஞ்சம்கூட சத்தே இல்லாத உணவை; அதோடு, பல பக்கவிளைவுகளை ஏற்படுத்தும் ஓர் உணவை! உங்களுக்குத் தெரியுமா… சிவப்பு அரிசி சாதாரண அரிசியைவிட ரொம்பவே பெஸ்ட்!

Continue reading

90 நாட்களில் மரம் வளர்ப்பது எப்படி

tree-in-90-days

90 நாட்களில் மரம் வளர்ப்பது எப்படி?
மற்றவர்களைப் போல விதை போட்டு நாற்று வெச்சு மரம் வளர்த்தா எந்தக் காலத்துல நடக்கிறதுன்னு வேகமா வளர்க்கிற வழியைக் கண்டுபிடித்தாராம்.

Continue reading

ஆடுகளில் குடற்புழு நீக்கம்

ஆடுகளில் குடற்புழு நீக்கம் goat-agriwiki

ஆடுகளைத் தாக்கும் நோய்களில் குடற்புழு நோய்கள் மிக முக்கியமானதாக இருப்பதால், ஆடுகளின் உற்பத்தி திறன் குறைவால் ஏற்படும் இழப்பை தவிர்க்க, தகுந்த காலத்தில் ஆடுகளுக்கு குடற்புழு நீக்கம் செய்வது இன்றியமையாதது ஆகும்.

Continue reading

நாட்டுக் கோழிக்கு கரையான் தீவனம்

நாட்டுக் கோழிக்கு கரையான் தீவனம் country-hen-agriwiki

நாட்டுக் கோழிவளர்ப்பவர்களுக்கு கரையான் சிறந்த உணவாக பயன்படுகிறது. கரையான் உற்பத்தி செய்து கோழிக் குஞ்சுகளுக்குத் தீனியாகக் கொடுத்தால், கரையான் சாப்பிட்ட குஞ்சுகள் மற்ற குஞ்சுகளைவிட இருமடங்காக வளர்ச்சியடையும்.

Continue reading

Important tips

தொடர்ந்து இரண்டு அல்லது மூன்று முறை (அடர்த்தியாக)சோளம் விதைத்தால் கோரை வருவதில்லை.

சோளம் விதைத்த பூமியில் மஞ்சள் நடவு செய்து பாருங்க மகசூல் அதிகம் இருக்கும்.

கம்பு விதைத்த பூமியில் வாழை நடவு செய்து பாருங்க வாழை மகசூல் அதிகம் இருக்கிறது.

கம்புபோட்ட வயலில் கடலையும் ,கடலலைபோட்ட வயலில் கம்பும் ,பயிரிட்டால் விளைச்சல் அதிகமாக இருக்கும்.

யூரியாவுக்கு பதிலா மாட்டு கோமியம்
டிஏபி க்கு பதிலா ஜீவாமிர்தம்,அமுதகரைசல்
பொட்டாஷ்க்கு பதிலா அடுப்பு சாம்பல்
தலைசத்தை பயிருக்கு இழுத்துகொடுக்க பலதானியம், கொழுஞ்சி விதைப்பு
ஆல் 19 க்கு பதிலா பஞ்சகவ்யா
பயிர் ஊக்கிக்கும் பஞ்சகவ்யா

பூச்சிகொல்லிக்கு பதிலா சிட்டுக்கு குருவி,கரிச்சாங்குருவி, காகம், தேன்சிட்டு, பல்லி, பூரான், தேள், மயில், பாம்பு
பூச்சி விரட்டிக்கு வேப்ப எண்ணை, புங்க எண்ணை
மகரந்த சேர்க்கைக்கு தேன்பூச்சி

பார்த்தீனியா விஷசெடியை அழிக்க நாம் சாப்பாட்டுக்கு பயன்படுத்தும் கல் உப்பு
களைக்கொல்லிக்கு பதிலா மாட்டு கோமியம்

ஏழு அடி ஆழத்தில் மண்ணில் இருக்கும் சத்துக்களை மேலே எடுத்து கொண்டுவர மண்புழு.
பூமியை காற்றோட்டத்தை உருவாக்க கரையான், எலி

நாட்டுக் கோழி முட்டைய பாதுகாத்து வைக்க சுலபமான வழி இருக்கு.
மண் பானையில பாதி அளவுக்கு அடுப்புச் சாம்பல் போட்டு நிரப்புங்க. அதுக்குள்ள கோழி முட்டைகளை அடுக்கி வைங்க. இப்படி செஞ்சா ஒருமாசம் வரைக்கும் கூட முட்டை கெட்டுப் போகாம இருக்கும்.

மா, கொய்யா, சப்போட்டா பழத் தோட்டங்கள்ல அணிளோட நடமாட்டம் அதிகமாக இருக்கும். அணில்கள விரட்ட ஒரு யோசனை சொல்றேன் கேட்டுக்குங்க. ஒரு கைப்பிடி பூண்டு எடுத்து அரைச்சுக்குங்க. அதை நாலு லிட்டர் தண்ணியில கலந்து பழ மரத்து மேல தெளிங்க. பூண்டு வாசனையை கண்ட அணில்கள் தலைத்தெறிக்க ஓடிபோயிடும். பழத் தோட்டமும் பாதிப்பு இல்லாம இருக்கும்.

தென்ன மரம் அதிகம் காய் காய்க்க, ஒரு யுக்தியை செஞ்சிகிட்டு இருக்காங்க ஒரிசா மாநில விவசாயிங்க. அதாவது தென்னம் பாளையில ஒரு செங்கல்லைக் கட்டித் தொங்க விடறாங்க. இதனால பாளையில இருக்குற குரும்பைகள் கொட்டாம குலை குலையா தேங்காய் காய்க்குதாம்.

அவரையில் இருக்கும் பெரிய பிரச்னையே, காய் துளைப்பான் நோய் தான். இதை கட்டுப்படுத்த, வேப்ப எண்ணெயை தெளிக்க வேண்டும். வாரத்திற்கு ஒரு மணி நேரம் தண்ணீர் பாய்ச்ச வேண்டும்

வாகை மரம் வரட்சி தாங்கி வளரக்கூடியது.

கொழிஞ்சியை பிடுங்கி காய்காத தென்னை மரத்தில் பாளைகளுக்கு இடையில் வைத்தால் காய் நன்றாக பிடிக்கும்.
மாட்டு உரம் மறுதாம்புக்கு , ஆட்டு உரம் அன்னைக்கே பயன்படும்.

பலாப்பழத்தின் காம்புக்கு அருகில் உள்ள சிறு முட்களை எண்ணி ஆறாலே பெருக்கி ஐந்தால் வகுக்க பலாப்பழத்தினுள் உள்ள சுளைகளின் எண்ணிக்கையை அறியலாம் !

தாமரை இலையை கரையான் அரிப்பதில்லை.
தொழுஉரத்தை நீர் பாய்ச்சும்முன் போட்டு பிறகு பக்குவமான ஈரத்தில் உழவு செய்தால் கட்டிகள் குறையும்.