பூச்சிகளை கட்டுப்படுத்தும் முறைகள்

*பூச்சிகளை கட்டுப்படுத்தும் முறைகள் !!*

விவசாயிகளின் பெரிய பிரச்சனையாக இருப்பது பயிர்களில் ஏற்படும் நோய் மற்றும் பூச்சி தாக்குதல்.

இதனால் மகசூல் குறைந்து, அதிக லாபம் பெற முடியாமல் உள்ளனர்.

எனவே பயிர்களில் ஏற்படும் சில நோய்கள் மற்றும் அதற்கான தீர்வுகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

*அசுவணி, கம்பளிப்புழு, நெற்கதிர் நாவாய்ப் பூச்சி* :

🐛 இந்த நோயை கட்டுப்படுத்த ஏக்கருக்கு 200 லிட்டர் தண்ணீரில் 2 கிலோ மிளகாய்த்தூள் கலந்து, கரைத்து வடிகட்டித் தௌpக்க வேண்டும்.

*இலைச் சுருட்டுப் புழு, சாறு உறிஞ்சும் பூச்சி, புரோடீனியா :*

🐛 இதனை தடுக்க 300 லிட்டர் தண்ணீரில் 3 கிலோ வேப்பெண்ணையைக் கலந்து, ஒட்டுதிரவமாக சோப்பு கரைசல் 200 மில்லியும் சேர்த்து தௌpக்க வேண்டும்.

*நெல் குலை நோய் :*

🍂 வேலிக்காத்தான் இலைச்சாறு 20 கிலோவை, 300 லிட்டர் தண்ணீரில் கலந்து பயன்படுத்தலாம்.

*பாக்டீரியா, பூஞ்சாணம் :*

🐛 200 லிட்டர் தண்ணீரில் 10 கிலோ துளசி இலைச்சாறு கலந்து தௌpக்கலாம்.

🐛 200 லிட்டர் தண்ணீரில் 10 கிலோ பப்பாளி இலைச்சாறு கலந்தும் தௌpக்கலாம்.

*சாறு உறிஞ்சும் பூச்சி :*

🐛 இந்த பூச்சியினை கட்டுப்படுத்த 300 லிட்டர் தண்ணீரில் 3 கிலோ அரைத்த சீத்தாப்பழ விதையை கலந்து பயன்படுத்தலாம்.

🐛 மேலும் 300 லிட்டர் தண்ணீரில் 7 கிலோ சீத்தா இலைச்சாறு கலந்து பயன்படுத்தலாம்.

*நெல் இலை சுருட்டுப் புழு :*

🐛 300 லிட்டர் தண்ணீரில் 20 கிலோ நெய்வேலி காட்டாமணிச் சாறு கலந்து தௌpக்க வேண்டும்.

*நெல் தூர் அழுகல், இலை அழுகல் நோய் :*

🍂 பயிர்களில் ஏற்படும் இந்த நோயைத் தடுக்க 300 லிட்டர் தண்ணீரில் 7 கிலோ வேப்பெண்ணெய் கலந்து பயன்படுத்தலாம்.

*நிலக்கடலை தூர் அழுகல் நோய் :*

🍂 பயிர்களில் ஏற்படும் இந்த நோயைத் தடுக்க 300 லிட்டர் தண்ணீரில் 7 கிலோ வேப்பெண்ணெயுடன் ஒரு லிட்டர் சோப்புத் திரவம் கலந்து தௌpக்க வேண்டும்.

*பயறு வகை சாம்பல் நோய்:*

🍂 பயிர்களில் ஏற்படும் இந்த நோயைத் தடுக்க 300 லிட்டர் தண்ணீரில் 7 கிலோ வேப்பெண்ணெயுடன் ஒரு லிட்டர் சோப்புத்திரவம் கலந்து தௌpக்க வேண்டும்.

*தென்னை வாடல் நோய் :*

🍂 இந்த நோயைத் தடுக்க 300 லிட்டர் தண்ணீரில் 6 கிலோ வேப்பம் பிண்ணாக்கு கலந்து, மரத்தைச் சுற்றி இட்டு மண்ணால் மூடிவிட வேண்டும்.

 

காட்டுப் பன்றியிடம் இருந்து பயிர்களை காக்கும் வழிகள்

காட்டுப் பன்றியிடம் இருந்து பயிர்களை காக்கும் வழிகள் wild pig
காட்டுப் பன்றியிடம் இருந்து பயிர்களை காக்கும் வழிகள் !!

🐖 காட்டுப் பகுதிகளை ஒட்டியுள்ள விவசாய நிலங்களில் காட்டுப் பன்றி போன்ற வனவிலங்குகளினால் ஏற்படும் சேதம் அதிகமாக இருக்கும்.

🐷 இவைகள், காட்டில் உள்ள இயற்கையான உணவைக் காட்டிலும், நெல், சோளம், மக்காச் சோளம், பயறு வகைகள், போன்றவைகளை அதிக அளவில் நாடுகின்றன.

🐖 காட்டுப் பன்றிகள், பயிர்களை உண்பதை விட அவற்றை அதிக அளவில் சேதம் செய்கிறது.

🐷 பெரும்பாலும், இவைகள் மாலை மற்றும் விடியற்காலை வேளைகளில் வெளியே செல்லும்.

🐖 காட்டுப் பன்றிகள் இந்திய வனவிலங்கு பாதுகாப்புச் சட்டத்தில் பட்டியலில் இடம் பெற்றுள்ளதால் இவற்றைக் கொல்வது தண்டனைக்குரிய குற்றமாகக் கருதப்படுகிறது.

🐷 எனவே, இவற்றை தாக்காமல், அவைகளிடம் இருந்து பயிர்களைக் காக்க சில வழிகளை மேற்கொள்ளலாம்.

பாரம்பரிய வழிமுறை :

🐖 இவைகளுக்கு மோப்பத்திறன் அதிகம் உள்ளதால் பயிர்களை எளிதில் கண்டுபிடித்து விடுகிறது.

🐷 எனவே விவசாயிகள் முடிதிருத்தும் கடையிலிருந்து மனித முடிகளை வாங்கி பயிர்களைச் சுற்றி வேலிப் போல், மெலிதாக கோடுபோல் பரப்பி விட வேண்டும்.

🐖 இதனால் காட்டுப்பன்றிகள் அந்த இடத்தை நுகரும் போது, இந்த மனித முடிகள் பன்றிகளுக்கு எரிச்சலை உருவாக்கும்.

🐷 இதன் மூலம் அவை பாதிப்புக்குள்ளாகி, அபாயக் குரல் எழுப்பும். இதனால் மற்ற காட்டுப் பன்றிகளும் சேர்ந்து விரட்டப்படும்.

வரப்புகளில் ஆமணக்கு பயிரிடுதல் :

🐖 நெல், சோளம் போன்ற பயிர்கள் பயிரிட்டு, வரப்பினைச் சுற்றி 4 வரிக்கு ஆமணக்கு பயிரிட வேண்டும்.

🐷 ஏனெனில் ஆமணக்கு வாசம் மற்ற பயிரின் வாசத்தை மறைத்துவிடும்.

🐖 மேலும் ஆமணக்கில் அதிக அளவு ஆல்காய்டுகள் இருப்பதாலும், அவை சுவையின்றி இருப்பதாலும், காட்டுப் பன்றிகளுக்கு பிடிக்காது