PARTLY PRECAST REINFORCED BRICK ROOFING

PARTLY PRECAST REINFORCED BRICK ROOFING கூரையின் அடி பகுதி
Agriwiki.in- Learn Share Collaborate

PARTLY PRECAST REINFORCED BRICK ROOFING

 

வீட்டு கூரை அமைப்பின் செலவு குறைய partly precast reinforced brick roofing பயன் படுத்தலாம்.

அனைவருக்கும் வணக்கம்….

சாதாரண சுட்ட செங்ககல்லையும் குறைந்த அளவு கம்பி மற்றும் கான்க்ரீட் கொண்டு சென்றிங் வேலை இல்லாமல் கூரை அமைக்கும் முறையைத்தான் #PARTLY_PRECAST_REINFORCED_BRICK_ROOFING என அழைக்கிறோம்.

இதில் இரண்டு அமைப்புகள் உள்ளது.

1.PARTLY PRE-CAST BEAM
2.PRE-CAST BRICK SLAB

PARTLY PRE-CAST BEAM

முக்கோண வடிவ 8MM ரிங்க்ஸ் மற்றும் மூன்று 1௦ MM கம்பிகளை மெயின் ராடாக கொண்டு 3 அங்குலம் கணத்திலும் 5 அங்குலம் உயரத்திலும் அறையின் அளவுகளுக்கு ஏற்ப நீளத்திலும் mould உதவியுடன் concrete போடப்படுகிறது.

பீம் இன் டாப் ராட் மட்டும் concrete க்கு வெளியே தெரியுமாறு இருக்க வேண்டும்.

படம் பார்க்கவும்…..

ரூபிங் அமைப்பு
ரூபிங் அமைப்பு

PRECAST BRICK SLAB

படத்தில் உள்ளவாறு செங்கல் மட்டம் செய்யப்பட்ட தரையின் மீது அடுக்கப்பட்டு இரண்டு 6MM கம்பிகளை கொண்டு concrete போடப்படுகிறது.கற்க்களுக்கும் கற்க்களுக்கும் இடைவெளி 1.5 அங்குலம் இருக்க வேண்டும்.

 

ஸ்லாபின் அகலம் 1.௦4M ஆகவும் அகலம் ௦.56 M ஆகவும் இருக்க வேண்டும்…

இனி அறையின் அளவுகளுக்கு ஏற்ப பீம் அடுக்கப்பட்டு அதன்மீது பிரிக் ஸ்லாப் வரிசையாக படத்தில் உள்ளபடி அமைக்கப்பட்டு அதன்மீது 2 அங்குலத்திற்கு குறைந்த அளவு கம்பிகளை கொண்டு concrete போடப்படுகிறது……

கூரையின் அடி பகுதி
கூரையின் அடி பகுதி
செங்கல் ஸ்லாப் செய்யும் தோழர்கள்
செங்கல் ஸ்லாப் செய்யும் தோழர்கள்
பீம் மீது ஸ்லாப் பொருத்தப்படுகிறது
பீம் மீது ஸ்லாப் பொருத்தப்படுகிறது
PRECAST BEAM
PRECAST BEAM

கூரையின் அடி பகுதி
கூரையின் அடி பகுதி

இதற்க்கு சென்டரின் வேலை தேவை இல்லை.

கம்பி குறைவு

concrete குறைவு

WETHERING COARSE தேவை இல்லை

சிலிங் பூச்சு வேலை தேவை இல்லை

மற்றும் செங்கல் கொண்டு கூரை அமைப்பதால் கட்டிடம் கொஞ்சம் குளிர்ச்சியாக இருக்கும்

உபயோகமா இருந்தா மறக்காம ஷேர் பண்ணிருங்க நண்பர்களே…..

நன்றி
தொடரும்…
உங்களுடன் நான் ஹரி….