சூடோமோனாஸ் புளோரோசன்ஸ் :
இது ஒரு நன்மை செய்யும் பாக்டீரியா ஆகும். இது தூள் மற்றும் திரவ வடிவில் கிடைக்கிறது. இதன் மூலம் தீமை செய்யும் பல்வேறு பாக்டீரியாக்களும், தீமை செய்யும் பல்வேறு பூஞ்சாணங்களும் கட்டுப்படுத்தப்பட்டு நோய்களிலிருந்து பயிர்களை காக்கிறது.
சூடோமோனாஸ் நெல், கரும்பு, பருத்தி, பயறு வகைகள், நிலக்கடலை, எள், காய்கறிகள், மஞ்சள், வாழை, தென்னை – உட்பட பல்வேறு பயிர்களில் ஏற்படும் இலைப்புள்ளி, இலைக்கருகல், குலைநோய், வாடல்நோய், நாற்றழுகல் மற்றும் கிழங்கு அழுகல் போன்ற பல்வேறு நோய்களை சிறப்பாகக் கட்டுப்படுத்துகிறது.
நோய் உண்டாக்கும் கிருமிகளின் செல்சுவரை கரைக்கும் ‘என்சைம்களை” உற்பத்தி செய்தும், ‘ஹைட்ரஜன் சயனைடு” மற்றும் இரும்புச் சத்தினை தக்க வைக்கும் ‘சிட்ரோபோர்கள” – ஆகியனவற்றை உற்பத்தி செய்தும் நோய்களை அழித்து பயிர்களைக் காக்கிறது. மேலும், தாவர வளர்ச்சி ஊக்கிகளை உற்பத்தி செய்து பயிர் விளைச்சலை அதிகரிக்கிறது.
பயன்படுத்தும் முறை :
ஒரு கிலோ விதைக்கு 4 கிராம் என்ற அளவில் ஆறிய அரிசிக்கஞ்சியுடன் „சூடோமோனாஸ்;… கலந்து பின் விதைக்கலாம்.
ஒரு கிலோ „சூடோமோனாஸ்;… உடன் தேவையான தண்ணீர் கலந்து ஒரு ஏக்கருக்கான நாற்றுக்கள் ஃ கிழங்கு ஃ விதைக் கரனைகளை நனைத்து அரை மணி நேரம் வைத்திருந்து பிறகு நடவு செய்யலாம்.
இலைமேல் தெளிப்பதற்கு ஒரு லிட்டர் தண்ணீருக்கு 5 கிராம் என்ற அளவில் கரைத்து 2 -3 முறை தெளிக்கலாம்.
மேலும், நடவு வயலில் இடுவதற்கு ஏக்கருக்கு 1 முதல் 2 கிலோ ‘ ‘சூடோமோனாஸ்;” – தூளை மட்கிய தொழுஉரத்துடன் கலந்து இடலாம். இதை உயிர் உரத்துடன் கலந்தும் பயன்படுத்தலாம்.
எனவே, இயற்கை விவசாயத்தையும், அங்கக வேளாண்மையும் விரும்பும் விவசாயப்பெருமக்கள் மேற்கண்ட இரண்டு முக்கியமான உயிரியல் மருந்துகளை பல முறைகளில் பயன்படுத்தி, மிகக் குறைந்த செலவில் எண்ணற்ற பலன்களை அடையலாம்.