Tag: மண் வீடு

மண் வீட்டினை கட்டும் முறை

மண் வீட்டினை கட்டும் முறை

கல் வீடு கட்டுவது போன்றே சரியான திட்டமிடலுடன் மண் வீட்டினையும் அமைக்க வேண்டும்.
வீட்டின் முக்கிய அங்கங்கள் :
– அத்திவாரம்
– சுவர்
– கூரை
– தரை

முதலில் சுவர் பற்றிப் பார்ப்போமானால் ஏனையவை சுலபமாக இருக்கும். சுவர் கட்டுவதற்கு முக்கியமானவை
1 – மண்

சாதாரணமாக வயல்கள் தோட்டங்களில் கிடைக்கும் களிமண் மிகவும் சிறந்தது. மேற்பரப்பில் குப்பை கலந்திருந்தால் 2 – 3 சென்ரிமீற்றர் ஆழமான பகுதியை அகற்றிவிட்டுத் தோண்டி எடுக்கலாம். மண்ணிலுள்ள களி (clay) 25 வீதம் அளவில் இருக்க வேண்டும். களித் தன்மை அதிகமாக இருந்தால் மணல் சேர்க்க வேண்டியிருக்கும். களி அதிகமான மண் காயும்போது வெடித்து விடும். சுவர் கட்டும் விதங்களைப் பொறுத்து களியின் அளவு சற்றுக் கூடுதலாக அல்லது குறைவாக இருக்கும்.

Continue reading