Tag: மாற்று கட்டுமானம்

மாற்று கட்டுமானத்தில் கான்க்ரீட் மற்றும் சிமென்டின் பயன்பாடு

எங்களிடம் மண் அல்லது மாற்றுக்கட்டுமானம் பற்றி கேட்கும் போது பேச்சு சிமெண்ட் அல்லது கான்கிரீட் பக்கம் திரும்பும்.நான் கட்டுமான துறையில் பணியாற்றும் போது எனக்குள் எப்போதும் ஒருவிதமான குழப்பம் மட்டும் இருந்தது என்று சொல்ல முடியாது. ஒரு விதமான குற்ற உணர்ச்சியே என்னை உறுத்தியது. ஏதோ தெரிந்தே பாவம் செய்கிற உணர்ச்சி இருந்தது என்று சொன்னால் அது மிகையல்ல. நல்ல வேளை, இப்பொழுதெல்லாம் இதை நினைத்து தூக்கமிழப்பதில்லை.

ஒவ்வொரு புதிய கனவும் மெய்ப்படும் போதும் சரி, அது எதிர்பாராத விளைவுகளையும் நமக்கு பரிசாக தரும். எல்லா புதிய சிந்தனைகளுக்கு ஆரம்பத்தில் எதிர்ப்புகள், கேள்விகள்,கேலிகள் எல்லாம் பரிச்சயமான ஒன்று. இதைத் தாண்டித் தாக்குப் பிடிக்கற சிந்தனைகள் மக்களால் ஏற்கப்பட்டு, கொண்டாடப்பட்டு வாழ்வியலோடு பின்னிப் பிணைந்து விடுகிறன‌

Continue reading

மண் கட்டுமானம்-Rammed earth

மண் கட்டுமானம் Rammed earth

இதுவரைக்கும் CSEB (compressed stabilized mud block) அல்லது SMB (stabilized mud block) என்ற வகை மண்கற்களை பற்றி உங்களிடம் நிறையவே பேசியிருக்கிறேன். இந்த மண் கட்டுமானங்களில் நீங்கள் – Adobe,SMB,Cob மற்றும் Rammed earth ஆகிய வார்த்தைகளை நீங்கள் ஏற்கனவே என் பதிவில் படித்திருப்பீர்கள். இந்தப்பதிவின் நோக்கம் உங்களை Rammed earth பற்றி மீண்டும் மறக்காமல் பரிச்சயப்படுத்துவது.

Continue reading