சுண்ணாம்பு மண் கற்கள்

Agriwiki.in- Learn Share Collaborate

#lime_stebilized_mud_block

#சுண்ணாம்பு_மண்_கற்கள்

செம்மண் மற்றும் சுண்ணாம்பு,கடுக்காய்,நாட்டு சர்க்கரை கொண்டு இரண்டாவது முறை mud blocks போடப்பட்டது.

நேரம் இல்லாமையால் இப்போதுதான் போட முடிந்தது.

இந்த mud ப்ளாக்கிற்கு எல்லோரும் இதுவரை சிமெண்டை பயன்படுத்திதான் கற்கள் போட்டுள்ளனர்.நாங்கள் முழுக்க 10 சதம் சுண்ணாம்பு ,கடுக்காய் தண்ணி,நாட்டு சர்க்கரை தண்ணி கொண்டு மட்டுமே கற்கள் அடித்து உள்ளோம்.

முதல் முறை போட்ட போது மண்ணை சலிக்கவில்லை.அதனால் நினைத்தபடி கற்களின் தரம் வரவில்லை((மண் நீரில் கரையவில்லை ஆனால் எதிர்பார்த்த உறுதி தன்மை இல்லை)).இந்த முறை மண்ணை சலித்து அண்ணன் Elan Cheran உதவியுடனும் ஆலோசனை உடனும் போடப்பட்டு உள்ளது.நன்றினா👍👍

கற்களின் தரத்தை பின்பு பதிவிடுகிறேன்…

நன்றி…
உங்கள் ஹரி…